பக்கம் எண் :

464பாரதம்ஆதி பருவம்

நிலையை விளக்கினார். உரகர் கன்னி - உலூபி. அருச்சுனன் அம்பினால் துணித்து
வீழ்த்தியபோது அந்நாகமாதின் தலையும் உடலும் வேறாகித் தலை
அக்கினிக்குவெளியிலும் உடல் அக்கினிக்கு உள்ளுமாக விழந்ததனால், தாய்இறக்க,
அதன்வாயிலுள்ளமகன் மாத்திரம் வால்துணிப்புண்டவளவோடு பிழைத்தன னென்று
அறிக. செக்கர் தீநடுவட்சென்னியை என்று பிரதிபேதம்.              (779)

59.- தட்சகன்மகவை இந்திரன் அரிதிற் பாதுகாத்தல்.

மருவயிற்சதகோடியினிறையைராவதத்தின்மும்மதத்
                                 தினானனைத்துக்,
கருவயிற்றெழிலித்தாரையால்வருணக் கடவுடன்கணைகளால
                                       வித்துச்,
செருவயிற்புரளவொதுக்கியத்தோழன் சிறுவனைச்சென்றெடு
                                  த்தணைத்தான்,
ஒருவயிற்பிறந்தோனாதலின்மகவா னுடனுடன்றிலனுதாசனனே.

     (இ-ள்.) (உடனே), மருவு அயில் - பொருந்திய கூர்மையைக் கொண்ட,
சதகோடியின் - வச்சிராயுதத்தையுடைய, இறை - (தேவ) ராசனான இந்திரனானவன்,-
சென்று - (அருகிற்) போய், ஐராவதத்தின் மும் மதத்தினால் நனைத்து - (அந்த
நாகமாதின் துணி பட்டதலையைத் தான் ஏறிய) ஐராவதமென்னும்யானையின்மூன்று
வகை மதநீரினால் நனைத்து, கரு வயிறுஎழிலி தாரையால் வருணக் கடவுள் தன்
கணைகளால் அவித்து - சூல்கொண்ட  வயிற்றையுடைய மேகங்களின்
மழைத்தாரைகளாலும்  வாருணாஸ்திரங்களினாலும் (அதிற்பற்றிய தீயைத்) தணித்து,
செருவயின் புரள ஒதுக்கி - அப்போர்க்களத்தினின்று புரண்டுவிலகும்படி
(அத்தலையை) ஒதுக்கி, அ தோழன் சிறுவனை எடுத்து அணைத்தான் -
(அதனுள்ளேயிருந்து பிழைத்த) தனதுநண்பனான தக்ஷகனது குமாரனை எடுத்து
அணைத்துக்கொண்டான்; (அங்ஙனம் அருகில் வருகையில் இந்திரனை அக்கினி
சுடாதிருந்த காரணம் என்னெனின்,-) உதாசனன் - அக்கினிதேவன், மகவானுடன் -
இந்திரனுடன், ஒரு வயின் பிறந்தோன் ஆதலின் - ஓரிடத்திற் பிறந்தவனாதலால்,
உடன்றிலன் - (இவனைப்) பகைத்துச் சுட்டானில்லை; (எ-று.)

     அக்கினி, இந்திரனுடன் பிறந்தவனாதலால், அவ்வுடற்பிறப்பலாகிய அன்புபற்றி
அவனை  யெரித்தில னென்று தற்குறிப்பேற்ற வகையாற் கவி காரணங்
கற்பித்துக்கூறினார். திருமாலினதுமுகத்தினின்று இந்திரனும் அக்கினியும் தோன்றின
ரென்று (முகாதிந்த்ரஸ்சாக்னிச்ச) வேதம் கூறும். ஐராவதத்தின்மே லேறியுள்ள
இந்திரன்அருகிற் சென்றபோது, அந்த யானையின் மதநீர் அந்தப் பாம்புத்தலையின்
மேற்சொரிந்ததனால் 'ஐராவதத்தின் மும்மதத்தினால் நனைத்து ' என்றார்.    (780)

60.- அதுகண்ட அருச்சுனன் கோபாவேசங்கொண்டு பொருதல்.

அன்னைவாயோடுதன்வாலதிதுணியுண் டலமருமச்சுவசேனன்,
தன்னைவாசவன்போய்வீடுகண்டுழியத்தனஞ்சயன்றனது
                                  வெங்கணையால்,
முன்னைவானவரைமுனைமுகந்தன்னின் முதுகிடமுதுகிட
                                       முருக்கிப்,
பின்னைவாரிதங்களேழையும்பொருது பின்னிடப்பின்னிடப்
                                      பிளந்தான்.