அவித்திடுக என சொல்லி- '(நீங்கள்) மிக்க நீரைச் சொரிந்து (அக்கினியைத்) தணிப்பீர்களாக ' என்று கட்டளைகூறி,- நிரந்தரம் அருகு விடாது தன் நிழல் போல்நின்ற வானவரைஉம் - எப்பொழுதும் தன்பக்கத்தை விடாது தனது நிழலைப்போல் அடுத்துநிற்பவரானதேவர்களையும், ஏவி - (போர்க்குப்புறப்படும்படி) கட்டளையிட்டு, தானும்-, ஈர் இரு மருப்பு பொருப்பின் வெம் பிடர் மிசை புகுந்தான் -நான்குதந்தங்களையுடைய மலைபோன்றவடிவமுள்ள (ஐராவத) யானையினதுவிரும்பத்தக்க [அழகிய] பிடரியின் மேல் ஏறினான்; அக்கினி மிகுதியாகப் புகையையெழுப்ப அப்புகைமிகுதியால் மேகங்கள் பதின்மடங்கு உடல் பூரித்தன என்க. மேகவாகனனாதலால், மேகங்களையேவலானான். (769) 49.- இந்திரன் கட்டளைப்படி யெழுந்து பரந்த மேகங்களில் மிகுதியாகத் தோன்றிய மின்னல்களின் வருணனை. ஏவகவிருத்தச்செவ்வியின்றனுவுக்கேற்றநாண்முறுக்கிவிட்டென்னச் சேவகவிமையோரெண்டிசாமுகத்துஞ்செஞ்சுடர்வாள்விதிர்த்தென்[னப் பாவகன்பகுவாய்நாவிதிர்த்தென்னப் பரந்தவப்பாவகற்குணவாந் தாவகமுழுதும்வளைந்துகொண்டெழுந்த சலதரசஞ்சலாசாலம். |
(இ-ள்.) அ பாவகற்குஉணவுஆம் - அந்த அக்கினிதேவனுக்கு உணவாகிய, தாவகம் முழுதுஉம் - காடு முழுவதையும், வளைந்து கொண்டு - சூழ்ந்து கொண்டு, எழுந்த - மேற்பரவிய, சலதரம் - மேகங்களில் (தோன்றிய), சஞ்சலா - மின்னல்களின்,சாலம் - கூட்டங்களானவை,- ஏ அகம் - அம்பைத்தன்னிடத்தே தொடுத்தற்கு உரிய,விருத்தம் - வட்டமாகிய [நன்குவளைந்த], செவ்வியின் தனுவுக்கு - அழகிய (இந்திர)வில்லுக்கு, ஏற்ற - இயைவதான, நாண் - நாணியை, முறுக்கி விட்டு என்ன -திரித்துவிட்டாற் போலவும்,- சேவகம் இமையோர் - வீரத்தன்மையையுடையதேவர்கள், எண்திசாமுகத்துஉம் - எட்டுத்திக்குக்களிலும், செம் சுடர் வாள் விதிர்த்துஎன்ன - செந்நிறமான ஒளியையுடைய வாளாயுதங்களைச் சுழற்றினாற் போலவும்,-பாவகன் - அக்கினி, பகு வாய் நா - (தனது) திறந்த வாயிலுள்ள நாக்குக்களை,விதிர்த்து என்ன - வெளிச் செலுத்தியசைத்தாற் போலவும், பரந்த - பரவின; (எ-று.) செந்நிறமாய் அசைந்துவிளங்குதல் பற்றி உவமை. அக்கினியினது சுவாலைகளேழும் அவனுக்கு நா எனப்படும். 'எழுநா' என்று அக்கினிக்கு ஒருபெயர். சஞ்சலா - அசையுமியல்புள்ளது என மின்னற்குக் காரணக்குறி. (770) 50.- அம்மேகங்களின் இடிமுழக்கத்தின் வருணனை. ஏறியகளிறுபிளிறுநீடொலியு மெடுத்தவிற்றெறித்தநாணொலியும் சூறியவிமையோர்பெருநகையொலியுந் துந்துபிக்குழாமதிரொலியும் கூறியவனலன்சடுலவல்லொலியுங் குறைபடத்திசைதொறுமிகுந்த ஊறியபுவனபவனவேகத்தோ டுருமுடைமுகிலின்வாயொலியே. |
(இ-ள்.) ஊறிய புவனம் பவனம் வேகத்தோடு - மிகுதியாக அமைந்த நீரோடும்காற்றின்விசையோடும், உரும் உடை -இடி |