பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்65

106.மானவர் பதியாம் வசுவினுக் கிவரை மகிழ்வுறக் காட்டலு
                                        மகனை,
மீனவனெனப்பேர்கொடுத்தனன் கொண்டுமெல்லியலிவளை
                                  மீண்டளித்தான்,
யானுமின் றளவு மென்மக ளென்னு மியற்கையா லினிமையின்
                                      வளர்த்தேன்,
கானமென் குயில்போல் வந்துமீளவுந்தன் காவலர் குலத்திடைக்
                                         கலந்தாள்.

     (இ - ள்.) மானவர் பதி ஆம் - மானுடர்க்குத் தலைவனாகிய, வசுவினுக்கு-,
இவரை - இந்த மக்களை, மகிழ்வு உற - மகிழ்ச்சிபொருந்த, காட்டலும் - (நான்)
காட்டியபோது,-(அந்தவசுமன்னவன்), மகனை-, மீனவன் எனபேர்கொடுத்தனன்
கொண்டு - மீனவனென்று பேரிட்டு(த் தன்னுடன்) வைத்துக்கொண்டு, மெல்லியல்
இவளை - இந்தப்பெண்ணை, மீண்டு-, அளித்தான் கொடுத்திட்டான்: யான் உம்-,
இன்று அளவுஉம் - இன்றுவரையிலும், என் மகள் என்னும் இயற்கையால் -
என்மகளென்று சொல்லக்கூடிய தன்மையினால், இனிமையின் வளர்த்தேன் -
இனிதாகவளர்த்து வந்தேன்: (இவள்), கானம் மெல் குயில்போல் -
இன்னிசையையுடைய  மெல்லிய குயில் போல், வந்து - வளர்ந்துவந்து, மீளஉம் -,
தன்காவலர் குலத்திடை - தனக்குரிய அரசர்குலத்திலேயே, கலந்தாள் -
சேர்ந்திட்டாள்; (எ-று.)

     வலைஞர் தம் தலைவனிடத்து அந்தக்குழந்தைகளைத் தர, வலைஞர்
தலைவனான அந்த உச்சைச்சிரவசு குழந்தைகளைவசுவுக்குக்காட்டின னென்க.
காக்கையால் குஞ்சுபொரித்து வளர்க்கப்பெற்ற குயிலானது பிறகு தன்னினத்தையே
சேர்ந்திடுமாதலால், பரதவரிடைவளர்ந்து மன்னவர்குலத்தைச் சேர்ந்த
யோசனகந்திக்குக் குயில் ஏற்ற உவமையாம்: குயில் காக்கையால் முதலில்
வளர்க்கப்படுவதுபற்றி, வட மொழியில் 'பரபுஷ்டம்' என்று ஒருபெயர்பெறும்:
மீனவன்= மத்ஸ்ய: என்பதன் மொழிபெயர்ப்பு.                         (114)

வேறு.

107.- வலைஞர் தலைவனது பேச்சைக் கேட்டபின், சந்தனு
அம்மகளை மணத்தல்.

என்று கூறிவி டுத்தன னேந்தலும்
அன்ற வைக்க ணவன்மொழி கேட்டுவந்து
இன்று நற்றின மென்றிளந் தோகையை
மன்ற லெய்தினன் மாநிலம் வாழ்த்தவே.

     (இ - ள்.) என்று கூறி விடுத்தனன் - என்றுசொல்லி (அந்தப் பெண்ணை)க்
கொடுத்தான்: ஏந்தல்உம் - சந்தனு மன்னவனும்,- அன்று-, அவைக்கண் -
சபையிலே(கூறிய), அவன் மொழி - அவ்வலைஞர்பதியின் வார்த்தையை,கேட்டு,-,
உவந்து -மனம்மகிழ்ந்து,- இன்று நல் தினம் என்று-, 'இந்நாள் மணஞ்செய்து
கொள்ளுதற்குஏற்ற நன்னாளாகும்' என்றுசொல்லி, இளந்தோகையை - இளமயில்
போலுஞ்சாயலையுடைய அந்தப்பெண்ணை, மாநிலம் வாழ்த்த -
பெரியநிலவுலகத்தார்வாழ்த்துக்கூற, மன்றல் எய்தினன் - விவாகஞ்
செய்துகொண்டான்; (எ-று.)

     தான் விரும்பிவளைச் சிறப்புற்ற வசுவின் பெண்ணென்று அறிந்தமையால்,
சந்தனு உவந்தானென்க.