அச்சமடைந்து நின்று,-(எ-று.) "ஓடி... ஊர்புகுந்தனன்" (143) என்று தொடரும். தசரதராமன் சிவதனுசையொடித்துச் சீதையை மணந்து கொண்டு அயோத்திக்குவரும் நெறியிலே பரசுராமன் எதிர்ப்பட்டு அவ்விராமபிரானை வலுவிற்போருக்குஅழைக்க, அவன் அந்தப் பரசுராமனை வில்லின்மூலமாக வலிமையைக்கவர்ந்துதளர்வுறச் செய்தமை இராமாயணத்திற் பிரசித்தம். (150) 143. | ஓடிமீளமழுமேவுபாணிதன தூர்புகுந்தனனுவந்துபல் கோடிபேரரசர்துதியெடுக்கநதி குமரனுந்தனகர்குறுகினான் நாடிமாலையிடவந்தகாசிபதி நல்குமொல்குமிடைநவ்வியும் வாடிவாடியினியமையுமென்றுதவ வனமடைந்தனண்மடங்கி[யே. |
(இ-ள்.) ஓடி- (புறங்கொடுத்து) விரைந்துசென்று, மீள - மீண்டும், மழுமேவு பாணி - பரசுபொருந்தியகையையுடைய பரசுராமன், தனது ஊர் புகுந்தனன்-:நதிகுமரன்உம்- கங்காநதியின் குமாரனிாகிய வீடுமனும்,- பல் கோடி பேர் அரசர்-,உவந்து - மன மகிழ்ந்து, துதி எடுக்க - தோத்திரஞ் செய்ய, தன் நகர் குறுகினான் -தன்இருப்பிடஞ்சேர்ந்தான்: நாடி - விரும்பி, மாலைஇட - மணமாலையைச் சூட்டுமாறு,வந்த-, காசிபதி நல்கும் ஒல்கும் இடை நவ்வி உம் - காசியரசன்பெற்றதளர்ந்துமெலியும் இடையையுடைய மான் போன்றவளான அம்பையென்பவளும், வாடிவாடி - மிகவும் மனந் தளர்ந்து, இனி அமையும் - இனி (த் தவஞ்செய்தலே எனக்கு)அடுக்கும், என்று-, மடங்கி- (மணஞ்செய்து கொள்ளும் முயற்சியினின்று) மீண்டு, தவவனம் அடைந்தனள் - தபோவனத்தைச் சேர்ந்தாள்; (எ-று.) அமையும் - மணஞ்செய்துகொள்ள முயல்வது போலும் எனினுமாம். வாடிவாடி- மிகுதிப்பொருளது, மழுமேவுபாணி -அன்மொழித்தொகை. (151) 144.- இந்தவீடுமனை வெல்லுஞ் சூரனாவேனென்று உறுதி கொண்டு அந்த அம்பை பெருந்தவமியற்றுதல். வெம்பையாடரவமாயவென்றிடு விகங்கராசனெனவீடுமன் தும்பையாடமரின்மாயவெல்லவல சூரனாகுவனியானெனா வம்பைமோதுமுலைவம்பைவீசுகுழல் வம்பைமன்னுமெழில்வரிகொ[ள்கூர் அம்பைமானும்விழியம்பையென்பவளு மரியமாதவமியற்றினாள். |
(இ-ள்.) வெம் பை ஆடு அரவம் - கொடியபடத்தையெடுத்து ஆடுகின்ற சர்ப்பம், மாய - ஒடுங்கும்படி, வென்றிடு - சயிக்கின்ற, விகங்கராசன் என - பட்சிகட்குஅரசனான கருடன்ஒப்புஆகுமாறு, தும்பை ஆடு அமரின் வீடுமன் மாய -தும்பைமாலைசூடிக்கொண்டு செய்யப்படுகின்ற போரிலே வீடுமன் உயிரிறக்கும்படி,வெல்ல வல - வெல்லும் வல்லமைபெற்ற, சூரன் ஆகுவன் யான் - சூரனாவேன்யான், எனா என்றுசொல்லி,- வம்பை மோதுமுலை - கச்சை மோதுகின்றதனங்களையும், வம்பை வீசு குழல் - வாசனை வீசுகின்ற கூந்தலையும், வம்பைமன்னும் எழில் - புதுமைபொருந்திய |