(இ-ள்.) அன்னை வாயொடு தன் வாலதி துணியுண்டு அலமரும் - (தனது) தாயின் தலை துணிப்புண்டபோது (அதன் நெஞ்சினுள்ளேயிருந்த) தனது வாலும் (அதனோடு) துணிக்கப்பட்டுத் துடிக்கின்ற, அச்சுவசேனன் தன்னை - அசுவசேனனென்னும்பெயருள்ள தக்ஷகபுத்திரனை, வாசவன் போய் வீடு கண்ட உழி -இந்திரன் சென்று (இவ்வாறு) விடுவித்தபொழுது, அ தனஞ்சயன் - (அதுகண்டுபெருங்கோபங்கொண்ட) அவ்வருச்சுனானவன், தனது வெம் கணையால்-தன்னுடையகொடிய அம்புகளினால், முன்னை - முதலில், வானவரை - (தன்னையெதிர்த்த) தேவர்களை, முனை முகந்தன்னில் முதுகுஇட முதுகுஇட முருக்கி- போர்க்களத்தில் மேன்மேற் புறங்கொடுக்கும்படி பொருது, பின்னை - (அதன்) பின்பு,வாரிதங்கள் ஏழைஉம் - ஏழுமேகங்களையும், பொருது - போர்செய்து, பின்னிடபின்னிட பிளந்தான் - மேன்மேற் பின்னிடும்படி பிளந்திட்டான்; (எ-று.) வாய் - தலைக்கு, ஆகுபெயர். அலமரும், அலமா - பகுதி. கண்டுழி - தொகுத்தல், அடுக்குக்கள், தொடர்ச்சிபற்றியன. (781) 61.- அசுவசேனன் அஸ்திரமாய்க் கர்ணனை யடைதல். தீரமால்பொருதுவீடுகண்டதற்பின் செக்கர்மெய்த்தக்ககன்பயந்த பாரமாசுணமவ்விசயனுக்கியாவர் பகையெனப்பலரையும்வினவிச் சூரன்மாமதலைசரணமேயரண நமக்கெனத்தொழுதுபோயெய்தி வீரமாமுனைவெம்பகழியாகியதெம் மேதினியினும்பெருவார்த்தை. |
(இ-ள்.) மால் தீரம் பொருது வீடு கண்டதன்பின் - இந்திரன் தைரியத்தோடு போர்செய்து (அசுவசேனனை) விடுவித்தபின்பு,- செக்கர் மெய் தக்ககன் பயந்த பாரம்மாசுணம் - செந்நிறமான உடம்பை யுடையனும் தக்ஷகன்பெற்றதுமான பருத்த அப்பாம்பானது, அ விசயனுக்கு யாவர் பகை என பலரைஉம் வினவி - (தனது தாயைக் கொன்று தன்னையும் வாலறுத்த) அந்த அருச்சுனனுக்குப் பகையாயுள்ளவர் யாரென்று பலரையும் விசாரித்து, (அவனுக்குப் பகைவன் கர்ணனே யென்று பலருஞ்சொல்லக்கேட்டறிந்து), சூரன் மா மதலை சரணம்ஏ நமக்கு அரணம் என போய் தொழுது எய்தி - சூரியனது சிறந்தகுமாரனான அக்கர்ணனுடைய பாதங்களேநமக்குப் புகலிடமென்று எண்ணிச் சென்று வணங்கி (அவனைச்) சரணமடைந்து, வீரம்மா முனை வெம் பகழி ஆகியது - உக்கிரங்கொண்ட சிறந்த நுனியையுடைய கொடியஅம்பாய் அமைந்தது; எ மேதினியின்உம் பெரு வார்த்தை - (இது) எவ்வுலகத்திலும்பிரசித்தமாகச் சொல்லப்படும் விஷயமாம்; (எ-று.) 'மால்' என்பது - இந்திரனுக்கு ஒருபெயராதலைத் திவாகரத்தாலும் அறிக. அவ்வனத்தினின்று ஓருயிரையும் பிழைக்கவிடுவதில்லை யென்று அருச்சுனன் செய்கிறமுயற்சிக்கு இந்திரன்நெருங்கி வந்து மாறுசெய்ததும் வாருணாஸ்திரம் பிரயோகித்ததுமே, 'பொருது' எனப்பட்டன. பாண்டவர்களும் துரியோதனாதியர்களும் துரோணாசாரியரிடத்தில் கற்றுத்தேர்ந்த பின்பு தம் தம் திறங்காட்டியபோது கர்ணன் தான் இடையில் வலியப்பிரவேசித்துத் தன் திறங்காட்டி அருச்சுனனோடு மாறுபட்டு "முனைந்த போரில் முடி |