தைக்கண்டு, அக்கினியும் மயனைத் தகித்திலனென முதனூல் கூறும். மயன், அசுரசிற்பியெனப்படுவன். (795) 75.- அக்கினியினின்று தப்பியவர்கள். அழைத்தடல்விசயன்றனைத்துணைசெய்கென் றாறுபத்தி யோசனையாகித், தழைத்தவவ்வனத்தைக்கனத்தைவென்கண்டுதழலவனுகர்ந் திடுங்காலைப், பிழைத்தவர்மயனுந்தக்ககன்மகவும்பெருந்தவனனொரு வன்முன்கருப்பம், இழைத்தநுண்சிறகர்க்கருநிறக்குரீஇயினினங்களுமன்றி வேறிலரால். |
(இ-ள்.) தழலவன்-அக்கினிதேவன்,-அடல் விசயன் தனை-வலிமையுள்ள அருச்சுனனை, துணை செய்க என்று அழைத்து - (எனக்கு) உதவி செய்வாயென்றுகூப்பிட்டு, ஆறுபத்து யோசனை ஆகி தழைத்த அ வனத்தை- அறுபதுயோஜனை விஸ்தீர்ணமுடையதாகித் தழைத்துள்ள அந்தக்காண்டவவனத்தை, கனத்தை வென்கண்டு நுகர்த்திடு காலை - மேகத்தைப் புறங்கண்டு [வென்று]உண்ட [எரித்திட்ட] போதில்,-பிழைத்தவர் - (அந்த அக்கினியினின்று) தப்பிப்பிழைத்தவர்,- மயனும்-,தக்ககன்மகவுஉம்-தட்சகனுடைய மகனாகிய அசுவசேனனும், பெருந்தவன்ஒருவன் முன்கருப்பம் இழைத்த நுண் சிறகர் கருநிறம் குரீஇயின் இனங்கள்உம்-மிக்கதவமுடைய ஒப்பற்றவனான மந்தபாலமுனிவனால் முன்கருவாகித் தோன்றிய நுண்ணிய சிறகுகளையுடைய கருநிறக்குருவியின் கூட்டங்களும், அன்றி - இவையல்லாமல், வேறுஇலர்-; பெருந்தவனொருவன் முன்கருப்பம்இழைத்த குரீஇயினினங்கள்-மந்தபாலனருளாற் றோன்றிய நான்கு இளையசார்ங்கப்பறவைக் குஞ்சுகள் என்று முதனூலால் தெளியப்படும்: அந்தச்சார்ங்கப் பறவைக்குஞ்சுகள் அக்கினியைப் பிரார்த்தித்ததனாலும்அந்த மந்த பாலமுனிவனது விருப்பத்தைத் தழுவியதனாலும் அக்கினிபறவைக்குஞ்சுகளை எரியாதுவிட்டன னென்பர். யோசனை - காதம். கீழ் 43-ஆம் பாடலில் "தானவரியாருய்ந்தார்" என்று தானவரெவரும் உய்யாமையைக் கூறிய கவி,இங்குஉய்ந்தவரை இன்னாரெனக் கூறினரென்க. பிழைத்தவர் மயனும் மகவம்குரீயிஇனினங்களும் - சிறப்பால் உயர்திணை முடிபைக்கொண்டது. (796) 76.- அக்கினி திருப்தியடைந்து கிருஷ்ணார்ச்சுனர்களை வாழ்த்திச் செல்லல். என்பிறபுகல்வதீரெழுபுவனமெம்பிரானருந்தியதென்னத், தன்பசிதணியக்காண்டவவனத்திற்சராசரமுள்ளவையனைத்தும், வன்புடனருந்தி யுதரமுங்குளிர்ந்தான் வன்னிதன்வடிவமுங் குளிர்ந்தான், அன்புடையிருவர்க்காசியும்புகன்றானசைந்துபோய்த் துறக்கமுமடைந்தான். |
(இ-ள்.) பிற புதல்வது என்-மற்றும் (நாம்) சொல்வது என்ன? ஈர் எழு புவனம்எம்பிரான் அருந்தியது என்ன - பதினான்குஉலகங்களையும் திருமால் (பிரளயகாலத்தில்) விழுங்குதல் போல, வன்னி - அக்கினிதேவன், காண்டவவனத்தில்சர |