எண்ணி-, செல்லும்- (நீயே) போகின்ற, அன்று அல்லது - அன்றைக்கு அல்லாமல், உன் உயிர்மேல்-, காலன் - யமன், முந்துற - (நீ சுவர்க்கத்துக்குச் செல்லவேணுமென்றுகருதுவதற்கு) முன்பாக, வரப்பெறான்-, 'என்று-, முடிவுஇலா- (விருப்பமின்றி) இறத்தலில்லாமையாகிய, ஒரு வரம் - ஒப்பற்றவரத்தையும், மொழிந்தான்- (சந்தனு வீடுமன்பொருட்டு) வாய்விட்டுச் சொன்னான்: (எ-று.) இங்ஙனம் வேண்டும்போது இறத்தல் 'ஸ்வச்சந்தமரணம்' எனப்படும். (110) 103.- இதுமுதல் நான்குகவிகள் - வலைஞர் தலைவன் யோசன கந்தியை முன்நிறுத்திப் பணிவுடன் அவள்வரலாற்றினைத் தெரிவித்தலைக்கூறும். அம்புவியரசன்மாமனுமரச னடிபணிந்தவயவத்தழகால், உம்பரும்வியக்குங்கிளியைமுன்னிறுத்தி யொடுங்கினன் வாய்புதைத்துரைத்தான், எம்பெருமானீ கேட்டருளுனக்கே யிசைந்தமெய்த்தவம்புரியிவளை, வம்பவிழ்மலர்மாதென்பதேயன்றி வலைஞர்மாமகளெனக் கருதேல். |
ஐந்துகவிகள் - ஒருதொடர். (இ-ள்.) அம் புவி அரசன் மாமன்உம் - அழகியபூமிக்குத்தலைவனான சந்தனுவுக்கு மாமனாராகியவலைஞர் தலைவனும், அரசன் அடிபணிந்து - மன்னவனுடைய பாதங்களில் வணங்கி,- அவயவத்து அழகால் - உடம்பினழகினால்,உம்பர்உம் - தேவர்களும், வியக்கும் - அதிசயிக்கின்ற, கிளியை - கிளிபோன்றபெண்ணை, முன் - (அவ்வரசனுக்கு) முன்னே, நிறுத்தி - நிற்கவைத்து,- ஒடுங்கினன் -ஒடுக்கத்தைக் காட்டியவண்ணம், வாய்புதைத்து - வாயை(க் கையினால்) மூடிக்கொண்டு, உரைத்தான் - (பின்வருமாறு) சொல்பவனானான்: எம்பெருமான் - எமதுபெருமானே! நீ கேட்டருள் - நீ கேட்டருள்வாய்: உனக்கு ஏ இசைந்தமெய் தவம் புரிஇவளை - உனக்கே (மனைவியாகப்) பொருந்திய உண்மைத்தவம்புரிந்துள்ளஇந்தப்பெண்ணை, வம்பு அவிழ் மலர் மாது என்பது ஏ அன்றி - நறுமணம்வீசுகின்றமலரில் தங்கும் திருமகள் போல்வா ளென்பதல்லாமல், வலைஞர் மா மகள் என -வலைஞர் குலத்துத் தோன்றிய சிறந்த பெண்ணென்று, கருதேல் - எண்ணாதே: (எ-று.) - இச்செய்யுளில 'எம்பெருமான்' (103) என்பது தொடங்கி "காவலர் குலத்திடைக்கலந்தாள்" (106) என்பது வரையில், வலைஞர் தலைவனுரைத்த உரையாகும். அவயவம் அங்கம் என்பன பரியாய மாதலாலும், உடம்பை அங்கமென்று வழங்கியிருத்தலாலும், இங்கு உடம்பை அவயவமென்றார். (111) 104. | வாசவனளித்தவிமானமீதொருவன் வசுவெனுஞ்சேதி மாமரபோன், கேசரனெனப்போம்விசும்பிடைமனையாள் கிரிகையை நினைந்துடல்கெழுமி, நேசமொடிதயமுருகுமக்கணத்தி னினைவற விழுந்தவீரியமெய்த், தேசவனளித்தநதியிடைத்தரளத் திரளெனச்சிந்தியதொருபால். |
|