பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்51

வுரைக்கு, வயந்தன் - தென்றல். மதன் - மன்மதன்என்பதன் நாமைகதேசம்: இனி,
மதன் - மதத்தை [காமக்களிப்பை] யுண்டாக்குபவனுமாம். வாசவன் -
வசுக்களுக்குத்தலைவன்: இந்திரன்: வசு - ஒருதேவசாதி இவன்
விடையவன்குமரனே என்றுஏகாரத்தைமாற்றி வினாப்பொருளாக உரைக்க.  (91)

84.- வந்தவீரன் ஒருமோகனக்கணையைச் சந்தனுமன்னன்
மார்பிலேவிப் புனலில்மறைந்திட, மன்னவன் பூமியில்
வீழ்ந்திடுதல்.

தந்தையென்றிவனையுணர்கிலாமதியாற் சராசனந்தழுவுறவளைத்து [தி
மைந்தனுமொருபோர்மோகனக்கணயான் மறையுடன்மார்புறவெழு
இந்திரதனுவோடிந்திரனெழிலி யிடைமறைந்தனனெனப்புடையே
சிந்தியதிவலைச்சிந்துவின்மறைந்தா னரசனுமகிதலஞ்சேர்ந்தான்.

     (இ-ள்.) மைந்தன்உம் - அந்தக்குமாரனும்;- இவனை -  இந்தச் சந்தனு
மன்னவனை, தந்தைஎன்று - தகப்பனென்று, உணர்கிலா - அறியமாட்டாத,
மதியால் -புத்தியினால் [மன்னவனைத் தன் தந்தையென
அறியமாட்டாமையினால்], சராசனம் -வில்லை, தழுவுற - (இரண்டுமுனையும்)
தழுவுதல்பொருந்த, வளைத்து-, ஒரு -ஒப்பற்ற, போர் - போருக்குஉரிய,
மோகனம்கணையால் - மோகத்தையுண்டாக்கவல்லஅம்பை
[மோகனாஸ்திரத்தினால்], மறையுடன் - (அதற்கு உரிய) மந்திரத்துடனே,
மார்புஉற எழுதி - (அம்மன்னவனுடைய) மார்பிலே அழுந்தித்தைக்குமாறு
தொடுத்து,(பிறகு) இந்திரதனுவோடு இந்திரன்எழிலியிடைமறைந்தனன்என -
இந்திரதனுசுடனேஇந்திரன் மேகத்திலே மறைந்தனன்போலுமென்னும்படி,
புடையே சிந்தியதிவலை -பக்கத்திற்சிந்துகின்ற நீர்த்திவலைகளையுடைய,
சிந்துவின் - கங்காநதியிலே,மறைந்தான்-; அரசன்உம் - (மோகனக்கணையால்
தீண்டப்பட்ட) அரசனும், மகிதலம்சேர்ந்தான் - பூமியிலே சேர்ந்தான்
[மூச்சொடுங்கித் தரையிலே விழுந்திட்டானென்றபடி]; (எ -று.)

     மோகனக்கணையை மன்னவனது மார்பிலே யழுந்தித்தைக்க எய்திட்டு,
அக்குமாரன் யாற்றுநீர்ப்பெருக்கிலே மறைந்தானாக. மன்னவன் தன்னிலை தப்பிப்
பூமியில் விழுந்தன னென்க.                                 (92)

85.- அரசன்நிலைகண்ட கங்கையாள் மனமுருகித் தன்
 மகனோடு நதியினின்றுவெளிவந்து அரசனைத் தன்கையா
லெடுத்தல்.

காதலனயர்வுந்திருமகன்புனலிற் கரந்ததுங்கண்டுளமுருகி,
மேதகுவடிவுகொண்டுமற்றந்த வெஞ்சிலைவினோதனுந்தானும்,
ஓதவெண்டிரையின்மதியுடனுதித்தவொண்மலர்க்கொடியெனவோடித்,
தூதுளங்கனிவாய்மலர்ந்தினிதழைத்துச் சூடகச்செங்கையாலெடுத்தாள்.

     (இ - ள்.) காதலன் அயர்வு உம்-(தனது) அன்பிற்கு உரியனான சந்தனு
மூர்ச்சித்திருத்தலையும், திருமகன் புனலில் கரந்ததுஉம் - சிறந்தபுத்திரன் தன்
வெள்ளநீரிலே மறைந்ததையும், கண்டு -, (கங்கையாளும்), உளம் உருகி -
மனங்கரைந்து, மற்று - பிறகு, மேதகு வடிவுகொண்டு - மேன்மைதக்க
வடிவத்தையெடுத்துக்கொண்டு,