பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்71

     திரித்தும், உம்மை - உயர்வுசிறப்பு. தம்பியோடுசென்றதாகப்
பாலபாரதத்திலாவது,வியாசபாரதத்திலாவது இல்லை. தம்பியோடு சென்றதாகக்
கூறுவதில், யாதொரு நயமும்காணப்படவில்லை. இனி, தன்னிளவேந்தொடும் -
தன்னிளவேந்தினிடத்தில், 'வரித்தமன்னர் மறங்கெட வன்பினால் திரித்தும்
எம்பியைச் சேர்த்துவல்யான் ' என்று சொல்லி,தரித்தவில்லொடும் வீடுமனேகினான்
என்று இங்குப் பொருள் கூறிவிடலாம்:ஆயினும், 120-ஆஞ் செய்யுளில்
"வெஞ்சராசனவீரனும் தம்பியும், மஞ்சமேறிமணித்தவிசேறினார்" என்றும், 124-
ஆஞ்செய்யுளில் "யானையென்னவிளவலொடேகினான்" என்றும், 126-இல்
'மைந்தர்தங்கள் வளநகர் மன்னினார்' என்றும் வருவதனால், அங்ஙன்
கூறமுடியவில்லை: இனி, அந்தச்செய்யுள்களில், "வெஞ்சராசன வீரனுமேகியே,
மஞ்சமேறிமணித்தவிசேறினான்," "யானையென்னவிரைவினொடேகினான்",
"மைத்தன்றன்ன வளநகரெய்தினான்" என்றாற்போன்றுபாடமிருப்பின் நலம். (126)

119.- இடைவழியில் வீடுமன் இளைப்பாறுதல்.

அரவமாநதி யன்னையுந்தன்மகன்
வரவறிந்து வழியிளைப்பாற்றினாள்
பரவிவந்து பனிமலர்த்தென்றலை
விரவுநுண்டுளி மீதெறியூதையால்.

     (இ -ள்.) அரவம் மா நதி அன்னைஉம் - பேரொலிபடைத்த சிறந்த
நதியாகிய(கங்காநதியென்ற) தாயும்,- தன் மகன் வரவு அறிந்து - தன்
புதல்வனாகியவீடுமன்வருவதை யறிந்து, பரவிவந்து-, பனி மலர் தென்றலை
விரவு - குளிர்ந்தமலர்மணத்தோடுவருகின்ற தென்றலோடு கலந்துள்ள, நுண்
துளி - நுண்ணியநீர்த்திவலையை, மீது எறி - மேலே வீசுகின்ற, ஊதையால் -
காற்றினால், வழிஇளைப்பு- (அவ்வீடுமனது) வழிகடந்துவந்ததனாலான களப்பை,
ஆற்றினாள் -போக்கினாள்; (எ-று.)

     நறுமலர்மணங்கூடிய நீர்த்திவலைகள் கலக்கப்பெற்றுப் பரவி வந்து
மீதெறிகின்றதென்றற்காற்றின்மூலமாய்க் கங்கையாள் வீடுமனுடைய
வழியிளைப்பை மாற்றினளென்க.தென்றலாய் என்றும் பாடம்.           (127)

120.- நிருபர்குழாம் நெஞ்சழிந்துதொழ,வீடுமன்
தம்பியோடு மஞ்சத்தின்மீது மணித்தவிசு ஏறுதல்.

கஞ்சவாவி கலைமதிகண்டென
நெஞ்சழிந்து நிருபர்குழாந்தொழ
வெஞ்சராசன வீரனுந்தம்பியும்
மஞ்சமேறி மணித்தவிசேறினார்.

     (இ-ள்.) கஞ்சம் வாவி - தாமரைத்தடாகம், கலை மதி -பதினாறு
கலைகளையும்படைத்த சந்திரனை, கண்டுஎன - கண்டாற்போல
[மதியைக்கண்டதடாகத்திலுள்ள கமலமலர்கள் போல], நிருபர்குழாம் - மன்னவரின்
கூட்டம், நெஞ்சு அழிந்து - மனம்முரிந்து, தொழ-