யெரிக்கிற) அக்கினியோடு சேர்ந்தான்: ஆசுகன் - வாயுதேவன், அவற்கு நண்பு ஆனான் - (வனத்தையெரிக்கிற) அந்த அக்கினிக்குத் துணையாய்விட்டான்; கருணை இல் யமன்உம் - அருளில்லாதவனான யமனும், கானிடை மடியும் கணத்திலே கவலைஉற்றனன் - அக்காண்டவவனத்தில் மிகுதியாக அழிகிற சீவராசிகளைக் கவர்தலிலேயேகவலைமிக்கவனானான்; வருணன்உம்-, கடல்கள்வறத்தல் கண்டு அழிந்தான்-(எழுவகை மேகங்களும் ஒருங்குமுகந்துகொள்ளுதலாற்) கடல்களெல்லாம் வற்றுதலைக்கண்டு மனமழிந்தான்; மதிஉம்-குபேரன்உம், அம் மதி முடித்தவன்உம் - அழகியசந்திரனை முடியிற்பூண்டவனாகிய சிவனும், இருள் நிறம் அரக்கிதான்உம் - கரிய நிறத்தையுடைய நிருருதியும், இங்கு இவரோடு எங்ஙனம் பொருதும் என்று இளைத்தார்-இப்பொழுது இந்தக் கிருஷ்ணார்ச்சுனர்களோடு (நாம்) எவ்வாறு போர்செய்வோமென்று இளைப்படைந்து போனார்கள்; (எ - று.) - ஆல் - ஈற்றசை.தான் - அசை. அறுபத்துமூன்றாஞ் செய்யுளில் 'ஏனையதிசையின்பாலர்' எனப்பட்ட எழுவருடைய நிலைமையை இச்செய்யுளிற்கூறுகின்றாரென்க. ஸோமன் என்ற வடசொற்போலவே அதன்பரியாயநாமமான மதியென்பதும் சந்திரனுக்கேயன்றிக் குபேரனுக்கும் வழங்கும். எழுவரில் நால்வர் வேறுபட்டுப்போர்செய்ய முனையாமையால் மற்ற மூவரும், 'இனிநாம் மாத்திரம் என்செய்வோம்?' என்று இளைத்தன ரென்க. இது 'இங்கு' என்பதானால் விளங்கும்; இங்ஙனம் எம் இனத்தவரான நால்வர் வேறுபட்டுச்சென்ற இப்பொழுது என்றபடி. இத்திக்பாலகர் வரிசையினிடையிலேயே சந்திரனைப் புகுத்திச் சொல்லுதல் பொருந்தா தாதலால், மதியும்என்ற விடத்து மதியென்பதற்கு - சந்திரனெனப் பொருள் கூறலாகாது. மதியொடுவைச்சிரவணனுமென்றபாடமும், இருணிறவரக்கன்றானும் என்ற பாடமும் பொருத்தமானவை யல்ல. (789) 69.- அருச்சுனனது அம்புகளினால் மேகங்கள் சிதறுதல். சொன்மழைபொழிந்துநாடொறுந்தனது தோள்வலிதுதிக்கு நாவலர்க்குப், பொன்மழைபொழியுங்கொங்கர்பூபதிதன் பொற்பதம்பொருந் தலர்போலக், கன்மழைபொழியுங்காளமாமுகிலுங் கடவுளர்த்துரந்த வன்கரத்தில், வின்மழைபொழியக்கற்களுந்துகளாய் மேனியும்வெளிறி மீண்டதுவே. |
(இ-ள்.) நாள்தொறும்உம் - தினந்தோறும், சொல் மழை பொழிந்து - சொன்மாரியைச் சொரிந்து, தனது தோள் வலி துதிக்கும் - தன்னுடைய தோள்களின்வலிமையைப் புகழ்கிற, நாவலர்க்கு - புலவர்களுக்கு, பொன்மழை பொழியும் -பொன்மாரியைச் சொரிகின்ற, கொங்கர் பூபதிதன் - கொங்கர்குலத்துத் தோன்றியவரபதியாட்கொண்டானென்னும், அரசனுடைய, பொன்பதம் - அழகிய பாதங்களை,பொருந்தலர்போல - சரணமடையாத பகைவர்கள் (அவனுக்குப் புறங்கொடுத்தோடுதல்)போல,-கல்மழை பொழியும் காளம் மா முகில்உம் - கல்மழையைச் சொரிகிற கரியபெரிய மேகங்களும், கடவளர் துரந்தவன் கரத்தில் வில்மழை |