| நலத்துடனவன்மனை நண்ணுமெல்லையில் நிலத்திடையென்வயி னீருந்தோன்றுவீர். |
(இ - ள்.) வலத்து - வலிமையினால், உயர் - மிக்க, தட புயம் - பெருமை பெற்ற தோளையுடைய, வருணன்உம்-, குருகுலத்தினில் - குருகுலத்திலே, அயன் வரங்கொண்டு - அயனுடைய விருப்பத்தினால் [பிரமசாபத்தினால்], தோன்றும் - உதிப்பான்: (யான்), நலத்துடன் - சிறப்புடனே, அவன் மனை - அவனுடைய மனைவியாக, நண்ணும் எல்லையில் - (அவனைச்) சேரும்போது, நீரும்-, நிலத்திடை-நிலவுலகத்திலே, என்வயின் - என்னிடத்து, தோன்றுவீர் - புத்திரராகப் பிறப்பீராக; (எ-று.)- இதுவும், அடுத்தகவியும் - கங்கையாள் வசுக்களைத் தேற்றியதைத்தெரிவிக்கும். வரம் - விருப்பம். அயன் வரம் - பிறமனிட்டசாப மென்க. (77) 70. | அஞ்சன்மினும்மைநா னவனிதோயுமுன் எஞ்சவீட்டிடுவனிவ் விறைவன்றன்னையும் நெஞ்சுறத்தந்தைபா னிறத்திநானுமவ் வஞ்சகப்பிறப்பினை மாற்றுவேனென்றாள். |
(இ - ள்.) அஞ்சன்மின் - (பூமியில் எவ்வாறு வசிப்பதென்று) அஞ்சவேண்டா:நான்-, உம்மை-, அவனி தோயும் முன் - பூமியில் படுவதற்கு முன்னமே [பூமியில் நீர்பிறந்தவுடனே], எஞ்ச - உயிரொடுங்கும்படி, வீட்டிடுவன் - இறக்கச்செய்வேன்: இஇறைவன் தன்னைஉம் - பிரபாசனென்கிற தலைமைபெற்ற இவனையும், நெஞ்சு உற -(பிதாவின்) மனத்திற்குப் பொருந்துமாறிருக்க, தந்தைபால் - தந்தையினிடத்தில், நிறுத்தி- நிற்கச்செய்து,- நான்உம்-, அ வஞ்சகம் பிறப்பினை - தீமையால்விளைந்த அந்த(என்னுடைய) மானுடப்பிறவியை, மாற்றுவேன் - போக்கிடுவேன், என்றாள் - என்று கூறினாள்; (எ - று.) எஞ்ச - சாபங் கழியும்படி யெனினுமாம். அஞ்சன்மின் - ஏவற் பன்மை வினைமுற்று. அவனி = அவநீ: காத்தற்கு உரியது: பூமி. (78) 71. | நாலிருவசுக்களு நதிமடந்தைசொற் பாலிருசெவிப்படப் படாதநற்றவம் சாலிருநிலத்திழி தாயையன்புடன் காலிருகரத்தினாற் கசிந்துபோற்றினார். |
(இ - ள்.) நால் இரு வசுக்கள்உம் - வசுக்கள் எண்மரும், நதி மடந்தை - கங்காதேவியின், சொல் பால் - சொல்லமுதம், இரு செவி பட - (தமது) இரண்டுகாதிலே விழ, படாத நல்தவம் சால் - அழியாத சிறந்த தவப்பயன் பொருந்திய,இருநிலத்து இழி - பெரிய பூமியிலே யிழிகின்ற, தாயை - கங்கையாளை, கசிந்து -மனமுருகி, அன்புடன் - அன்போடு, கால் - பாதங்களிலே, இரு கரத்தினால் - (தமது)இரண்டு கைகளினாலும், போற்றினார் - வணங்கினார்கள்;(எ-று.) எப்படிப்பட்டவரும் தவப்பயனைப் பெறுதற்குரிய புண்ணிய பூமி பூதலமே யாதலால், 'படாத நற்றவஞ்சா லிருநிலம்' என்றது. 'படர்ந்தநல்லறம்' என்றும்பாடம். போற்றுதல் - வணங்குதல்: "வந்தித்தல்போற்றல்வணங்கலாகும்" என்றது, பிங்கலந்தை. (79) |