பங்கயானனந்தான்முறைமுறைகுறையும் பான்மதியெனவழகழிந்த, சங்கையான்மைந்தன்வினவலுநிகழ்ந்த தன்மையைச்சாரதிபுகன்றான். |
(இ-ள்.) கங்கையாளிடத்தில்-, ஆதரம் - விருப்பம், மெலிந்த - குறைவுபட்ட, காலையில் - சமயத்திலே, களிந்தவெற்பு அளித்த மங்கை ஆம் என்ன நின்ற பூங் கொடிமேல் - களிந்தமலைபெற்ற யமுனாநதியின் பெண்தெய்வமாவாள்போலும் என்றுகருதுமாறு (யமுனைக்கரையிலிருந்த) பூங்கொடிபோன்ற யோசனகந்தியினிடத்து,வைத்த-, பேர் ஆதரம் - மிக்கவிருப்பம், மலிய - மிக,- பங்கய ஆனனம் -தாமரைமலர்போன்ற (அரசன்) முகம், முறை முறை குறையும் பால் மதி என அழகுஅழிந்த - நாடோறும் முறையே கலை தேயப்பெற்ற வெண்மை நிறமுள்ளசந்திரன்போல அழகுகெட்டதனாலான, சங்கையால் - சங்கையினால், மைந்தன் -குமாரனான தேவவிரதன், வினவலும் - ( 'இங்ஙனம் என் தந்தை முகம் அழகுகெடக்காரணம் யாது?' என்று) வினவவே, சாரதி-, நிகழ்ந்த தன்மையை-, புகன்றான் -கூறினான்; (எ -று.) யமுனைக்கரையில் கருநிறமுடையவளாயிருந்த யோசனகந்தி யமுனையின் பெண்தெய்வமேபோல்வ ளென்று தற்குறிப்பேற்றவணி படக் கூறினார். காலையில் வேலையிற் பிறந்த என்ற பிரதிபேதம். (104) 97.- அறிந்த கங்கைமகன், வலைஞர்பதியிடஞ்சென்று, அரசைத் தன் இளையதாயின்புத்திரனுக்கு அளிப்பதாக உறுதிகூறி மணம்நேர வேண்டுதல். கேட்டவக்கணத்திற்கடற்புறத்தரசைக் கேண்மையோடடைந் திளவரசும், பாட்டனீயெனக்குப்பெற்றதாய்தானும் பகீரதியல்லணின்மகளே, நாட்டமின்றுனக்கியாததுநிலையிந்த ஞாலமுமெம்பியர்ஞாலம், நீட்டமற்றின்றேதிருமணநேர்வாய் நீதிகூர்நிருபனுக்கென்றான். |
(இ-ள்.) கேட்ட-, அ கணத்தில் - அந்த க்ஷணத்தில் தானே, இள அரசுஉம் -இளவரசனான வீடுமனும்,- கடல்புறத்துஅரசை - கடலைச்சார்ந்த நெய்தல்நிலத்துக்குஉரியவனான வலைஞாபதியை. அடைந்து - சேர்ந்து, கேண்மையோடு -உறவுமுறைபாராட்டுதலுடனே, 'நீ எனக்கு பாட்டன்-: (எனக்கு), பெற்ற தாய்தான் உம்-, பகீரதி அல்லள் - கங்காதேவியல்லள்: நின் மகள் ஏ - உன்னுடைய புதல்வியே:இன்று - இப்போது, உனக்கு -, நாட்டம் யாது - விருப்பம் எதன்மீதோ, அது-, நிலை- நிச்சயமாகப்பெறக்கூடிய பொருளேயாகும்: இந்த ஞாலம்உம் - இந்தப்பூமியும், எம்பியர் ஞாலம் - என்னுடைய தம்பிமார் ஆட்சிபுரிதற்கு உரிய பூமியேயாகும்: நீட்டம்அற்று - தாமதித்தலில்லாமல், இன்று ஏ - இப்போதே, நீதி கூர் நிருபனுக்கு -நீதிமுறைமிக்க அரசனாகிய என்தந்தைக்கு, திருமணம் நேர்வாய்- (உன்மகளை) மணஞ்செய்துகொடுத்தற்கு இசைவாய்,' என்றான்-; (எ-று.) கேண்மையோடு என்றான் என இயையும். பாட்டனீயெனக்கு முதலியவற்றில், கேண்மைதோன்றுதல் காண்க. (105) இங்ஙன் தேவவிரதன் கூறியதைக்கேட்ட வலைஞர்பதி வியப்புக் கொண்டு மீண்டும் கங்கையாள் மகனைநோக்கி 'செம்மலே! நீ உன் தந்தையினிடத்து உறுதியானஅன்பினால்இராச்சியத்தைவிட்டிட் |