பக்கம் எண் :

80பாரதம்ஆதி பருவம்

நான்குகவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) தனக்கு-, வின்மை - வில்லின்நிலைமையை, நிலையிட்ட -
நிலையாகவுணர்த்திய, கோவை - உபாத்தியாயனான பரசுராமனை, ஒரு தமனியம்
தவிசில் வைத்து - ஒரு பொற்பீடத்திலிருக்கச்சொல்லி, 'நீ-, எனக்கு-, நன்மை
தர -மிக்க மேன்மையைத் தருமாறு, வந்த - (இங்கு) எழுந்தருளிய, நல் தவம் -
(என்னுடைய) சிறந்த தவம், இருந்த ஆ இருந்தவகை (என்னே!)', என - என்று
(வீடுமன்) முகமன்கூற, இருந்தபின் - (பரசுராமன் அந்தத்தமனியத் தவிசில் தங்கி)
இருந்தபின்பு,- 'வெள் தரளம் வடம்  கனக்கும் முலை பெரிய கரிய கண்ணி
இவள் -வெண்ணிறமுள்ள முத்துவட மணிந்த பருத்த தனங்களையும்
பெரியனவும்கரியனவுமான கண்களையுமுடைய இந்த அம்பை யென்பவள்,
காதலால் -ஆசையோடு, உனக்கு-, மன்றல்பெற - மணந்துகொள்ளுதற்கு, உரியள்
ஆகுக-, என- என்று, உவகையோடு - மனமகிழ்ச்சியோடு, அவன் - அந்தப்
பரசுராமன், உரைக்க- சொல்ல,-(எ-று.)- ஆகுகென - தொகுத்தல்.
பெரியகரியகண் - ஈரடை.                                       (145)

138.- இதுவும் அடுத்தகவியும் - வீடுமன் தன்விரதத்தைத்
தெரிவித்துப் பரசுராமனிடம் அம்பையை மணந்துகொள்ள
மறுத்ததைத்தெரிவிக்கும்.

இன்சொலாலவனிகொண்ட வெந்தைமுத லின்பமன்றலினிதெய்தநான்,
வன்சொலாலிரதமணமுறேனென மனத்தினால்விரதமன்னினேன்,
நின்சொல்யாவருமறாரெனக்கருதி நீயுரைப்பினுநிகழ்ந்தவிப்,
புன்சொலான தினிமாதவத்தின்மிகு  புனிதவென்செவிபொறுக்குமோ.

     (இ-ள்.) இன்சொலால் - இனிய சொல்லினால், அவனி - உலகத்தாரை,
கொண்ட- (தன்) வசமாக்கிக்கொண்ட, எந்தை - என் தந்தை, முதல் - முன்பு,
இன்பம் மன்றல்- இன்பத்தை யனுபவிதற்குஉரிய விவாகத்தை, இனிது எய்த-
இனிதுபெறுமாறு, வன் சொல்-சபத வார்த்தைகளால், 'நான்-, இரதம் மணம் -
இன்பமனுபவித்தற்குரியவிவாகத்தை, உறேன் - பெறாமலிருப்பேன்,' என -
என்று, மனத்தினால் -மனப்பூர்வமாக, விரதம் - ஒருவிரதத்தை, மன்னினேன் -
பொருந்தினேன்: நின்சொல்யாவர்உம் மறார் என கருதி நீ உரைப்பின்உம் -
உன்னுடைய சொல்லை எவரும்மறுத்துச் சொல்லாரென்று கருதி நீ
(என்னைமணந்துகொள்ளுமாறு) கூறினாயானாலும்,மாதவத்தின் மிகு புனித -
பெருந்தவத்தினால் மிக்க பரிசுத்த மூர்த்தியே! நிகழ்ந்த இபுன்சொல் ஆனது -
(உன்னிடத்தினின்று) வந்த இந்த அற்பமான சொல்லாகியதை,இனி - இப்போது,-
என் செவி பொறுக்கும் ஓ - என்செவி யேற்று நிற்குமோ? (எ -று.)

     குருவின்மொழி தள்ளத்தகாத தென்றலும், விரதம்பூண்ட எனக்கு இது
புன்மொழியாகுதலால், இதனைக் கேளேனென்றான். இரதம் = ரதம்: புணர்ச்சி. (146)

139.களம்புகுந்தவரைமீளவேகுதல் கொடாதகார்முகவினோதகேள்,
உளம்புகுந்தினிதிருக்குநற்கடவு ளுன்னையன்றியிலை
                                      யுண்மையே,
வளம்புனைந்தவநுராகபோகமிகு மாதர்மங்கையர்
                                   பொருட்டினால்,
விளம்புமிந்தமொழியொழிகவென்றனுயிர்வேண்டுமென்னினும்
                                     வழங்குவேன்.