இது முதல் இருபத்துநான்கு கவிகள் - பெரும்பாலும்முதற்சீர் மாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள். (115) 108-கவிக்கூற்று. காளிவந்து கலந்தனள் கங்கைவேய்த் தோளியும்புயந் தோய்ந்தனண்முன்னமே வாளிவெம்பரி மாநெடுந்தேருடை மீளிதானும் விடையவனாதலால். |
(இ-ள்.) வாளி வெம் பரி மா நெடுந்தேர் உடை மீளி தான்உம் - நேரேசெல்லும் கதி வாய்ந்த வெவ்விய குதிரை பூண்ட நெடிய தேரையுடைய வீரனாகிய சந்தனுவும்,- விடையவன் ஆதலால்-, காளி வந்து கலந்தனள்-; கங்கை வேய் தோளிஉம் - கங்கையென்ற மூங்கில்போலுந் தோளையுடையாளும், முன்னமே,புயம்தோய்ந்தனள் - (அந்தமன்னவனை) மணந்தாள்; (எ -று.) விடையவன் - விடையைவாகனமாகவுடையவ னென்றும், விடை போல்பவனென்றும்சிலேடைவகையால் இருபொருள்படும். விருஷப வாகனனாகிய சிவபிரானைக் காளி மணத்தலும், கங்காதேவி கூடியிருத்தலும் இயல்பேயென்ற கருத்துஇதில்விளங்குதல் காண்க. "ஸ்வீக் ருத்யகாளீம் கிரிஜாமிவேச:" என்றது, பாலபாரதம்.காளியென்பது, யோஜநகந்திக்கு வழங்கும் பெயர்; இச்சொல் பார்வதியினமிசமானபத்திரகாளியையும் காட்டும். விடையவன் என்பது, இடபக்குறியையுடைய வருணனதுஅமிசமானவன் என்று சந்தனுவைக் காட்டுமென்றாரு முளர்.(116) 109.- சந்தனு காளியின் இன்பத்தில் மகிழ்தல். கங்கையின்கரைக் கண்ணுறுகாரிகை கொங்கையின்பங் குலைந்தபின்மற்றவள் எங்கையென்ன யமுனையின்பால்வரும் மங்கையின்ப மகிழ்ந்தனன்மன்னனே. |
(இ -ள்.) கங்கையின் கரை - கங்கையின்கரையிலே, கண்ணுறு- காணப்பெற்ற,காரிகை - கங்கையின் பெண்தெய்வத்தின், கொங்கை இன்பம்- தனங்களைத்தழுவுவதனாலான இன்பம், குலைந்தபின் - அழிவுற்ற பின்பு,- மற்றவள் எங்கை என்ன- அந்தக்கங்காதேவியின் தங்கையென்னுமாறு, யமுனையின்பால் வரும் மங்கை -யமுனாநதியின் கரையிலே வந்த பெண்ணின், இன்பம் - இன்பத்தை, மன்னன் -சந்தனுராசன், மகிழ்ந்தனன்-; (எ-று.) (117) 110.- இரண்டுகவிகள் - குளகம்: வீடுமன் அரசமுறையை நடாத்த, மன்னவன் அந்தக்காளியினிடத்துப் புதல்வரைப் பெறுதலைக் கூறும். வீடுமன்கழல் வேந்தர்வணங்கிட நாடுநன்னெறி நாளுநடத்திட நீடுமன்னனு நேரிழைமேன்மலர்த் தோடுமன்னு சுரும்பெனவீழவே. |
|