பக்கம் எண் :

62பாரதம்ஆதி பருவம்

னில்' என்றார். வலைஞர் பெண்ணாய் வளர்ந்த ஸத்யவதிக்குக் காளி என்ற
பெயர்நிறம்பற்றிவந்தது போலும். மூன்றாமடியில் மெய்ம் மகிழ்கமழும் என்றும்
பாடம்.                                                     (108)

101.- சந்தனு தன் மகனைக் கொண்டாடுதல்.

பரிமளவடிவப்பாவையையரசன் பாலளென்றொருபுடைநிறுத்தி,
இருபதந்தொழுதுநின்றமாமகனை  யிதயமோடிறுகுறத்தழுவித், 
தரு
மணங்கமழுஞ்சென்னிமேல்வதனந் தாழ்ந்துமோந்துருகி
                                          முன்றந்தைக்கு,
உரியபேரிளமைகொடுத்தகோமகனு முனக்கெதிரல்லனென்றுரைத்தான்.

     (இ-ள்.) பரிமளம் வடிவம் பாவையை - பரிமளமே ஒருவடிவு படைத்து
வந்திருப்பதுபோன்ற அந்தக்காளியை, அரசன் பாலள் என்று ஒருபுடை நிறுத்தி -
அரசனுக்கு உரியவளென்று ஒருபுறத்திலே நிறுத்தி, இரு பதம் தொழுதுநின்ற மா
மகனை - இரண்டு பாதங்களையும் தொழுதுகொண்டுநின்ற (தன்) சிறந்த
புதல்வனை,(சந்தனுமன்னவன்), இதயமோடு இறுகுற தழுவி - மார்போடு
அழுந்தக்கட்டிக்கொண்டு,தரு மணம் கமழும் சென்னி மேல் - கற்பகமலரின்
நறுமணம் வீசுகின்ற(அந்தப்புதல்வனுடைய) சிரசின்மீது, வதனம் தாழ்ந்து
மோந்து - (தன்) முகத்தைத்தாழ்ந்து (உச்சி) மோந்து, உருகி- (அன்பினால்)
மனங் கசிந்து, 'முன் தந்தைக்கு உரியபேர் இளமை கொடுத்த கோமகன்உம் -
முன்பு (தன்) தந்தைக்கு (த் தனக்கு) உரியமிக்க இளமையைக் கொடுத்த பூரு
என்ற ராஜகுமாரனும், உனக்கு எதிர் அல்லன்-, 'என்று-, உரைத்தான் -
சொன்னான்; (எ-று.)

      'தரு' என்ற மரப்பொதுப்பெயர் - சிறப்பாய்க் கற்பகத்தைக் காட்டி,
முதலாகுபெயரால், அதன்மலரைக் காட்டிற்று. கீழ் வானவர்பூமழை
பொழிந்தாரென்றதற்கு ஏற்ப, இங்கே 'தருமணங்கமழுஞ் சென்னி' என்றார்.
நான்காமடியில், உரியதன்னிளமை என்றும், அல்லவென்றுவந்தான் என்றும்
பாடம்.                                                   (109)

102.- சந்தனு வீடுமனிடத்துக் கூறும் முகமன்.

தந்தையர்க்குதவுமுதவியினெனக்குச் சதமடங்குதவினையுனக்கு,
மைந்தருக்குதவுமுதவியிற்சிறிது மாதவஞ்செய்திலேனுதவச்,
சிந்தையிற்றுறக்கம்வேண்டுமென்றெண்ணிச் செல்லுமன்றல்ல
                                         துன்னுயிர்மேன்,
முந்துறக்காலன்வரப்பெறானென்றே முடிவிலாவொருவரமொழிந்தான்.

     (இ-ள்.) '(நீ),- எனக்கு-,தந்தையர்க்கு உதவும் உதவியின் - (பெற்ற மகன்)
தன்னுடைய தந்தையார்திறத்தி லுதவுகின்ற உதவியைக்காட்டிலும், சதம் மடங்கு -
நூறுமடங்கு (மிக), உதவினை - உதவிபுரிந்தாய்: உனக்கு-, மைந்தருக்கு உதவும்
உதவியின்- (தந்தை தன்) புதல்வருக்கு உதவுகின்ற உதவியைப்போல, உதவ -
உதவும்படி,சிறிதும்உம் - கொஞ்சமும், மா தவம் செய்திலேன் - சிறந்த
தவத்தைச்செய்தேனில்லை: சிந்தையில் - (உன்) மனத்தில், 'துறக்கம் வேண்டும் -
சுவர்க்கத்துக்குப்போகவேண்டும்,' என்று-,