16.-பிரிந்தமகளிர். மாரவசந்தனையகன்றுவயங்குறுவெங்கோடையினான்மறுகியாற்றாது ஆரமளிமதுமலரிலாரவடங் களிற்பனிநீராரச்சேற்றில் ஈரநெடுங்குழலிசையிலியங்கியசா மரக்காற்றிலிளநிலாவிற் பேரழலும்புகுந்ததெனப்பிணங்கினார்தங்கேள்வர்ப்பிரிந்தமாதர். |
(இ-ள்.) தம் கேள்வர் பிரிந்த மாதர் - தம்கணவரைப்பிரிந்த மகளிர்,- மாரவசந்தனை அகன்று - மன்மதனுக்குத் தோழனான வசந்தனை [இளவேனிற் பருவத்தை] நீங்கி, வயங்குஉறு வெம் கோடையினால் - விளங்கித் தோன்றிய கொடியகோடைக்காலத்தினால் [முதுவேனிற்பருவத்தால்], மறுகி - கலங்கி, ஆற்றாது -வெம்மையைத் தாங்கமுடியாமல்,- அமளி ஆர் மது மலரில்[மது மலர் ஆர்அமளியில்]- தேன்கொண்ட பூக்களாலான படுக்கையிலும், ஆரம் வடங்களில்- முத்தாஹாரங்களிலும், பனிநீர் ஆரம் சேற்றில் - பனிநீர்கலந்த சந்தனச்சேற்றிலும், ஈரம்நெடுங் குழல் இசையில் - மனக் கசிவையுண்டாக்கும் பெருமைமிக்க புள்ளாங்குழலிசையிலும், இயங்கிய சாமரம் காற்றில் - சஞ்சரித்தலையுடைய சாமரங்களினின்று வெளிப்படும் காற்றிலும், இளநிலாவில் - தோன்றிய நிலாவிலும், (குளிர்ச்சியேயன்றி), பேர் அழல்உம் - பெரிய அனலின் பிணங்கினார் - மாறுபட்டார்;(எ-று.) கலந்தார்க்குக் குளிர்ந்தே தோன்றும் மலரமளிமுதலியவற்றைக் குறித்து, அவற்றிலும் இக்காலத்தின்வெம்மை புகுந்திட்டது என்று கலந்தவரோடு மாறுபடக்கூறினர் பிரிந்தமகளி ரென்க. (737) 17.- கோடைக்காலத்திற் காற்றில்லாமை. கோடைவெயில்சுடச்சுடமொய்கொளுந்தியிறந் தனபோலக்கொ ண்டல்கோடை, வாடைசிறுதென்றலெனுமாருதங்களெம்மருங்கும் வழக்கமின்றி, ஆடையில்வெண்சாமரத்திலாலவட்டத் தினிலுயிர்ப் பிலழகார்நெற்றி, ஓடைமுகமதகயத்தின்றழைசெவியிற் பல்லிறகி லொளித்தமாதோ. |
(இ-ள்.) கொண்டல் கோடை வாடை சிறு தென்றல் எனும் மாருதங்கள் - கீழ்காற்று மேல்காற்று வடதிசைக்காற்று இளந்தென்றங்காற்று என்கிற நாற்றிசைக்காற்றுக்களுக்கும்,- கோடை வெயில் சுட சுட மெய் கொளுந்தி இறந்தன போல - அக்கோடைக் காலத்து வெயில் மிகச்சுடுதலால்உடல்கொளுத்தப்பட்டு ஒடுங்கின போல, எ மருங்குஉம் - எந்தப்பக்கத்திலும், வழக்கம்இன்றி - இயங்குதல் இல்லாமல்,- ஆடையில் - வஸ்திரத்திலும், வெள் சாமரத்தில் - வெண்ணிறமான சாமரத்திலும், ஆலவட்டத்தினில் - ஆலவட்டத்திலும், உயிர்ப்பில் -சுவாசத்திலும், அழகு ஆர்நெற்றி ஓடைமுகம் மத கயத்தின் தழை செவியில்- அழகுமிக்க நெற்றிப் பட்டத்தை யணிந்த முகத்தையுடையமத யானையினது தழைத்தகாதுகளிலும், பல் இறகில் - பலவகைப்பட்ட பறவை இறகுகளிலும், ஒளித்த -ஒளித்தன; (எ-று.)- மாது, ஓ - ஈற்றசைகள். |