பக்கம் எண் :

காண்டவதகனச் சருக்கம்437

கிய ஆசனத்தில் (அவனை) இருத்த,- குழிந்த பொன் கண்ணினன் - குழிந்துள்ள
பொன் நிறமான கண்களையுடையவனும், அவி மணம் கமழ் வாயன் - அவிசின்
பரிமளம் வீசுகிற வாயை யுடையவனுமான, அந்தணாளன்உம் - அந்த முனிவனும்,
(அவர்களைநோக்கி), 'உந்து வெம் பசி பெரிது - மேன்மேல்வளர்கிற கொடியபசி
(எனக்கு) அதிகமாயிருக்கிறது: வல்லே - விரைவாக, எனக்கு ஓதனம் இடுக -
எனக்குஉணவுதருவீராக, ' என்றான் - என்று வேண்டினான்; (எ-று.)

  வேதிகை - யாகம் முதலிய வைதிகச்சடங்குகளில் இடும்மேடை; இங்கு,
ஓமவேதிகையென்றபடி. வேதிகையுவமை, அவ்விடத்தின் மேன்மையையும்
தூய்மையையும் விளக்கும். பெரும்பசியில் கண்கள்குழிந்து ஆழ்ந்து நிறம்வேறுபடுதல்
இயல்பு. அவி - மந்திர பூர்வகமாக ஓமஞ்செய்யப்படும் நெய்ம்முதலியஉணவு.
'அவிமணங்கமழ்வாயன்' என்றது அக்கினிதேவனுக்கு உரிய அடைமொழி.   (742)

22.- 'வேண்டிய உணவை அளிப்போம்' என்று
அவ்விருவரும் உறுதிமொழி கூறல்.

கரியமேனியரிருவருஞ்செய்யபொற் காயமாமுனியுண்டற்கு
உரியபோனகமிடுதுமிக்கணத்தென வுவகையோடுரைசெய்தார்
அரியவாயினும்வழங்குதற்கேற்றன வல்லவாயினுந்தம்மில்
பெரியவாயினுமதிதிகள்கேட்டன மறுப்பரோபெரியோரே.

     (இ-ள்.) (அதுகேட்டு), கரிய மேனியர் இருவர்உம் - கருநிறமுள்ள
வடிவத்தையுடையவரான கிருஷ்ணார்ச்சுனர்களிரண்டுபேரும், (அம்முனிவனை
நோக்கி), 'செய்ய பொன் காயம் மா முனி - சிவந்த பொன்னிறமான
உடம்பையுடையமகாமுனிவனே! உண்டற்கு உரிய போனகம்- (நீ) உண்ணுதற்கு
உரியதாகும் உணவை,இ கணத்து இடுதும் - இந்தக்ஷணத்திலே தருவோம், என -
என்று, உவகையோடுஉரை செய்தார் - மனமகிழ்ச்சியோடு சொன்னார்கள்; அரிய
ஆயின்உம் - பெறுதற்குஅரியனவானாலும், வழங்குதற்கு ஏற்றன அல்ல
ஆயின்உம் - தருதற்கு இயைந்தனவல்ல வானாலும், ஏற்றன அல்ல ஆயின்உம் -
(தருகிற) தம்மைக்காட்டிலும்பெரியனவானாலும், அதிதிகள் கேட்டன - விருந்தினர்
வேண்டிய பொருள்களை, பெரியோர்-,மறுப்பர்ஓ- இல்லையென்று சொல்வரோ?

     நீ வேண்டும் உணவை வேண்டியவாறே நினக்கு இப்பொழுதே அளிப்போம்
என்று கிருஷ்ணார்ச்சுனர்கள் உறுதிமொழி கூறின ரென்ற சிறப்புப் பொருளை,
பின்னிரண்டடியிற்கூறும் பொதுப்பொருள் கொண்டுவிளங்கியதனால்,
வேற்றுப்பொருள்வைப்பணி. (பெரியோர் அதிதிகள்கேட்ட அரிய வழங்குதலை -
தான்அரிதிற் பெற்ற அமிழ்தமயமான நெல்லிக்கனியை ஒளவைக்கு ஈந்த அதிகமான்
முதலியோரிடத்தும், வழங்குதற்கேற்றனவல்லன வழங்குதலை - தூர்த்தப்பிராமண
வேடங்கொண்டுவந்த சிவபிரானுக்குத் தம் மனைவியையீந்த இயற்பகைநாயனார்
முதலியோரிடத்தும், தம்மிற்பெரிய வழங்குதலை- போர்க்களத்தில் தான்
குற்றுயிராய்க்கிடக்கும்போது முனிவடிவங் கொண்டுவந்த கண்ணபிரானுக்குத்