பக்கம் எண் :

54பாரதம்ஆதி பருவம்

     (இ - ள்.) மக பெறுமவரில் - பிள்ளையைப் பெற்றாரில், ஒருவர் உம்
பெறாத -எவரும் (இதுவரையிற்) பெற்றிராத, மகிழ்ச்சிஉம் - சந்தோஷமும்,
வாழ்வுஉம் -உயிர்வாழ்ச்சியும், மெய்வலிஉம் - உடல் வலிமையும், மிக பெறும் -
மிகுதியாக அடைகின்ற,  தவம் - தவத்தை, நீ புரிந்தனை - நீ செய்துள்ளாய்;
இனி-, நின்னைவெல்ல வல்லவர்-, வேறு ஆர் - வேறுயாவர்? உகப்பு உற -
மனத்தி லுற்சாகம் மிக, இவனோடு - இவனுடனே, அவனி ஆளுக - (நீ) பூமியை
யாட்சிபுரிவாய், என்று - என்று சொல்லி,- தக பெறு மயில்உம் -
நற்குணம்பெறுதலுள்ள மயில்போன்றசாயலுடைய கங்கையாளும், ஓர் அடிக்கு
ஓர் அடி புரிந்து - (பிரிவாற்றாமையால்) ஓரடி மீது ஓரடியை வைத்தல்செய்து
[மெல்ல மெல்ல அடிவைத்து நடந்து], தலைவன்மேல் உள்ளம் தகைவுஉற -
தலைவனான மன்னவன்மீது (தன் மனம்) தடைப்பட்டுநிற்க, தட புனல் புகுந்தாள்-
பெரிய கங்கைநீர் வெள்ளத்திலே புகுந்துமறைந்தாள்; (எ-று.) - மயில் -
உவமையாகுபெயர்.                                              (96)

89.- மன்னவன் தன்புதல்வனைத் தேரின்மேல்வைத்துக்
கொண்டு ஊரார் கைதொழத் தன்நகரஞ்சேர்தல்.

மனைவியைக்கண்டுமீளவும்பிரிந்த வருத்தமெய்த்திருத்தகு
                                        கேள்வித்,
தனையனைக்கண்டமகிழ்ச்சியாலருக்கன் றன்னெதிரிருளெனத்
                                         தணப்ப, 
நினைவினிற்சிறந்ததேர்மிசைப்புதனு   நிறைகலைமதியுமே
                                       நிகர்ப்பப்,
புனைமணிக்கழலானவனொடுந்தனதுபுரமெதிர்கைதொழப்
                                       புகுந்தான்.

     (இ - ள்.) மனைவியை-, கண்டு-, மீளஉம் - மறுபடியும், பிரிந்த -
பிரிந்ததனால்தோன்றிய, வருத்தம் - துன்பம், மெய் திரு தகு கேள்வி -
உண்மையான சிறப்புக்கொண்டு விளங்குகின்ற நூற் கேள்வியையுடைய,
தனையனை- புத்திரனை,கண்ட - காணப்பெற்றதனாலுண்டான, மகிழ்ச்சியால்-,
அருக்கன் தன் எதிர் இருள்என - சூரியனுக்கு எதிரே இருட்டுப்போல, தணப்ப
- (இருந்த அடையாளமும்தெரியாது) நீங்க, நினைவினில் சிறந்த தேர்மிசை -
மனத்தினைக்காட்டிலுஞ் சிறந்த[மனோவேகத்தினும் விரைவாகச்செல்லவல்ல]
தேரின்மேல், புதன்உம் -புதனென்பவனையும், நிறை கலை மதிஉம் ஏ - நிறைந்த
[பதினாறான] கிரணங்களையுடைய சந்திரனையுமே, நிகர்ப்ப - ஒப்பாகும்படி,
மணி புனை கழலான் -மணிகளழுத்திய வீரக்கழலையணிந்த மன்னவன்,
அவனொடுஉம் -அந்தப்புத்திரனுடனே, தனது புரம் - தன்னுடைய பட்டணத்தில்
[அஸ்தினாபுரியில்] உள்ளவர், எதிர் கைதொழ - எதிர்ந்து கைகூப்பி வணங்க,
புகுந்தான் -பிரவேசித்தான்; (எ-று.)

     தண்ணளிநிரம்பியிருத்தலால் மன்னவனுக்கு மதியையும் பல கலைகளையும்
முற்றவுணர்ந்த புலவனாயிருத்தலால் மைந்தனுக்குப் புதனையும் உவமை கூறினார்.
மனைவியைப்பிரிந்த துயரம் மகனை யடைந்த மகிழ்ச்சியின்முன்னே
தலையெடுக்காமற்போனதை, அருக்கன்றன்னெதிரிருளெனத்தணப்ப என்று
தொழிலுவமைகொண்டுவிளக்கினார்.                                 (97)