பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்79

     (இ -ள்.) கடை காவலோர் - வாயிற்காவலர், வாசம் நூறு துளவோனுடன் -
நறுமணம் வீசுகின்ற திருத்துழாய்மாலையை யணிந்த பரசுராமனிடத்து, காசிராசன்
மகள்என்று ஓர் கன்னி வந்தனள் என்று புகல - காசிராசன் பெண்ணென்று
ஒருகன்னிகைவந்துள்ளாளென்றுசொல்ல,- (அந்தப்பரசுராமன்), வருக என்று பின்-
'வருவாயாக' என்று  சொன்ன பின்பு, மடந்தை - இந்தப் பெண், போய்-
(பரசுராமனிருக்குமிடஞ்)சென்று, முன் ஆசினால் உரை வகுத்து - முதலில்
வாழ்த்தினால் பேசி [வாழ்த்தி], பின்- பிறகு, அண்ணல் அடிதொழுது -
பெருமையிற் சிறந்தோனாகியஅந்தப்பரசுராமனுடைய பாதங்களில் வணங்கி,
செயல் அனைத்துஉம் பேசினாள் -(முன்னே) நிகழ்ந்த செய்திகளையெல்லாஞ்
சொன்னாள்; அவன்உம் -அந்தப்பரசுராமனும், இது - இந்தஉன்கருத்தை, யாம்-,
முடிக்குவம் -நிறைவோற்றுவோம், என்று-, மெய்ம்மையொடு - உறுதியாக,
பேசினான்-சொன்னான்;

     முன்நிகழ்ந்தது - மணமாலையைச் சாலுவனுக்குச் சூட்டக் கருதியது
முதலியன. ஆசினால் - விரைவோடுஎன்பாருமுளர்.                   (143)

136.- பரசுராமன் அம்பையுடன் வீடுமனதுநகரைச் சேர அன்னான்
எதிர்கொண்டு அப்பரசுராமனை வணங்குதல்.

வரதன்வீரமழுவாலநேககுல மன்னர்வேரறமலைந்தகோன்
இரதமீதவளுடன்கணப்பொழுதி னேறியையிருதினத்தினில்
விரதமாபரணமெனவணிந்ததிறல் வீடுமன்பதியின்மேவலும்
சரதமாகவெதிர்கொண்டவன்சிர மிவன்பதத்தினிடைசாத்தினான்.

     (இ-ள்.) வரதன் - (வேண்டுவார்க்கு வேண்டிய) வரத்தைக் கொடுப்பவனும்,
வீரம்மழுவால் அநேக குலம் மன்னர் வேர் அறமலைந்த கோன் -
வீரத்தோடுகூடியமழுப்படையால் பலகுலத்தில் தோன்றிய அரசரும்
வமிசநாசமாகுமாறு பொருததலைவனுமாகிய அந்தப்பரசுராமன், கணம் பொழுதின்
- ஒருகணப்போதிற்குள்ளே,இரதம்மீது - (தன்) தேரின்மீது, அவளுடன் - அந்த
அம்பையுடனே, ஏறி-,- ஐ இருதினத்தினில் - பத்துத்தினங்களில், விரதம்
ஆபரணம் என அணிந்த திறல் வீடுமன் -விரதத்தையே ஆபரணமாகப் பூண்ட
வலிமையுள்ள வீடுமனுடைய, பதியின் -பட்டணத்திலே [அஸ்திநாபுரியிலே],
மேவலும் - சேர்ந்தவுடனே,- சரதம் ஆக -(மனத்தில்) அன்புதோன்ற,
எதிர் கொண்டு-, அவன் - அவ்வீடுமன், சிரம் - (தன்)சிரசை, இவன்
பதத்தினிடை - இந்தப் பரசுராமன் பாதத்திலே, சாத்தினான் -சேர்த்தினான்;
(எ-று.)

     சரதம் - உண்மையென்பாருமுளர்;  மூன்னையபொருளில், ஸரஸ மென்ற
வடசொல்லின் விகாரம்.                                         (144)

137.- வீடுமன் பரசுராமனை யுபசரித்தபின், பரசுராமன்
அம்பையை மணந்துகொள்ளுமாறு வீடுமனிடம் கூறுதல்.

தனக்குவின்மைநிலையிட்டகோவையொரு தமனியத்தவிசில்வைத்துநீ,
எனக்குநன்மைதரவந்தநற்றவ மிருந்தவாவெனவிருந்தபின்,
கனக்கும்வெண்டரளவடமுலைப்பெரிய கரியகண்ணியிவள் காதலால்,
உனக்குமன்றல்பெறவுரியளாகுகென வுவகையோடவனுரைக்கவே
.