வளர்ந்த மயிர்களையுடைய (தங்கள்) வால்களில் (அக்கினிச் சுவாலை) பற்றியதனால், எரி கொள் சோகம் வெம் கனலினால் - (புறத்திற் பற்றிய அக்கனல் தம்மையெரித்தற்குமுன்னமே அகத்திற் பற்றி) எரிதலைக்கொண்ட சோகமாகிய வெவ்விய அக்கினியினாலேயே, சலியாமல் - புடைபெயராமல், நின்று நின்று இறந்தன- (அவ்வவ்விடங்களில்) நின்று நின்று மரித்தன: (எ-று.) சிங்கத்தின்மேல் தீப்பற்றியதற்கு, தனக்குஉள்ள அரியென்னும் பெயர் சிங்கத்துக்கும் இருத்தலை அவ்வக்கினிபொறாமல் அது காரணமாகக்கோபித்து அச்சிங்கத்தை யெரித்தழிக்கத் தொடங்கினாற்போலுமென்று கவிகற்பித்துக் கூறியதனால்ஏதுத்தற்குறிப்பேற்றவணி. அரியென்னும்பெயர் - அக்கினி சிங்கம் என்னும்இரண்டையுங் குறிக்கும் போது, ஹரி யென்ற வடசொல்லின் விகாரம், "மயிர்நீப்பின்வாழாக்கவரிமா வன்னார்" என்றபடி தன் மயிர்த்திரளில் ஒருமயிர் நீங்கினாலும்உயிர்வாழாது உடனே இறந்துபடுதல் கவரியென்னும் மானின் சாதிக்கு இயல்புஆதலால், அச்சாதிமான்களின் வால்மயிரில் தீப்பற்றியவளவிலே தம் அகத்திற்பற்றியசோகாக்கினி தம்மை யெரித்தலினாலேயே இறந்தன; அவை, தம்வாலிற்பற்றிய புறத்தீமுறையே யெரிந்து வந்தது தம்மை யழித்தலா லிறந்தனவல்ல; ஆனதுபற்றி, அவை,(சிங்கங்கள்போலத்) தப்பிஓடி உயிர்தப்புதற்குச் சிறிதும் முயலாமல் வால்மயிரில்தீப்பட்ட அவ்வவ்விடத்திலேயே புடைபெயராது, நின்றநின்றநிலையில் இறந்துகிடந்தனஎன்பதாம்: இது, தன்மைநவிற்சியணி. கேஸரம் - பிடரிமயிர்; அதனையுடையது,கேஸரீ யென ஆண்சிங்கத்துக்குக் காரணக்குறி, விளிவுடைச்சவரங்கள் என்றும்பாடம். (758) 38. | எப்புறத்தினும்புகுந்துதீச்சூழ்தலி னேகுதற்கிடமின்றித் தப்புதற்கருத்தழிந்துபேரிரலையோ டுழையினந்தடுமாற மெய்ப்புறத்துவெண்புள்ளிசெம்புள்ளியாய் விடும்படிவிறைந்[தோடி அப்புறத்துவீழ்பொறிகளவ்வவற்றினை யலங்கரித்தனவன்றே. |
(இ-ள்.) தீ - நெருப்பானது, எ புறத்தின்உம் புகுந்து சூழ்தலின் - எல்லாப்பங்கங்களிலும் புகுந்து சூழ்ந்துகொண்டதனால், ஏகுதற்கு இடம் இன்றி - தப்பியோடிப்போதற்குவழியில்லாமல், தப்புதல் கருத்து அழிந்து - தப்பியுய்யவேண்டுமென்ற எண்ணம் அழிந்து, பேர் இரலையோடு உழை இனம் தடுமாற - பெரிய ஆண் மான்களுடனே பெண்மான்கூட்டங்களும் நிலைகலங்குகையில்,- விரைந்து ஓடி அ புறத்து வீழ் பொறிகள் - வேகத்தோடு சென்று அந்த மான்களின் உடம்பின்மேல் விழுகிற தீப்பொறிகளானவை, மெய் புறத்துவெள் புள்ளி செம் புள்ளி ஆய்விடும்படி அவ்வற்றினை அலங்கரித்தன - அவற்றினுடம்பின்மேல் (இயல்பாயுள்ள) வெண்ணிறப்புள்ளிகள் செந்நிறப்புள்ளிகளாய் மாறிவிடும்படி அந்த ஆண்மான்களையும் பெண்மான்களையும் அலங்காரஞ் செய்தன;(எ -று.) வெண்ணிறமான மானினுடற்பொறிகள் அனற்பொறிகளால் செந்நிறம் பெற்றன என்றார்: இது, பிறிதின்குணம்பெறலணி. இரலை |