பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்47

     (இ -ள்.) நீ-, போய் - (விரைவிலே விண்ணுலகத்திற்குச்) சென்று, இருந்து -
அங்கேயிருந்து, என் பயன் - யாதுபயன்? [யாதொருபயனுமில்லை]: பல் வகை
ஆய்இருந்தன போகம் எலாம் அருந்தி - பலவகையாயிருந்த
போகங்களையெல்லாம்அனுபவித்து, இன்னமும்-, மா இரு தரணியில் -
மிகப்பெரிய பூமியிலே, மன்னு சில்பகல் இருந்து - பொருந்திய சிலநாள்
தங்கியிருந்து, அரசியல்நிறுத்தி - அரசாட்சியைநிலைநிறுத்தி, மீளுவாய் -
(பின்பு) திரும்பிவருவாய்; (எ -று.)

     இந்தச்சந்தனுவுக்கு இப்போதே இவ்வுலகத்தை விட்டிடும்படி மனத்தில்
விழைவுஅறாமையால், 'போயிருந்தென்பயன்' என்றாள்: இதனால், தான்
இப்போதேசெல்வதைக் குறிப்பித்தாளாயிற்று. (எ - று.)             (85)

78.- 'காளைப்பருவம்வரையில் என்னுடனிருந்து பிறகு
உன்னிடம் வரட்டும்' என்றுகங்கையாள் இறுதியிற்பெற்ற
புதல்வனைத் தன்னுடன் கொண்டுமீளுதல்.

இப்புதல் வனுமினி யென்னொ டேகியே
மெய்ப்படு காளையாம் பதத்து மீளநின்
கைப்படுத் துவலெனாக் கணவ னைத்தழீஇ
அப்பெரும் புதல்வனோ டவளு மேகினாள்.

     (இ-ள்.) இ புதல்வன்உம் - இந்தப்புத்திரனும், இனி என்னோடு ஏகி -
இப்போதுஎன்னுடன் வந்து, மெய்படு காளை ஆம் பதத்து - உடம்பிற்
காணப்படுகின்றகாளைப்பருவத்தில், மீள - (உன்னிடம்) திரும்பி வருமாறு, நின்
கை படுத்துவல் - உன்கையிற் சேரச்செய்வேன், எனா - என்று சொல்லி,-
கணவனை தழீஇ- (தன்)கணவனைத் தழுவிக்கொண்டு, அ பெரு புதல்வனோடு -
பெருமைபெற்றஅந்தப்புத்திரனோடு, அவள்உம் - அந்தக் கங்கையாளும்,
ஏகினாள் - சென்றாள்; (எ- று.)                                   (86)

வேறு.

79.-சந்தனு கங்கையாளைப்பிரிந்த வருத்தத்தோடு
 நாள்கழித்தல்.

அன்றுதொட்டிவனு மகன்றபூங் கொடியை யழகுற வெழுதி
                                       முன் வைத்தும்,
ஒன்றுபட் டுவமைப் பொருள்களாற்கண்டுமுரைத்த
                              வையெடுத்தெடுத்துரைத்தும்,
மன்றலிற்றலைநாள்விழைவொடுமணந்த
                             மடந்தையர்வதனமுநோக்கான்,
என்றினிக்கிடைப்பதென்றுளம்வருந்தியெண்ணு
                             நாளெல்லையாண்டிருந்தான்.

     (இ - ள்.) அன்று தொட்டு - அன்று முதல், இவண்உம் - இந்தச்
சந்தனுவும்,அகன்ற - (தான்) பிரிந்த, பூங் கொடியை - பூங்கொடி போன்ற
கங்கையாளை, அழகுஉற எழுதி - அழகுபொருந்த (ப்படத்திலே) எழுதி,
முன்வைத்துஉம் - (தன் ) முன்னேவைத்துக்கொண்டு தரிசித்தும், ஒன்றுபட்டு-
(மனம்) ஒருமித்து, உவமை பொருள்களால்- உபமானமாதற்கு உரிய
பொருள்களாலே, கண்டுஉம் - (அவளை) ஒருவாறுகண்டும்,உரைத்தவை -
(அவள் தன்னுடன்) கூறியபேச்சுக்களை, எடுத்துஎடுத்து உரைத்துஉம் -
பலமுறை