பக்கம் எண் :

78பாரதம்ஆதி பருவம்

     (இ-ள்.) வரிசையால் - சிறப்பினால், உயர் - மேம்பட்ட, அநேகம் மண்டலம்
மகீபர் - பல மண்டலிகரான அரசர்கள், சொன்ன-, சொல் - சொல்லை,
மறுக்கின்உம்- மறுத்தாலும், பரசுராமன்-, அருள்- கூறுகின்ற, மொழி-பேச்சை,
மறான்- (வீடுமன்)மறுக்கமாட்டான்: (ஆகையால்), -நீ-, அவனது இருபதத்திடை
பணிந்து - அந்தப்பரசுராமனுடைய உபயபாதங்களிலே நமஸ்கரித்து,
உரைசெய்தால் (உன் குறையைச்)சொன்னால், அவன் உரைத்த சொல்லின் வழி -
அந்தப் பரசுராமன் கூறியபேச்சின்வழியே, ஒழுகிவந்து - நடந்துவந்து, நினை -
உன்னை, உவகையால் -மகிழ்ச்சியோடு, விரை செய் மாலை புனையாது -
நறுமணங்கமழ்கின்ற மணமாலைசூட்டாது, வீடுமன்-, மீளஉம் - மீண்டும், மறுத்து
விளம்பும் ஏல் - மறுத்துக்கூறுவானானால்,- (எ-று.)- விளம்புமேல் என்பது,
அடுத்த செய்யுளில் "பெருந்தவம்புரிதி" என்பதனோடு இயையும்.

     குரு ஆதலால் பரசுராமன் மொழியை வீடுமன் மறுக்க மாட்டா னென்று
காசிராசன் கருதினான்.                                    (141)

134.- அம்பை பரசுராமனிருக்குமிடத்தைச் சார்தல்.

பின்னையெண்ணியபெருந்தவம்புரிதி யென்றுகூறியபிதாவையும்
அன்னைதன்னையும்வணங்கிநீடுசது ரந்தயானமிசையம்புயப்
பொன்னைவென்றொளிகொள்சாயலாளிரு புறத்துமாதர்பலர்பொலிவு
தன்னைவந்துபுடைசூழவேகியம தங்கிமைந்தனகர்சாரவே. [டன்

     (இ -ள்.) பின்னை- பிறகு, எண்ணிய - (நீ) நினைத்துள்ள, பெருந்தவம் -
மிக்கதவத்தை, புரிதி - செய்வாய், என்று-, (கூறினான்); கூறிய - (அங்ஙனம்)
சொன்ன,பிதாவைஉம் - தகப்பனையும், அன்னை தன்னைஉம் - தாயையும்,
வணங்கி-, நீடு -நீண்டுள்ள, சதுரந்தயானம் மிசை - பல்லக்கின்மீது, அம்புயம்
பொன்னை வென்று ஒளிகொள் சாயலாள்- தாமரைமலரில் வாழ்பவளான
இலக்குமியைச் சயித்துஒளியைக்கொண்ட மெல்லியலான அம்பை, மாதர்பலர் -
பலமங்கைமார், தன்னை-,வந்து- அடைந்து, இருபுறத்துஉம்-, பொலிவுடன்-
அழகாக, புடைசூழ - சூழ்ந்திருக்க,ஏகி - (அங்கு நின்றும்) போய், யம தங்கி
மைந்தன் - சமதக்கினிமுனிவனுடையகுமாரனாகிய பரசுராமன், நகர் -
இருக்குமிடத்தை, சார - போய்ச்சேர,- (எ-று.) 'புகல"(135) என இயையும்.

     132- ஆம் கவியில்வந்த "தந்தை" என்பதற்கு முடிக்குஞ் சொல் வேண்டி,
'என்று' என்பதன்பின் 'கூறினான்' என்று வருவிக்கப்பட்டது. இங்ஙன்
முடிக்காவிடின்இச்செய்யுளில்  'பிதாவை' என வருவதனால் அந்தச்செய்யுளில்
நின்ற 'தந்தை' என்பதுபயனின்றா யொழியும். யமதங்கி = ஜமதக்நி.    (142)

135.- அம்பை பரசுராமனை யடைந்து தன்குறையைத் தெரிவிக்க,
அவனும் அவள்குறையை முடிப்பதாக உறுதிகூறல்.

காசிராசன்மகளென்றுவந்தனளொர் கன்னியென்றுகடைகாவலோர்
வாசநாறுதுளவோனுடன்புகல வருகவென்றபின்மடந்தைபோய்
ஆசினாலுரைவகுத்துமுற்செய லனைத்துமண்ணலடிதொழுதுபின்
பேசினாளவனும்யாமுடிக்குவமி தென்றுமெய்ம்மையொடுபேசினான்.