பக்கம் எண் :

காண்டவதகனச் சருக்கம்463

காட்ட - இந்திர குமாரனான அருச்சுனன் அம்புகளினுலுண்டாக்கிய மண்டபத்தின்
மேற்பகுதிக்கு (ஆதாரமாகக்கீழே) அமைத்த அழகிய சிவந்த பவளத் தூண்களின்
கூட்டங்களை யொத்திருக்க,- முகில் பரந்து தனி தனி பொழி தாரை - மேகங்கள்
பரவித் தனிச் தனிச் சொரிகின்ற மழைநீர்த்தாரைகள், அண்ட கூடத்திற்கு இந்திரன்
பளிங்கால் அமைத்த பல் ஆயிரம்கோடிசண்டம்தூணங்கள் போன்றன -
அண்டத்தின்மேல்முகட்டுக்கு (ஆதாரமாக) இந்திரன் படிகக்
கல்லினாற்செய்தமிகப்பலவலியதூண்களையொத்தன;

     இந்திரன்கட்டளையால் மேகங்கள் வந்து மிக்கமழையைச் சொரியவும்,
அவன்மகனது உதவியினால் அக்கினி இடையூறு சிறிதுமின்றிச் சொலித்தெரிந்த
தென்பதாம். பூமியிலிருந்துபார்ப்பவர்க்குச் சரக்கூடம்வரையும் தாவியெரியும்.
சுவாலைகள் - சரக்கூடமே ஒருமண்டபமாக, அதன்பவழத்தூண்களைப்
போன்றிருந்தன: சரக்கூடத்தின் மேனின்று பார்ப்பவர்க்கு வான்முகட்டிலிருந்து
மழைநீர்த்தாரைபொழிவன - அண்டத்தின் மேன்முகட்டிற்கு வைத்த பளிங்குத்
தூண்போன்றனவென்க: தற்குறிப்பேற்றவணி. மழைத்தாரையின் பருமையை
விளக்குவார், அதற்குத் தூணை உவமைகூறினார். மேகங்களையேவி
மழைபொழிவித்தவன் இந்திரனாதலால், 'இந்திரன் அமைத்த தூணம்'
என்றது.                                                  (778)

58.- தட்சகன்மனைவியை அருச்சுனன்
அம்பெய்துவீழ்த்துதல்.

தக்ககன்றன்னைக்கூயினர்தேடிச் சாயகமண்டபஞ்சுற்றி,
மிக்கவிண்ணவர்கடிரிதரவவன்றன் மெல்லியன்மகவையும்
                                     விழுங்கி,
அக்கணந்தன்னிலந்தரத்தெழலும்வீழ்த்தினானம்
                               பினாற்றுணித்துச்,
செக்கனலுருவச்சென்னியையுரகர்கன்னியைத்திருமணஞ்
                                     செய்தான்.

     (இ-ள்.) மிக்க விண்ணவர்கள் - மிகுந்த தேவர்கள், தக்ககன் தன்னை கூயினர்
தேடி - (தங்கள் அரசனான இந்திரனது நண்பனாகிய) தக்ஷகனென்னும்நாகராசனைக்
கூவியழைத்துத் தேடிக் கொண்டு, சாயகம்மண்டபம் சுற்றி திரிதர -
(அருச்சுனனமைத்த) சரக்கூடத்தைச் சூழ்ந்து திரிய,- அவன் தன்மெல்லியல் -அந்தத்
தக்ஷகனுடைய மனைவி, மகவைஉம் விழுங்கி - (தனது) குட்டியான சிறுநாகத்தையும்
வாயினுட்கொண்டு, அந்தரத்து எழலும் - (தப்பிப் பிழைத்தற்பொருட்டு)
வானத்தின்மீதுபறந்தெழுந்த வளவில்,- உரகர் கன்னியை திருமணம் செய்தான் -
நாககன்னிகையைவிவாகஞ்செய்து கொண்டுள்ளவனான அருச்சுனன், அ
கணந்தன்னில் -அந்தக்ஷணத்திலே, செம்கனல் உருவம் சென்னியை - சிவந்த
அக்கினிபோன்றநிறத்தையுடைய (அந்த நாகமாதின்) தலையை, அம்பினால்
துணித்து - (தான் எய்த)பாணத்தினால் துண்டித்து, வீழ்த்தினான் -
(அப்பெண்பாம்பைக்) கீழே தள்ளினான்; (எ-று.)

     சிலகாலத்துக்கு முன்னே ஒருநாககன்னிகையை விரும்பி மணஞ்செய்து
கொண்டவன், அக்கினிக்குத் தான் உறுதிமொழி யளித்ததையே முக்கியமாகக்
கொண்டு,ஒருநாகமாதை அம்பினால் துணித்துவீழ்த்தின னென அருச்சுனனது
பட்சபாதமற்றஉறுதி