பக்கம் எண் :

462பாரதம்ஆதி பருவம்

- அக்கினி தேவனுக்கு, வான் கொற்றம் கவிகைஉம் கொடுத்தான் -
பெரியகொற்றக் குடையையுங் கொடுத்தான்; (எ-று.)

     அவ்வக்கினயின்மேல் மழைத்துளி சிறிதும் வீழாதபடி அம்புகளை
அடத்தியாகத்தொடுத்துச் சரக்கூடங் கட்டினனென்பதாம். அக்கினிக்குமுடி -
சுடர்க்கொழுந்து.அனற்கடவுள் புனற்கடவுளால் வெல்லப்படாதென்பதை
இவ்வம்புக்குடை நன்குவிளக்குதலால், 'கொற்றவான்கவிகை' எனப்பட்டது. கவிகை -
கவிந்திருப்பதெனக்குடைக்குக் காரணக்குறி. 'கவிகையும்' என்ற உம்மை -
உணவைக் கொடுத்ததுமன்றிஎன எச்சப்பொருளது.                    (776)

56.- இதுவும், அடுத்த கவியும் - அந்தச்சரக்கூடத்தின் வருணனை.

ஆழ்தருபரவையேழும்வற்றிடுமா றழித்தகாருமிழ்ந்திடுநெடுநீர்,
தாழ்தருசரத்தான்மேய்ந்ததற் கிடையோர்தனித்திவலையும்
                                      பொசியாமல்,
வீழ்தருமருவிபாவகன்றனக்குவிசயனன்றளித்தபொற்குடைக்குச்,
சூழ்தரநிரைத்துத்தூக்கியமுத்தின் சுடர்மணிதொடையல்
                                     போன்றனவே.

     (இ-ள்.) ஆழ் தரு பரவை ஏழ்உம் - ஆழமாகவுள்ள ஏழுகடல்களும்,
வற்றிடும்ஆறு - வற்றிவிடும்படி, அழித்த - (பருகி) ஒழித்த, கார் - மேகங்கள்,
உமிழ்ந்திடு -சொரிகின்ற, நெடு நீர் - மிக்க நீர், தாழ் தரு சரத்தான் மேய்ந்ததற்கு
இடை -நிலைபெற்ற அம்புகளினால் வேய்ந்த கூடத்திற்கு இடையே, ஓர் தனி
திவலைஉம்பொசியாமல் - ஒருசிறுதுளியும் பொசியமாட்டாமையால், வீழ்தரும் -
(அச்சரக்கூட்டத்திற்கு வெளியிற் சுற்றிலும்) விழுகிற, அருவி - நீரருவிகளானவை,-
பாவகன்தனக்கு விசயன் அன்று அளித்த பொன் குடைக்கு - அக்கினிதேவனுக்கு
அருச்சுனன்அப்பொழுதுகொடுத்த அழகிய அக்குடைக்கு, சூழ்தர நிரைத்து
தூக்கிய -சுற்றிலும்வரிசையாகக் கட்டித் தொங்கவிட்ட, முகத்தின் சுடர்மணி
தொடையல் -முத்துக்களினாலாகிய ஒளியுள்ள அழகியமாலைகளை, போன்றன -
ஒத்தன; (எ-று.)

     கவிகைபோற் சரக்கூடத்தை அருச்சுனன் கட்டியதனால் இடையே நீர்
சிறிதும்விழாமல் சுற்றிலும் நீர்விழுவது, அருச்சுனன் அக்கினிதேவனுக்கு அளித்த
சரக்கூடமாகிய கவிகைக்கு முத்துத்தொடையல் போன்றிருந்ததென்க;
தன்மைத்தற்குறிப்பேற்றவணி.
(குடையின்சுற்றிலும் தொங்குகிற சரங்கள்,
ஜாலரென்றுஉலகில் வழங்கப்படும்.) வீழும் மழைநீர் அருவிபோலுதலால்,
அருவியெனப்பட்டது. 'வேய்ந்ததற்கு' என்றும் பாடமுண்டு.            (777)

57.மண்டிமீதெழுந்தவன்னியின்சிகைக ளிந்திரன்மதலை
                                  வாளிகளால்,
கண்டகூடத்திற்கமைத்தசெம்பவளக் காண்டகுதூண்டிரள்
                                     காட்ட,
அண்டகூடத்திற்கிந்திரன்பளிங்காலமைத்தபல்லாயிரகோடி,
சண்டதூணங்கள்போன்றனபரந்துதனித்தனிமுகில்
                                    பொழிதாரை.

     (இ-ள்.) மண்டிமீது எழுந்த வன்னியின் சிகைகள் - நெருங்கி மேலெழுந்த
அக்கினிச்சுவாலைகள்,- இந்திரன் மதலை வாளிகளால் கண்ட கூடத்திற்கு அமைத்த
காண்தகு செம்பவளம் தூண்திரள்