பொருள் கொள்ளலாம். காயம்இல் கடவுள் - சரீரமில்லாத சொற்றெய்வம். 'காயமெங்கணும் நின்று ஒலியெழப்பரந்து காயமில் கடவுள்' என்றதில், சொல்லினால் முரண்தொடை அமைந்திருத்தல் காண்க. அருச்சுனனோடு பகைமைகொண்டதனால் இந்திரனுக்கு உளதாகும் அவமானத்தைப் போக்கி அமைதியைவிளைக்கும் மொழியாதலால், 'நசைதீர் நல்லுரை' எனப்பட்டது. நவின்றதை, ஐ-சாரியை. அன்றே - ஈற்றசை. (791) 71.- அந்த அசரீரிவார்த்தை. தமரினுமினியதக்ககன்முதலே தப்பினன்குருநிலஞ்சார்ந்தான் குமரனுநும்மாலுய்ந்தனன்றூமக் கொடியனுங்கொண்டலுக்கவியா[ன் நமர்களிலிருவர்நரனுநாரணனுநமக்கு மிங்கிவர்சிறிதிளையார் அமரினையொழிமினமரினையொழிமி னமரருமமரர்நாதனுமே. |
இரண்டுகவிகள் - ஒருதொடர். (இ-ள்.) தமரின்உம் இனிய தக்ககன்-(உங்கட்குச்) சுற்றத்தாரினும் இனியவனானதக்ஷகன், முதல்ஏ குருநிலம் சார்ந்தான் தப்பினன்-முன்னமே குருக்ஷேத்திரத்தையடைந்துள்ளானாதலால் (அக்கினிக்குத்) தப்பிப்பிழைத்தான்; குமரன்உம் - (அவனுடைய) புத்திரனான அசுவசேனனும், நும்மால் உய்ந்தனன் - உங்களால் தப்பிப்பிழைத்திட்டான்; தூமம் கொடியன்உம்-புகைக்கொடியை யுடையவனான அக்கினியும், கொண்டலுக்கு அவியான் - மேகத்துக்குத் தணியமாட்டான்; நரன்உம் நாரணன்உம்-அருச்சுனனும் கிருஷ்ணனுமாகிய இவ்விருவரும், நமர்களில் இருவர் - நம்மவர்களில் (தேவர்களில்) சேர்ந்த இருவரே, இங்கு இவர்உம் நமக்கு சிறிது இளையார் - இத்தன்மையரான இவர்களும் நமக்குச் சிறிதும் இளைக்கமாட்டார்; (ஆதலால்), அமரர்உம் அமரர் நாதன்உம்-தேவர்களும் தேவராஜனுமான நீங்கள், அமரினை ஒழிமின் அமரினை ஒழிமின் - (இவர்களோடுசெய்யும்) போரை ஒழியுங்கள் போரை ஒழியுங்கள்; (எ-று.) நீங்கள் இவ்வளவு கோபித்துக் கடும்போர்தொடங்குவதற்கு ஏற்றகாரணம் இல்லை யென்றும், உங்கள் முயற்சி சிறிதுபயன்பெற்ற தாதலால் அவ்வளவோடு மகிழ்ந்து விலகுதல் தகுதியென்றும், இதற்குமேற்செய்யும் முயற்சிகள் எவ்வாற்றலும் பயன்படாவென்றும் அசரீரிவார்த்தையால் விளங்கும். தக்ககன் ***கெடுமென்று இந்திரன் கரைந்ததாக 47-ஆங் கவியில்வந்தது, அவன்குருநிலஞ்சேர்ந்ததை யறியாமையாலாகும். அக்கினிக்குப்புகை அறிகுறி யாதலால், அவனுக்கு 'தூமக்கொடியன்' என்று ஒரு பெயர். (792) 72.- அதுகேட்டு இந்திரன் போரொழிய, அருச்சுனன் வெற்றிச் சங்கம் முழக்குதலும் கண்ணன் அருச்சுனன் திறத்தை வியத்தலும் என்றுகொண்டுரைத்தமொழிசெவிப்பட்ட வெல்லையினிரவிமுன் னிருள்போல், துன்றுதன்சேனைச் சுரகணஞ்சூழச் சுரபதிதுறக்கம தடைந்தான், வென்று வெங்களங்கொண்டருச்சுனன்றனது வெற்றிகொள் சங்கமுங்குறித்தான், அன்றுசெந்திருமாலருச்சுனன்பொருதவாண்மைகண்டதிசயித் தனனே. |
|