பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்69

   வீடுமனிடத்து அச்சத்தினால் பகலில் வராமல் இரவில்வந்து கவர்ந்து சித்திராங்க
தமன்னனைக் கொன்றிட்டனன், அப்பெயர்   பூண்ட கந்தருவனென்க.
பேரைக்கொண்டிருத்தலை, நாமம் கவர்ந்தனென்றது. அஸந்நிதௌ  ஸிந்துபுவ:
ஸ்வநாம்நா கந்தர்வவர்யேண ரணே நிஜக்நே [கங்காபுத்திரரான வீடுமருடைய
அஸந்நிதானத்தில் போரிலே தன்பேரைக்கொண்ட கந்தருவனால் சித்திராங்கதன்
கொல்லப்பட்டான்] என்று பாலபாரதத்திலுள்ளது. வியாசபாரதத்தில் "சித்திராங்கதன்
தன் வீரத்தினால்பூலோகத்து அரசர்களைவென்று அவர்களை ஒருபொருட்டாக
நினையாமல் தேவர்களையும் எதிர்த்தானாக, பலவானான சித்திராங்கதனென்ற
கந்தருவன் 'நீ என்பேர் கொண்டிருப்பதை மாற்றி வேறொரு பெயராவது கொள்க:
இல்லாவிடின் என்னோடாவது பொருக' என்ன, இந்த மன்னவன்
அந்தக்கந்தருவனோடு பொருதற்கு இசைய, இருவர்க்கும் மூன்று வருஷங்கள்
ஹிரண்யவதீயென்ற நதியின்கரையில் போர் நடக்க, முடிவில் மிக்கமாயையில்வல்ல
சித்திராங்கத கந்தருவன் இவனைக் கொன்றிட்டான்" என்று உள்ளது.      (122)

115.- தாயின் மனவருத்தம் நீங்க, விசித்திரவீரியனுக்கு
வீடுமன் முடிசூட்டுதல்.

எம்முனன்றி யிறந்தனனென்றுதாய்
விம்முநெஞ்சின் மிகுதுனிமாறவே
தெம்முன்வல்ல விசித்திரவீரனைத்
தம்முன்மீளத் தனிமுடிசூட்டினான்.

     (இ-ள்.) 'எம்முன் அன்றி - எம்முடைய கண்ணெதிரிலேயல்லாமல்,
இறந்தனன் -(சித்திராங்கதன்) இறந்திட்டான்,' என்று-, விம்மு - துயரப்படுகின்ற,
தாய் - தாயின், நெஞ்சின் - மனத்திலுள்ள, மிகுதுனி - மிக்க வருத்தம், மாற -
நீங்குமாறு,- தெம் முன்வல்ல -(தம்) பகைவர் முன்னிலையில்
வல்லமைகாட்டற்குரியனான, விசித்திர வீரனை -விசித்திரவீரியனென்பானை,
தம்முன் - அண்ணனாகிய வீடுமன், மீள - மறுபடியும், தனி முடி சூட்டினான் -
ஒப்பற்ற முடியைத் தரிப்பித்தான்; (எ-று.)

     சித்திராங்கதன் தம்பியாகிய விசித்திரவீரியனுக்கே வீடுமன் இராச்சிய
பட்டாபிஷேகஞ்செய்தா னென்க. மூன்றாமடி, 112 - ஆம் பாடலின்
பாடபேதத்திற்குஏற்ப "தெம்முன்வென்ற நற்சித்திர வீரனை" என்று சில
பிரதிகளிற் காணப்படுகின்றது.                                 (123)

116.- விசித்திரவீரியன் அரசுபுரிதல்.

சிற்பொருள்பர மானபொருட்கெதிர்
உற்பவிக்கு முபாயமதென்னவே
விற்படைத்திறல் வீடுமன்வாய்மையால்
பொற்புறப்புவி பூபதியாளுநாள்.

     (இ-ள்.) சித் பொருள் - சித்தாயிருக்கின்ற ஆன்மா, பரம் ஆன பொருட்கு-
பரம்பொருளுக்கு, எதிர் - எதிரிலே, உற்பவிக்கும்-