பக்கம் எண் :

காண்டவதகனச் சருக்கம்467

தையும், திளைத்து மேலிடு விண்ணவர் அணிந்த யூகம் சாலங்கள் உடைந்ததுஉம் -
இடைவிடாது நெருக்கிச் சென்றெதிர்த்த தேவர்கள் வகுத்த படைவகுப்பின் கூடங்கள்
அணிகுலைந்ததையும், கண்டான் - பார்த்து, உருத்து எழுந்து உள்ளம்உம்
கொதித்தான்- கோபித்துப் பொங்கி மனமும் வெதும்பப்பெற்று, தன் ஏக சாபம்உம்
- ஒப்பற்றதனதுவில்லையும், (தன்) ஏக சாயகம்உம் - ஒப்பற்ற தனது அம்பையும்,
இமைப்புஅளவையின் விரைந்து எடுத்தான் - கண்ணிமைப் பொழுதிலும் விரைவாக
எடுத்துக்கொண்டான்; ஏனைய திசையின்பாலர்உம் - மற்றைத் திக்பாலகர்களும்,
பகடுமேல்கொண்டார் - (தம் தம்) வாகனங்களில் ஏறிக்கொண்டார்கள்; (எ-று.)

     இந்திரன், அக்கினி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசாநன்
என்னும் எண்மரும் அஷ்டதிக்பாலகர்; இவர்களைக் கிழக்கு முதலாக முறையே
கொள்க. இவர்களில் அக்கினிக்கு ஆட்டுக்கடாவும், யமனுக்கு எருமைக்கடாவும்,
வருணனுக்கு ஆண்முதலையும், வாயுவுக்கு ஆண்மானும், குபேரனுக்கு ஆண்
குதிரையும், ஈஸாநனுக்கு எருதும் வாகனங்களாம்; ஆதலால், விலங்கின்
ஆண்பெயராகிற 'பகடு' என்ற சொல்லாற் குறித்தார். 'சுருங்கச் சொல்லல்' என்னும்
அழகு பொருந்த இங்ஙனம்கூறியதில், உபலக்ஷணவிதியால், நிருருதிக்கு
வாகனமாகியநரனும் அடங்கும். ஏகசாயகமுமிந்திரதனுவும் என்று
பிரதிபேதம்.                                                 (784)

64.- மற்றுமுள்ள தேவர்களும் வந்துபொருதல்.

தேவருங்கோடிதேவருக்கொருவர் சிரங்களாய்நின்றமுப்பத்து
மூவருந்தத்தம்வாகமேல்கொண்டு முந்துறவந்துவந்தணிந்தார்
யாவரும்புவனத்தின்றுகொலுகத்தி னிறுதியென்றிரங்கினர்நடுங்க
மேவருமனிதரிருவரோடநேகவிபுதரும்வெகுண்டுபோர்விளைத்தார்.

     (இ-ள்.) தேவர்உம் - (முப்பத்துமுக்கோடி) தேவர்களும், கோடி தேவருக்கு
ஒருவர் சிரங்கள் ஆய் நின்ற முப்பத்துமூவர்உம் - ஒவ்வொருகோடி தேவர்களுக்கு
ஒவ்வொருவர் தலைமையாய்நின்றமுப்பத்துமூன்று தேவர்களும், தம் தம் வாகம்
மேல்கொண்டு - தங்கள் தங்களுக்கு உரிய வாகனங்களில் ஏறிக்கொண்டு, முந்துற
வந்து வந்து அணிந்தார் - முற்பட வந்துவந்து அணிவகுத்தார்கள்; (பின்பு),
புவனத்துயாவர்உம் - உலகங்களிலுள்ள எல்லோரும், உகத்தின் இறுதி இன்றுகொல்
என்றுஇரங்கினர் நடுங்க - கற்பமுடிவு காலம் இப்பொழுதுதானோ என்று பரிதபித்து
அஞ்சும்படி, அநேக விபுதர்உம் - (இங்ஙனம்கூடிய) தேவர்கள் பலரும், மேவரு
மனிதர் இருவரோடு - கூடிநின்ற (கிருஷ்ணார்ச்சுனராகிய) மனிதரிருவருடனே,
வெகுண்டு போர் விளைத்தார் - கோபித்துப் போர்செய்தார்கள்; (எ-று.)

     முப்பத்துமூவரென்று இயற்கை யெண்பற்றிக்கூறினாராயினும், ஏற்புழிக்
கோடலால், முப்பத்துமூவரில், அஷ்டவசுக்களைச்சேர்ந்த ஒருவன் சாபத்தினால்
வீடுமனாகப்பிறந்திருத்தலால் அவனை நீங்கி அவரைமுப்பத்திருவரென்றே
கொள்ளுதல் சாலும். யான் முன்னே