வீடுமனும் விசித்திரவீரியனும், தங்கள் வளம் நகர் மன்னினார் - தங்களுடைய வளப்பமுள்ள நகரத்தைச் சேர்ந்தார்கள்; (எ-று.) விந்தியமலையில் வசிப்பவளாதலால் வீரலட்சுமிக்கு 'விந்த்யவாஸிநீ' என்று பெயர்: அச்சொல், விந்தையெனவரும். (134) 127.- போரிற் சற்று முந்திய சாலுவனிடத்து மனஞ்சென்ற தறிந்து, அம்பையை வீடுமன் அவனிடத்துப் போக்குதல். சமரின்முந்திய சாலுவன்மேன்மனம் அமரநின்ற தறிந்துழியம்பையை எமர்களுக்கிஃ தியற்கையன்றென்னவே அமரழிந்த வவனுழைப்போக்கினான். |
(இ-ள்.) சமரில் - (எதிர்த்துப்பொருதபோது) அந்தப்போரில், முந்திய - (சற்று)முற்பட்டவனான, சாலுவன்மேல்-, (அம்பை யென்பவள்,) மனம் - (தன்) நெஞ்சம்,அமர நின்றது - பொருந்த நின்றதை, அறிந்த உழி - (வீடுமன்) அறிந்தபோது,-அம்பையை- (அந்த) அம்பையை (நோக்கி, 'எமர்களுக்கு - எம்மைச்சேர்ந்தோர்க்கு,இஃது -(பிறர்மீது மனஞ்செல்லுங்கன்னிகையைக் கொள்ளுகின்ற) இது, இயற்கை அன்று- தகுதியன்று,' என்ன - என்றுசொல்லி, அமர் அழிந்த அவனுழை போக்கினான் -போரில் தோற்ற அந்தச்சாலுவனிடமே (அவளை) அனுப்பினான்; (எ-று.) சாலுவன் - சாலுவதேசத்து ராசன்: இவன்பெயர் பிரமதத்தனென்பது: இவன் வீடுமனுடன் எதிர்ப்போரில் வலிமையிற்சற்று முந்தினா னென்க. (135) 128.- அம்பிகை அம்பாலிகைகளைத் தன் தம்பிக்கு வீடுமன் மணம்புரிவித்தல். அம்பிகைக்கு மம்பாலிகைக்கும்பதி எம்பியேயெழிலா லென்றிசைவுறத் தம்பிதன்னைத் தனஞ்சயன்றன்னெதிர் வம்பினான்மிகு மாமணஞ்சேர்த்தினான். |
(இ - ள்.) 'எழிலால்- அழகினாலேற்ற, எம்பி ஏ - என் தம்பிவிசித்திரவீரியனே, அம்பிகைக்குஉம்-, அம்பாலிகைக்குஉம்-, பதி - கணவனாவான்,' என்று-என்றுசொல்லி, இசைவுஉற - (அவர்கள்) மனஞ்சம்மதிக்க,தம்பிதன்னை-, தனஞ்சயன்தன் எதிர் - அக்கினிக்கு எதிரே, வம்பினால் மிகு - நறுமணத்தினால்மிக்க, மா மணம்- சிறந்த கலியாணத்தை, சேர்த்தினான் - நடப்பித்தான்; (எ-று.) (136) 129.- சாலுவன், பகைஞன் கவர்ந்த உன்னைக் கொள்ளே னென்றிட, அம்பை மீண்டு வீடுமனைச் சார்தல். சென்றவம்பையைத் தீமதிச்சாலுவன் வென்றுதெவ்வர் கவர்ந்தநின்மெய்தொடேன் என்றிகப்ப விவனுழைமீளவும் மன்றல்வேண்டினண் மன்றலங்கோதையாள். |
|