பக்கம் எண் :

60பாரதம்ஆதி பருவம்

டாய்: இந்த இராச்சியத்தை உன்புத்திரன் பெறற்குரியனாவனே; அப்போதும்
என்கருத்துப் பழுதுபடுமே!' என்று கருதக்கூடுமெனக் கொண்டு, வீடுமன்
பின்வருமாறுகூறலுற்றான்:-

98.- தேவவிரதன் செய்துகொண்ட விரதங்கள்.

விரதமுற்றியவாறனைவருங்கேண்மின் மெய்யுயிர்வீடுமன்றளவுஞ்,
சரதமுற்றியமெய்த்தாதுவுமூலத் தழலுடன்மீதெழுந்தகைத்தே,
இரதமுற்றியசொன்மகப்பெறாதவருக் கில்லையென்றியம்புநற்கதியும்,
சுரதமுற்றியவென்றந்தைதன்பொருட்டாற் பெறுவலென்றின்னதுஞ்
                                           சொன்னான்.

     (இ-ள்.) '(யான்), விரதம் - நோன்பை, முற்றியஆறு - (இப்போது)
தீர்மானித்துக்கொண்டவகையை, அனைவர்உம் கேண்மின் - யாவரும் கேளுங்கள்:
மெய் உயிர் வீடும் அன்று அளவுஉம் - உடலை விட்டு உயிர்போகும்வரையில்,
சரதம்- திண்ணமாக, மெய் முற்றிய - (என்) உடம்பில் மிகுந்துள்ள, தாதுஉம் -
சுக்கிலமும்,மூலம் தழலுடன் - மூலாக்கினியுடனே, மீதுஎழும் தகைத்து -
மேற்புறமாகநோக்கியிருக்கும் தன்மையையுடையது: இரதம் முற்றிய - இனிமை
மிகுந்த, சொல் -குதலைச்சொற்களையுடைய, மக- குழந்தைகளை, பெறாதவருக்கு-,
இல்லை என்று-,இயம்பு - சொல்லப்படுகின்ற, நல்கதிஉம், சுரதம் முற்றிய என் 
தந்தைதன்பொருட்டால் -புணர்ச்சியின்பம் முதிரப்பெற்ற என் தந்தையின்
நிமித்தமாக [என்தந்தையை மணக்குமாறு செய்ததன் பயனாக], பெறுவல் -
(யான்) அடைவேன்,' என்று-, இன்னதுஉம் - இந்தச்சொல்லையும், சொன்னான்-;
(எ -று.)

     குய்யத்துக்கும் குதத்துக்கும் மத்தியில் நான்கிதழ்த்தாமரை போலிருக்கிற
சக்கரம்,மூலம் எனப்படும். தாது கீழ்நோக்காது மேலெழுந்தன்மையுடைய
பெரியோர், ஊர்த்வரேதஸ்கர் எனப்படுவர். மூலாக்கினி மேலெழந்தன்மையும்
தவசியர்க்கேயுரியதென்ப. இரதம்= ரஸம். மகப்பெறாதார் நற்கதியடையாரென்றும்,
புத்தென்றநரகத்திற் சேர்வரென்றும் நூல்கள் கூறும். தந்தைக்குமணஞ்
செய்வித்ததன் பயனாகத்தனக்க  மகப்பெற்றோர்பெறும்  நற்கதியும் 
உண்டாகுமென்றா  னென்க.                                     (106)

99.- அவையிலிருந்தோர் முதலியோர் தேவவிரதனுக்கு
வீடுமனென்றபெயரைச் சூட்டலும் பூமழைபொழிதலும்.

இவன்மொழிநயந்துகேட்டுழியவையி னிருந்ததொன்மனிதரே
                                        
யன்றித்,
தவமுனிவரருந்தேவருங்ககனந் தங்குமாமங்கையர்பலரும்,
உவகையோடிவனுக்கேற்றபேருரைசெய் தொளிகெழுபூமழை
                                    பொழிந்தார்,
அவனியினிருபர்வெருவருந்திறலா னரியசொற்பொருணிலையறிந்தே.

     (இ-ள்.) இவன் - இந்தத்தேவவிரதன், மொழி - (கூறிய) சபதவார்த்தையை,
நயந்து கேட்டஉழி - விரும்பிச்செவியேற்றபோது, அவையின் இருந்த -
சபையிலேயிருந்த, தொல் மனிதர்ஏ அன்றி - பழமையான மனிதரே யல்லாமல்,
தவம்முனிவரர்உம் - தவத்தை