வின்) அரசை, உவகையினால் - மனமகிழ்ச்சியோடு, ஆளுதற்கு - ஆட்சி புரிதற்கு,இருந்தான் - சித்தனாக இருக்கிறான்; மற்று - பிறகு, இவள் பயந்த சீர் உடை மகன் -இந்த என்பெண் பெறப் போகின்ற சிறப்புள்ள புதல்வன், என்செய்வான் -என்னசெய்யக்கூடியவன்? செய்கை - (அவன் செய்யவேண்டிய) செயலை, திரு உளம்குறித்து - உம்முடைய மனத்தினால் ஆலோசித்து, இசை மின் - சொல்லுங்கள்; ' (எ-று.)-"என்ன" என்று அடுத்த கவியோடு தொடரும். "பகீரதிமைந்த னாளுதற்கிருந்தான்; இவள் பயந்த சீருடை மகன் மற்றென்செய்வா னிசைமின் செய்கை திருவுளங்குறித்தே" என்று வலைஞர்பதி கூறியபேச்சில், 'இவள்வயிற்றிற்பிறக்கும் மகனுக்கே அரசுதருவதாக உடன்பட்டால் இவளைவதுவைசெய்து கொடுக்க இசைவேன்' என்ற குறிப்புத் தோன்றுதல் காண்க. பயந்த - இயல்பினால் எதிர்காலம் இறந்தகாலமாயிற்று. (102) 95.- பரதவர்பதியின் மனத்தை யறிந்த மன்னவன் வருத்தத்தோடு அத்தினாபுரியை யடைதல். என்னமுன்னிறைஞ்சியிவன்மொழிகொடுஞ்சொ லிறையவன் கேட்டலுமிரண்டு, கன்னமுமழற்கோல்வைத்ததொத்திதயங் கருகிவே றொன்றையுங்கழறான், முன்னமுன்மதத்தான்முனியிடுசாப முடிந்ததென்றாகுலமுற்றி, அன்னமுங்குயிலும்பயிலுநீள்படப்பை யத்தினா புரியைமீண்டடைந்தான். |
(இ - ள்.) என்ன - என்று, முன் - (தன்) முன்னிலையிலே, இறைஞ்சி - வணங்கி, இவன் மொழி கொடுஞ் சொல் - இந்தப்பரதவர்பதி சொல்லிய கொடுஞ்சொல்லை, இறையவன் - சந்தனுமன்னவன், கேட்டலும் - கேட்டவுடனே,-இரண்டு கன்னம் உம் - (தன்னுடைய) இரண்டுகாதிலும், அழல்கோல் -கொள்ளிக்கட்டை, வைத்தது - வைக்கப்பட்டதை, ஒத்து-, இதயம் கருகி - நெஞ்சுவெந்து, வேறு ஒன்றை உம் கழறான் - வேறொரு வார்த்தையுஞ் சொல்லாதவனாய்,-முன்னம் - முன்பு, உன்மதத்தால் - கோபமயக்கத்தினால், முனி - வசிட்டமுனிவன்,இடு - இட்ட, சாபம் - சாபமே, முடிந்தது - பயனைவிளைக்க வந்திட்டதுபோலும்,என்று-, ஆகுலம் முற்றி - வருத்தம்மிகுந்து, அன்னம்உம் குயில்உம் பயிலும்நீள்படப்பை அத்தினாபுரியை - அன்னப் பறவையும் குயிற்பறவையும் பழகப் பெற்றநீண்டசோலையையுடைய அத்தினாபுரியென்ற (தன்) நகரை, மீண்டு - (அங்குநின்று)திரும்பி, அடைந்தான் - சேர்ந்தான்; வசிட்டமுனிவன்இட்ட சாபத்தின்பயனே இந்தவலைஞர் பதியை இவ்வாறு சொல்விப்பதுபோலும் என்று கருதி, ஆகுலமுற்றான் சந்தனுவென்க. (103) 96.-வேடர்பதியின்மகளிடத்து ஆதரத்தால் மன்னவன் உடல்மெலிய, சாரதியால் அச்செயலைத் தேவவிரத னறிதல். கங்கையாளிடத்திலாதரமெலிந்த காலையிற்களிந்தவெற்பளித்த, மங்கையாமென்னநின்றபூங்கொடிமேல் வைத்தபேரா தரமலியப், |
|