82-ஆம் பாடலில், 'கரிந்தபாதவம்போல்' என்று கூறியதை யொட்டி, 'வாடிய தருவில் மழைபொழிவதுபோல்' என்றார்: உவமையணி. புத்திரனைச் சேர்ப்பிக்கவேண்டுதலாகிய தான் நாடிய கருமம் மன்னவனைத் தேடிக்கொண்டு போகவேண்டிய பணியில்லாமல் அம்மன்னவனே தன்னருகுவந்ததனால், நாடியகருமம்வாய்த்தது என்று உவகையோடு மகவைக் கைக்கொடுத்தனள் கங்கையாள் என்க.இனி, 'கங்கையாளை இம்மையிற் காண்குமோ?' என்று நாடிய மன்னவனுக்குஅன்னாள் போந்து மகனைக் காட்டித்தந்ததனால், மன்னவன் தான் நாடியகருமம்வாய்த்ததென்று உவகை கொண்டு நலம்பெற்றிருந்தானென்று கூறினும் ஆம். தரு -தற்சம வடசொல். (94) 87.- இதுவும் அடுத்த கவியும் - ஒரு தொடர்: கணவன்கையிற் கொடுத்த பிள்ளையின் திறனை யெடுத்துக்குகூறிப் பின் கங்கை யாள் மன்னனைவாழ்த்தி நீரினுட் புகுந்தமை தெரிவிக்கும். வேந்தகேளிவனுன்மதலையேதேவ விரதனென்றிவன்பெயர் பல்லோர், ஆய்ந்தநூல் வெள்ளங்கடந்தனன்கரைகண் டருந்ததிபதி திருவருளால், பூந்துழாய்மாலைப்போர்மழுப்படையோன் பொன்னடி பொலிவுறவணங்கி, ஏந்துநீள் சிலையும்பலகணைமறையு மேனையபடைகளும்பயின்றான். |
(இ - ள்.) வேந்த - அரசனே! கேள் - கேட்பாயாக: இவன்-, உன் மதலை ஏ -உன்புத்திரனே: தேவவிரதன்என்று - தேவவிரதனென்பது, இவன்பெயர்-: அருந்ததிபதிதிருஅருளால் - அருந்ததிக்குக் கணவரான வசிஷ்டமுனிவருடைய திருவருளினால்,பல்லோர் ஆய்ந்த - பல பெரியோர்களும் ஆராய்ந்துள்ள, நூல் வெள்ளம் -நூல்களாகிய வெள்ளத்தின், கரைகண்டு - அக்கரையைக்கண்டு, கடந்தனன் -கடந்துள்ளான் [சாஸ்திரங்களை யெல்லாம் முற்றக் கற்றுள்ளானென்றபடி]: (அன்றியும்), பூந் துழாய் மாலை - பூவையுடைய திருத்துழாய் மாலையைப் பூண்டவனும், போர்மழு படையோன் - போரில்வல்ல மழுப்படையைத் தாங்கியவனுமான பரசுராமனுடைய,பொன் அடி - அழகிய திருவடிகளை, பொலிவு உற - விளக்க முண்டாம்படி, வணங்கி- பணிந்து, ஏந்து நீள் சிலைஉம் - கையிலேந்திய நீண்டவில்வித்தையையும், பலகணை மறைஉம் - பலவகைப்பட்ட அஸ்திரங்களின் மந்திரங்களையும், ஏனையபடைகள்உம் - மற்றுமுள்ள ஆயுதங்களையும், பயின்றான் - கற்றுள்ளான்; தேவவ்ரதனென்ற பேர் இவனுக்குக் கங்கையாளிட்டது. பரசுராமன் திருமாலின்ஏழாமவதாரமாதலால், அன்னான் 'பூந்துழாய் மாலைப் போர்மழுப்படையோன்' எனப்பட்டான். பெரு வீரனாகச் சிறப்படையும் வீடுமன்வீழ்ந்து வணங்குவதால்பரசுராமனுடைய பொன்னடி பொலிவுறுவதாயிற்று. (95) 88. | மகப்பெறுமவரிலொருவரும்பெறாத மகிழ்ச்சியும்வாழ்வு மெய்வலியும், மிகப்பெறுந்தவநீ புரிந்தனைநின்னை வேறினிவெல்லவல்லவரார், உகப்புறவிவனோடவனியாளுகவென் றோரடிக்கோரடிபுரிந்து, தகப்பெறுமயிலுந்தலைவன்மேலுள்ளந்தகைவுறத்தடம்புனல் புகுந்தாள். |
|