பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்67

     (இ-ள்.) வீடுமன்-,-கழல்வேந்தர் வணங்கிட - வீரக்கழலை யணிந்த
மன்னவர்வணங்காநிற்க, நாடும் நல் நெறி - ஆராய்ந்து செய்தற்கு உரிய நல்ல
செங்கோல்முறையை, நாள்உம் நடத்திட - நாடோறும் நடத்தாநிற்க,- நீடு
மன்னன்உம் -பெருமைமிக்க சந்தனுவரசனும், நேரிழைமேல் - அழகிய
ஆபரணங்களையணிந்தபெண்ணினிடத்து, மலர் தோடு மன்னு சுரும்புஎன வீழ -
மலரிதழில் மொய்க்கின்றவண்டுபோல விரும்பி வீழாநிற்க,- (எ-று.)
-"செங்கண்ணி- மைந்தரிருவரையீன்றனள்" எனத் தொடரும்.

     மன்னனுக்கு வண்டும், காளிக்கு மலரிதழும், போகத்துக்குத் தேனும்
உவமையாம். இளவரசனாகிய வீடுமனிடத்து அரசப் பொறுப்பைச் சந்தனுமன்னன்
ஒப்பித்துப் பெண்ணின்பத்தை விரும்பிநின்றா னென்க.                 (118)

111.அன்னநாளி லருக்கனுந்திங்களும்
என்னமைந்த ரிருவரையீன்றனள்
மன்னனாவி வடிவுகொண்டன்னமெய்க்
கன்னபூரங் கலந்தசெங்கண்ணியே.

     (இ -ள்.) மன்னன் ஆவி வடிவு கொண்டு அன்ன மெய் கன்னபூரம் கலந்த
செங் கண்ணி - சந்தனுமன்னவனுடைய உயிரே ஒரு வடிவுபடைத்தாற்போன்ற
உடலையுடையவளாய்க் காதணிவரையில் நீண்ட செவ்வரிபரந்த கண்களையுடையளானகாளியானவள், அன்ன நாளில் - அந்தக்காலத்திலே,
அருக்கன்உம் திங்கள்உம் என்ன- சூரியனும் சந்திரனும் என்னும்படி, மைந்தர்
இருவரை ஈன்றனள் - இரண்டுபுத்திரரைப் பெற்றாள்;(எ-று.)

     தேஜோவான்களென்பதை விளக்கச் சூரியசந்திரரை உவமை கூறியது.
கன்னபூரம் = கர்ணபூரம்: காதைநிரப்பவதென்ற காரணம் பற்றிக் காதணியைக்
காட்டும்வடசொல்.                                            (119)

112.- பிறந்தபுத்திரரை வீடுமன் உரியகாலத்திற் கல்வி பயிற்றுவித்தல்.

சித்திராங்கதன் செப்புநலனுடை
மெய்த்தசீர்த்தி விசித்திரவீரியன்
இத்திறத்த ரிருவருந்தம்முனால்
ஒத்தகல்விய ராயின ருண்மையே.

     (இ - ள்.) சித்திராங்கதன் - சித்திராங்கதனும், செப்பு நலன் உடை மெய்த்த
சீர்த்தி - (யாவராலும்) பாராட்டிச்சொல்லுதற்கு உரிய அழகமைந்து உண்மையான
மிகுபுகழைப் பெற்ற, விசித்திரவீரியன் - விசித்திரவீரியனும், இ திறத்தர்
இருவர்உம் -இப்படிபட்டவரான இரண்டுமைந்தரும், தம்முனால் - தமது
அண்ணனான வீடுமனால்,ஒத்த கல்வியர் ஆயினர் - ஒத்தகல்விமான்களாயினர்:
உண்மை ஏ-;

     இச்செய்யுள், சிலபிரதிகளில் "சித்திராங்கதன் சித்திரவீரனென், றித்தராதிபன்
மைந்தரிருவரும், தத்தமன்பொடுதம்முன் பதந்தழீஇ, யொத்த
கல்வியராயினருண்மையால்" என்று காணப்படுகின்றதென்ப. சித்திராங்கதன்
இறந்துபட,விசித்திரவீரியனே