தனதுபுண்ணியங்களை யீந்தகர்ணன் முதலியோரிடத்துங்காண்க.) இருவரும், கரியமேனிய ராதலால் 'கிருஷ்ணர்' என்று பெயர் பெறுவர். (743) 23.- உடனேஅவ்வந்தணன் தான் இன்னானென்று உண்மை தெரிவித்துக் காண்டவவனத்தைத் தனக்கு இரையாக அளிக்குமாறு வேண்டுதல். அளித்துமென்றசொற்றன்செவிப்படுதலும் பெற்றனன்போலாகி ஒளித்துவந்தனனிருபிறப்பினனலே னுதாசனனென்னாமம் களித்துவண்டிமிர்தொடையலீரெனக்குணாக் காண்டவமெனுங்[கானம் குளித்தருந்துதற்கிடங்கொடானவ்வனங்கொண்டல்வாகனன்காவல். |
இதுமுதல், மூன்று கவிகள் - குளகம். (இ-ள்.) அளித்தும் என்ற சொல் - 'தருவோம்' என்று (அவர்கள்) சொன்னவார்த்தை, தன் செவி படுதலும் - தனது காதிற் புக்கவுடனே, (அக்கினிதேவன்), பெற்றனன் போல் ஆகி - (தான்விரும்பிவந்தபொருளைப்) பெற்றவன்போல் மகிழ்ச்சி கொண்டு, (அவர்களைநோக்கி),-"வண்டு களித்து இமிர் தொடையலீர் - வண்டுகள் (மிகுதியாகத்தேனையுண்டதனாற்) களித்து ஆரவாரிக்கப்பெற்றபூமாலையை யுடையவர்களே! ஒளித்துவந்தனன் - (யான்என்வடிவத்தை) மறைத்துவந்தேன்; இருபிறப்பினன் அலேன் - அந்தணன் அல்லேன்; உதாசனன் என்நாமம் - அக்கினி யென்பது எனது பெயர்; எனக்கு உணா-எனக்கு (இப்பொழுது) உணவாகவேண்டியது, காண்டவம் எனும் கானம் - காண்டவமென்னுங் காடாம்; அ "வனம் - அந்தக் காடு, கொண்டல் வாகனன் காவல் -மேகங்களை வாகனமாக வுடையவனான இந்திரனது பாதுகாப்பிலுள்ளது; குளித்துஅருந்துதற்கு இடம் கொடான் - (நான்) பிரவேசித்து உண்ணுதற்கு (அவன்)இடங்கொடுக்கமாட்டான்; (எ-று.)- இக்கவியில் 'ஆகி ' என்ற வினையெச்சம், மேல் 25-ஆம் கவியில்' என்றான்' என்ற முற்றைக் கொள்ளும். நிஜவடிவத்தோடு வந்து கேட்டால், இந்திரனக்குரிய அவ்வனத்தை யெரித்தற்குஅவ்விந்திரன்மகனான அருச்சுனனும் அவ்விந்திரனுக்குத் தம்பியாகிய உபேந்திரனதுதிருவவதாரமான கண்ணபிரானும் அநுமதிசெய்யா ரென்னுங் கருத்தினால், அக்கினிஒளித்துவந்து வேண்டின னென்க. மேகங்களைத் தான் வேண்டியவாறே செலுத்துந்தன்மையனாதலால் என்மேல் மேகங்களையேவி மழைபொழிவித்து என்னைஅவித்துவிடுவா னென்னுங் கருத்துத் தோன்ற இந்திரனை 'கொண்டல்வாகனன்' என்றது கருத்துடையடைகொளியணி. வண்டுகள் வேண்டியவாறு தேனைநிரம்பஉண்டு மகிழ்தற்கு இடமான மாலையை யுடையீ ரென்று விளித்தது, என்போலவந்து இரப்பவர்க்கு வேண்டியவாறு உணவளிக்குந் திறமுடையீரென்று குறித்தவாறாம்.காண்டவன் என்பது - இந்திரன்பெயர்களுள்ஒன்றென்று சப்தார்ணவ மென்னும்வடமொழிநிகண்டிற் கூறியிருத்தலால், காண்டவவனம் என்பதற்கு - இந்திரனதுகாடுஎன்று பொருள்கொள்ளலாம்; அது காண்டவமென வழங்கிற்று. 'இருபிறப்பினன் - இரண்டுவகைப் |