பக்கம் எண் :

466பாரதம்ஆதி பருவம்

துணித்து உன் முகசரோருகத்தினாற் சினந்தணிந்து அரங்க பூசை செய்வன்" என்று
சபதங்கூறியுள்ளானாதலால், அவன் அருச்சுனனுக்குப் பகை யென்பது பிரசித்தம்.
வீரம்மா முனை என்பதற்கு - பராக்கிரமத்துக்கு இடமான பெரிய போருக்கு உரிய
எனினும்அமையும். திருமாலாற் கொல்லப்பட்ட மதுகைடபரென்னும் அசுரர்களுடைய
மேதசினால் [உடற்கொழுப்பினால்] நனைந்தமை பற்றி, பூமிக்கு, மேதிநீ என்று பெயர்:
அதன் திரிபு ஆகிய மேதினி என்பது - இங்கு, பொதுப்பட, உலகமென்றமாத்திரமாய்
நின்றது.

62.- இந்திரன் அங்குத் தட்சகனைக் காணாமல் அருச்சுனன்மீது
கோபித்தல்.

தோழன்மாமகனைக்கண்டபின்றனது தோழனையொருவயிற்
                                       காணான்,
வேழமாமுகத்திற்கைத்தலம்புடைத்தான் விழிகளாயிரங்களுஞ்
                                    சிவந்தான்,
யாழமாதிரத்தினெதிரொலியெழுமா றெயிற்றிளநிலவெழ
                                  நகைத்தான்,
தாழமாநிலத்தினின்றமர்விளைக்குந் தன்பெருந்தனயனை
                                   முனிந்தான்.

     (இ-ள்.) (இந்திரன்), தோழன் மா மகனை கண்டபின் - (தனது நண்பனான)
தக்ஷகனுடைய சிறந்த குமாரனாகிய அசுவசேனனைக் கண்டபின்பு, தனது தோழனை
ஒரு வயின் காணான் - தனது நண்பனான அத்தக்ஷகனைஓரிடத்துங் காணாதவனாய்,
(அவ்வருத்தத்தால்,) வேழம் மா முகத்தில் கைத்தலம் புடைத்தான் - (தான் ஏறிய)
ஐராவதயானையின் பெரியமத்தகத்தின்மேற் கையைப் புடைத்து, விழிகள்
ஆயிரங்கள்உம் சிவந்தான் - (கோபத்தால்) ஆயிரங்கண்களுஞ் சிவக்கப்
பெற்றவனாய்,மாதிரத்தின் எதிர் ஒலி எழும் ஆறு - திக்குக்களிற் பிரதித்தொனி
யுண்டாகும்படி,எயிறு இள நில எழ நகைத்தான் - (தனது) பற்களின்
இளநிலாப்போன்ற வொள்ளொளிவெளிவீசத் சிரித்து, தாழ மா நிலத்தில் நின்று
அமர்விளைக்கும் தன் பெருந்தனயனை- கீழே பெரிய பூமியில் நின்று - (அங்கு
நின்றபடியே) பெரும்போர் செய்கிற தனதுசிறந்தபுத்திரனான அருச்சுனனை,
முனிந்தான் - கோபித்தான்; (எ-று.) -யாழ -முன்னிலையசை யாகற்பாலது
அசைநிலையாய் நின்றது.

     தான்பெற்ற சிறந்த புதல்வன்மீது கோபிக்கும்படி தக்ஷகனிடம் இந்திரனுக்கு
இருந்த நண்பின்சிறப்பு, இதில் விளங்கும். தாழ - கீழாக. தான்கீழ்நின்றபடியே
மேலுள்ளாரை வெல்லுமாறு போர் செய்தலின் அருமைதோன்ற, 'தாழ மாநிலத்தில்
நின்று அமர் விளைக்கும்' என்றார். கையைக் கீழேபுடைத்தல் - கோபாவேசத்தின்
காரியம். கண்சிவத்தல் - கோபக்குறி.                              (783)

63.- இந்திரனும் மற்றைத் திக்குப்பாலகர்களும்
போர்க்கு எழுதல்.

மேகசாலங்களிளைத்ததுந்திளைத்து மேலிடுவிண்ணவரணிந்த
யூகசாலங்களுடைந்ததுங்கண்டா னுருந்தெழுந்துள்ளமுங் கொதித்[தான்
ஏகசாபமுந்தன்னேகசாயகமு மிமைப்பளவையின்விரைந்தெடுத்தான்
பாகசாதனனுமேனையதிசையின் பாலரும்பகடுமேல்கொண்டார்.

     (இ-ள்.) பாகசாதனன்உம் - இந்திரனும்,- மேக சாலங்கள் இளைத்தது உம் -
(தான் ஏவிய) மேகக்கூட்டங்கள் இளைப்படைந்த