பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்77

உடன்படாததையும், பேதை கூற (தன்) பெண் சொல்ல,-(அது கேட்டு), மனம்
நொந்து-,இரங்கியவன் - இரக்கங்கொண்டவனான அப்பெண்ணின் தந்தை,
மிக்கநண்பினொடு -மிக்கசினேகத்தோடு, பின்னைஉம் - பின்னும், தூதை ஏவி -
தூதுவரை அனுப்பி,(அத்தூதன்மூலமாக), விசும்பு உலாவு நதி சுதனை -
ஆகாயத்திலுலாவுகின்ற நதியாகியகங்கையாளின் மகனாகிய வீடுமனை, உற்று-
அடைந்து, மணம் இரந்தனன் - (தன்மகளை)  மணஞ்செய்து கொள்ளுமாறு
வேண்டினான்; (எ -று.)

     கோதையால் - மணமாலைமூலமாக என்றபடி: கோதைபா லென்று
பாடமாயின்,தன்னைப் படர்க்கையாகக் கூறியதாகக் கொள்க. பின்னையும் என்ற
உம்மை, முன்புஅம்பை சென்றமையையும் தழுவும்.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினேழுகவிகள் - பெரும்பாலும்
ஒன்றுமூன்று ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும் ஈற்றுச்சீரொன்று விளச்சீரும்,
மற்றைமூன்றும்காய்ச்சீருமாகிவந்த எழுசீராசிரியவிருத்தங்கள்.       (139)

132.- தூதுவர் புகலவும் வீடுமன் மணம்மறுத்தல்.

போனதூதுவர்வணங்கியிம்மொழி புகன்றபோதுமொழிபொய்யுறா
மீனகேதனனைவென்றுதன்கொடிய விரதமேபுரியும்வீடுமன்
மானவேனிருபன்மகள்குறித்ததிரு மன்றல்வன்பொடுமறுத்தலான்
ஆனவாதரவொடாகுலம்பெருக வம்பைதந்தைதனதருளினால்.

இதுமுதல் நான்குகவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) போன தூதுவர் - (அங்குநின்று) சென்ற தூதுர்கள், (வீடுமனை
யடைந்து), வணங்கி-, இ மொழி புகன்ற போது - இந்த வார்த்தையைச்
சொன்னபோது,- மொழி பொய் உறா - (தான்) சொன்ன சொல் தவறாமல்,
மீனகேதனனை வென்று தன் கொடிய விரதம்ஏ புரியும் - மன்மதனைச்
செயித்துத்தன்னுடைய கொடிய விரதத்தையே நடத்துகின்ற, வீடுமன்-, - மானம்
வேல் நிருபன்மகள் குறித்த திரு மன்றல் - பெருமைபெற்ற வேற்படையைக்
கொண்டகாசிராசன்மகள் எண்ணிய சிறந்த விவாகத்தை, வன்பொடு மறுத்தலான்-
கடுமையாகமறுத்திட்டதனால், - அம்பை தந்தை - அந்த அம்பையின் தகப்பனான
காசிராசன்,-ஆன ஆதரவொடு - (தன்மகள் திருமணத்தைப்பற்றிக்) கொண்ட
விருப்புடனே,ஆகுலம் பெருக - துன்பம் மிக,- தனது அருளினால்,-- (எ -று.)-
என்று (கூறினான்),என்று - மேல் 134 - ஆங் கவியோடு இயையும்.
மீனகேதனனைவென்று -காமவிகாரமில்லாமல் என்றபடி. மீனகேதனன் -
மீன்வடிவத்தைக் கொடியிலுடையவன்.                              (140)

133.- 'பரசுராமனைச்சாரின் உன்எண்ணம் முடிவுறலாகும்' என்று
தந்தை மகளுக்கு உபாயங் கூறுதல்.

வரிசையாலுயரநேகமண்டல மகீபர்சொன்னசொன்மறுக்கினும்,
பரசுராமனருண்மொழிமறானவன திருபதத்திடைபணிந்துநீ,
உரைசெய்தாலவனுரைத்தசொல்லின்வழி யொழுகிவந்துநினையுவகையால்,
விரைசெய்மாலைபுனையாதுவீடுமன் மறுத்துமீளவும்விளம்புமேல்.