141.- 'விரதந்தவறுவதைவிடக் குருவுடன்பொருது மாண்டாலும் நன்று' என்று வீடுமனும் பொருமாறு தேரிலேறுதல். வெருவுடன்றொழுதுகங்கைமைந்தனடி வீழவுஞ்சினமிகுத்தலால் உருவுடன்றனியிருக்குநீள்விரதம் வழுவிநானரகமுறுவதின் குருவுடன்பொருதுமடிதனன்றென நினைந்துதாலமுயர்கொடியினன் செருவுடன்றிடுதலுன்னியேறின னமைந்துநின்றதொருதேரின்மேல். |
(இ-ள்.) கங்கைமைந்தன் - கங்காதேவியின்குமாரனான வீடுமன், வெருவுடன் -அச்சத்துடனே, தொழுது - வணங்கி, அடிவீழஉம் - (தன்) பாதத்தில் வீழ்ந்துவேண்டவும்,- (பரசுராமன்), சினம் - (தன்) வெகுளியை, மிகுத்தலால் - மிகுதியாகக்கொண்டிருந்ததனால்,- 'உருவுடன் - (பிறருக்கு) அச்சந்தோன்றும் நிலையுடனே, தனிஇருக்கும் - ஒப்பற்றுள்ள, நீள் - சிறந்த, விரதம் - நோன்பை, நான்-, வழுவி- தவறி,நரகம் உறுவதின் - நரகத்தை யடைவதைக் காட்டிலும், குருவுடன் பொருது மடிதல்நன்று - (என்) ஆசிரியனோடு போர்செய்து இறந்திடுதல் சிறந்ததாகும், ' என - என்று, தாலம் உயர் கொடியினன் - பனைமரத்தை யெடுத்து (த் தூக்கி)க்கட்டிய கொடியையுடையவனாகிய அந்த வீடுமன், நினைந்து-, செரு உடன்றிடுதல் உன்னி -போரினால் மாறுபடுதலைக் கருத்துட்கொண்டு, அமைந்து நின்றது ஒரு தேரின்மேல் -சித்தமாகஇருந்ததொரு தேரின்மேலே, ஏறினன்-; (எ-று.)- "உருவுட்காகும்" என்பது,தொல்காப்பியம். 142.- இதுவும் அடுத்த கவியும் - ஒருதொடர்: பரசுராமனை வீடுமன் வென்றிட, அவ்விருவருந் தம்மிருப்பிடஞ்சேர் தலையும், அம்பை தவவனமடைந்தமையையும் கூறும். அவ்விராமனுமறுத்தமன்னவனு மையிரண்டுதினமிகலுடன் வெவ்விராவுமொழியாதுவெஞ்சமர் விளைத்தகாலையடல்வீடுமன் கைவிராயசிலையோடுமெய்வலி கவர்ந்துமுன்றளர்வுகண்டபோர் அவ்விராமனிகரென்னுமாறிவனை யஞ்சிநின்றெதிரடர்க்கவே. |
(இ-ள்.) அ இராமன்உம் - (அம்பையை மணந்துகொள்ளுமாறு கூறிய) அந்தப்பரசுராமனும், மறுத்த மன்னவன்உம் - (அச்சொல்லை) மறுத்துக்கூறிய க்ஷத்திரியனான வீடுமனும், ஐ இரண்டு தினம் - பத்துநாள், இகலுடன் - மாறுபாட்டினுடனே, வெவ் இரா உம் ஒழியாது - கொடிய இரவிலுங்கூட நீங்காமல்[இரவும் பகலுமாக], வெம்சமர் - கொடியபோரை, விளைத்தகாலை-,- அடல் வீடுமன் -வலிமை பொருந்திய வீடுமன், முன் - முன்பு, கை விராய சிலையோடு - கையிற்பொருந்திய வில்லின்மூலமாக, மெய் வலி கவர்ந்து - (அந்தப் பரசுராமனுடைய)உடல்வலிமையைப் பறித்துக் கொண்டு, தளர்வுகண்ட - தளர்ச்சியையுண்டாக்கிய, போர்- போரில்வல்ல, அ இராமன் நிகர் - அந்தத்தசரதராமன் நிகராவான், என்னும் ஆறு- என்று (கண்டவர்) சொல்லுமாறு, (அப்பரசுராமன் வலிமையைக் கவர்ந்திடப்பிறகுஅவ்விராமன்),- இவனை- இந்த வீடுமனை, எதிர் அடர்க்க அஞ்சிநின்று - எதிர்த்துப்பொருதற்கு |