க்ருஷ்ணார்ச்சுனர்கட்கு உபேந்திரனும் இந்திரனும் உவமையாவர். பூவினம் உள்ளஇடத்தைநாடிச் சுரும்புகள்தொடர்வதுபோல க்ருஷ்ணார்ச்சுனர் தேவிமாருடன் இருக்குமிடத்தை நாடிப் புரமுழுதும் புறப்பட்டதென்க. அவர்களின் அழகைக்கண்டு இவ்வாறு நமக்கு அழகு வாய்க்கவில்லையே யென்று கருதிச் சித்திரம் பெருமூச்சு விடுவதாயிற் றென்க; இனி, ஜநங்களின் உற்சாக மிகுதியை விளக்குவார் 'ஓவியமுமுயிர்ப்பெய்த' என்றாரென்பாருமுண்டு. சோலை யமுனைக்கரையிலுள்ள தென்பது, பிறநூலாற் புலப்படும். (725) 5.- இளவேனிலில் மயில்களித்தல். கொண்டலெழமின்னுடங்கக்கொடுஞ்சாபம் வளைவுறச்செங்கோ பந்தோன்ற, வண்டளவுநறுங்குமிழும்வண்டணிகாந் தளுமலரமலைகடோறும், தண்டரளவருவிவிழத்தையலார் வடிவுதொறுஞ்சாயற்றோகை, கண்டுநமக்கிளவேனில்கார்கால மானதெனக்களிக்குமாலோ. |
(இ-ள்.) சாயல் தோகை - மகளிரின் சாயலையுடைய மயில்கள்,- கொண்டல் எழ- மேகங்களெழுவதையும், மின் நுடங்க - மின்னல் சலித்துத் தோன்றுவதையும், கொடுஞ் சாபம் வளைவுஉற - கொடிய வில் வளைவுபொருந்தி நிற்பதையும், செங் கோபம் தோன்ற - செந்நிறமுள்ள இந்திரகோபப்பூச்சிகள் தோன்றுவதையும், வண் தளவுஉம் நறுங்குமிழ்உம் வண்டு அணி காந்தள்உம் மலர - வளப்பம் பொருந்தியமுல்லையும் நறுமணமுள்ள குமிழமலரும் வண்டுகளாலலங்கரிப்பப் பெற்றகாந்தள்மலரும் மலர்வதையும், மலைகள்தோறும் - மலைகளிலெல்லாம், தண் தரளம்அருவி விழ - குளிர்ந்த முக்தா ஹாரம் அருவி போலவிழுவதையும், தையலார்வடிவுதொறுஉம் கண்டு - மடவாரின் வடவுகளிலெல்லாங்கண்டு, நமக்கு-,இளவேனில் - இளவேனிற் காலமானது, கார்காலம் ஆனது - கார்காலமாயிற்று,என-,களிக்கும்-; (எ-று.)- ஆல் வியப்பைக்குறிக்கும். மடவாரின் கூந்தல் தோற்றம் கொண்டலெழுதலையும், இடை நுடக்கம் மின் நுடங்குதலையும், புருவவளைவு சாபம்வளைவுறுதலையும், இதுழின்தோற்றம் செங்கோபந்தோன்றுதலையும், பற்கள் மூக்கு கைகள் என்ற இவற்றின் மலர்ச்சி தளவுகுமிழ் காந்தள் என்ற இவற்றின் மலர்தலையும், தனங்களில் முத்தமாலை தொங்குவதுமலைகடோறும் அருவிவிழுதலையும் போலுதலால், அவற்றைச் சோலையிற் கண்டமயில்கள், இளவேனிலே நமக்குக் கார்காலத் தோற்றமானதெனக் கருதிக்களிக்குமென்றார்; இது மயக்கவணி. கொண்டலெழுதல் முதலியன, கார்காலத்துக்குஉரியன. கோபம்= இந்திரகோபம்: முதற்குறை. (726) 6.- மகளிர் பூக்கொய்தல். பாராமனகையாமற்பாடாம லாடாமற்பாதஞ்செங்கை சேராமன் முகராகம்வழங்காம லிகழாமற்செவ்வாயூறல் நேராமனிழலதனைநிகழ்த்தாமன் மலர்ந்தழகுநிறைந்தநீழல் ஆராமந்தொறுந்தங்களவயவம்போல் வனகொய்தாரணங்குபோல்[வார.் |
|