பக்கம் எண் :

68பாரதம்ஆதி பருவம்

இராசங்கத்துக்கு உரியவனானதால், அவனுக்கு 'மெய்த்தசீர்த்தி' என்ற அடைமொழி
கொடுக்கப்பட்டது.                                              (120)

113.- சந்தனு விண்ணுலகடைய, வீடுமன் சித்திராங்க
தனைச் சிங்காசனத்தேற்றுதல்.

மதிநெடுங்குல மன்னனரையினால்
விதியனந்தரம் விண்ணுலகேற்றினான்
நதியின்மைந்தனு நம்புவிக்கெம்பியே
அதிபனென்றரி யாசனத்தேற்றினான்.

     (இ-ள்.) அனந்தரம் - பின்பு, மதி நெடுங் குலம் மன்னன்- சந்திரனுடைய
பெருமைபெற்ற குலத்துத் தோன்றிய அரசனை, விதி - ஊழ்வினைக்குரியகடவுள்,
நரையினால் - கிழத்தனத்தினால், விண் உலகு ஏற்றினான் - வானுலகமேறச்
செய்தான்:நதியின் மைந்தன்உம் - கங்காநதிக்குப்புதல்வனாகிய வீடுமனும், 'நம்
புவிக்கு -நம்முடைய பூமிக்கு, எம்பிஏ - என்தம்பியே, அதிபன் -
தலைவனாவன், 'என்று -என்றுசொல்லி, அரி ஆசனத்து ஏற்றினான் -
சிங்காதனத்திலேறச் செய்தான்; (எ -று.)

     வயசுமுதிர்ந்ததனால் சந்தனுமன்னன் வானுலகடைய, சித்திராங்கதனை
வீடுமன்அரசனாக்கினனென்பதாம். நரைகாரணமாகவிதி சந்தனுவை வானுலகேற்ற,
வீடுமனும்தம்பியை அரியாசனத்தேற்றினான் என்று சமத்காரமாகக்கூறினார். இங்கு
'மன்னனைநண்பினால்' என்றபாடம், பொருள் சிறவாமை காண்க;
'மன்னனரையினால்' என்பதைப்படிக்கத் தெரியாமையால் நேர்ந்த
தவறாயிருக்கலாம்; "ததோவிதிர்விஸ்ரஸயோபகூடம் - நரேந்த்ரம்
ஆரோஹயதிஸ்ம நாகம் - பீஷ்மோபிசஸ்த்ராஸ்த்ரவிதம் குமாரம் - சித்ராங்க
தம் பௌரவராஜ்யபீடம்" என்றபாலபாரதமும் காண்க: இந்த ச்லோகத்தில்;
விஸ்ரஸயா - நரையினாலென்றுபொருளாம்.                          (121)

114.- சித்திராங்கதன் அப்பெயர்கொண்ட கந்தருவனால்
இறத்தல்.

எங்கணாம மிவன்கவர்ந்தானெனக்
கங்குல்வந்தொரு கந்தருவாதிபன்
தொங்கன்மாமுடி சூடியவேந்தனை
அங்கையான்மலைந் தாருயிர்கொள்ளவே.

இரண்டுகவிகள் - குளகம்.

     (இ-ள்.) 'எங்கள் நாமம் - எம்முடையபேராகிய சித்திராங்கத னென்பதை,
இவன்கவர்ந்தான் - இவன் திருடிக்கொண்டான்,' என - என்று வெகுண்டு, ஒரு
கந்தருவஅதிபன் - (சித்திராங்கதனென்று பேர்பூண்ட) ஒரு கந்தருவராசன்,
கங்குல் வந்து -இராப்போதில் வந்து, தொங்கல் மா முடி சூடிய வேந்தனை -
அரசாங்கத்துக்குரியமாலையுடனே கிரீடமும் தரித்துள்ள
அந்தச்சித்திராங்கதமன்னனை, அம் கையால்மலைந்து - (தன்னுடைய)
அழகியகையினாற் பொருது, ஆர் உயிர் கொள்ள -அருமையான
உயிரைக்கவர்ந்துகொண்டிட, (எ-று.)- "முடிசூட்டினான்" (115) என்றுஇயையும்.