பக்கம் எண் :

56பாரதம்ஆதி பருவம்

பதியான அந்தச்சந்தனுமன்னவனும், தாசர் தம்குலத்துக்கு அதிபதி அளித்த
தையலை- வலைஞர்குலத்துக்கு அதிபதியான வலைஞன் தந்த அந்தப்பெண்ணை,
கண்டு-பார்த்து, உளம் உருகி களியா - மனம் நைந்துமகிழ்ந்து, (அவளை
நோக்கி), 'இலங்குஇழை - விளங்குகின்ற ஆபரணங்களையணிந்துள்ள மாதராய்!
நீ-, யார்கொல் -யாவள்?' என்றான் - என்று வினாவினான்; (எ-று.)

     தாசர்குலபதியின் மகளின்மேனி யோசனைதூரங் கமழுந் தன்மைய
தாதலால்,அவள்மேனியின் நறுமணம் கந்தவகனான காற்றின்மூலம்
யோசனைதூரம்செலுத்தப்பெற, அந்த நறுமணக் காற்றுக்கு எதிராக ஓடி
மன்னவன்அந்தயோசனகந்தியைக் கண்டன னென்க. தாசர் என்ற வடசொல், 
தாசர்  என்றுதிரிந்தது. தாசர் தங்குலம் - வலைஞர்குலம்: இவன்பெயர்
'உச்சைச்ச்ரவஸ் ' என்று பாலபாரதத்தும் வியாசபாரதத்தும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாசனால் வளர்க்கப்பட்டகன்னிகை முதலில்மச்சகந்தியா யிருந்து பிறகு
பாராசரபகவானருளால் யோசனைதூரம்நறுமணம் வீசும் உடம்பைப்
பெற்றாளாதலால், யோஐநகந்தி என்று பெயர்பெறுவாளானாள்: இவள்
காளியென்றும், ஸத்யவதீயென்றும், வாஸவீயென்றும்வழங்கப்பட்டுள்ளாள்.
ஒல்லெனப் பரப்ப என்றும் பாடம்.                                (99)

92.- யோசனகந்தியை வினாவியறிந்த சந்தனு
அந்தமடந்தையின் தமப்பனைச்சேர, அவன் மன்னவனடி
பணிதல்.

நிருபனதுரைகேட்டஞ்சினளொதுங்கி நின்றுகைநினைவுறக்குவியா,
இருதுறைநெறியில்வருநரைநாவா யேற்றுவலெந்தையேவலினென்று,
உரைசெயுமளவில்வேட்கையாலுள்ளமுருகிமெய்ம்மெலிந்தொளிகருகி,
அரிவையையளித்தோன்பக்கமதடைந்தானவனும்வந்தடிமலர்பணிந்தான்.

     (இ-ள்.) நிருபனது - சந்தனுவரசனுடைய, உரை - வார்த்தையை, கேட்டு -,
அஞ்சினள் - அச்சங்கொண்டவளாய், ஒதுங்கி நின்று-, நினைவுஉற -
(பெரியோரைக்கண்டால் வணங்கவேண்டு மென்ற) எண்ணந்தோன்ற, கைகுவியா-
கைகூப்பிவணங்கி,- 'இரு துறை நெறியில் வருநரை - பெரிய நீர்த்துறைநெறியைக்
கடக்குங் கருதத்தோடு இங்கு வருபவரை, எந்தை ஏவலின் - என் தந்தையாரின்
கட்டளையினால், நாவாய் ஏற்றுவல் - மரக்கலத்திலேற்றுவேன்,' என்று-, உரை
செயும்அளவில் - சொல்லும்போது,- (மன்னவன்), வேட்கையால் -
காமவிச்சையால், உள்ளம்உருகி-, மெய் மெலிந்து - உடல் தளர்ந்து, ஒளி
கருகி -, அரிவையை அளித்தோன்-யோசன கந்தி யென்ற
அந்தமடந்தையைப்பெற்ற வலைஞனுடைய, பக்கம் அது -இருக்குமிடத்தை,
அடைந்தான்-: அவன்உம் - அந்தவலைஞனும், வந்து-, அடிமலர்
பணிந்தான்- (மன்னவனுடைய) திருவடித் தாமரையை வணங்கினான்; (எ-று.)

     வேட்கையாலென்பது உள்ளமுருகுதற்கேயன்றி, மெய்ம்மெலிதலுக்கும்
ஒளிகருகுதற்கும் ஏது ஆகும். பக்கமது, அது - பகுதிப் பொருள்விகுதி.   (100)