4. | ஈண்டுதேவரநீதியிற் கொழுந்தியரெழின்மகப்பெறநின்னால் வேண்டுமாலிதுதாயர்சொற் புரிதலின்விரதமுங்கெடாதென்ன மூண்டுவானுருமெறிந்தபே ரரவெனமுரிந்திருசெவிபொத்தி மீண்டுமாநதிவயின்மிசைப் புரியினென்விரதமுந்தபுமென்றான். |
(இ-ள்.) ( 'இந்த எனதுதுன்பம்நீங்க), ஈண்டு - இப்போது, தேவரநீதியின் - தேவரனால் [கணவனுடன்பிறந்தவனால்] சந்ததியை வளர்த்தாலாகிற ஓர் முறைமைப்படியே, நின்னால்-, கொழுந்தியர் - உடன்பிறந்தானுடையமனைவிமார், எழில் மக பெறவேண்டும் - அழகிய புத்திரரைப் பெறவேண்டும்: இது - இச்செயல்,தாயர் சொல் புரிதலின் - தாய்சொல்லியதைச் செய்யுஞ்செயலாதலால், விரதம்உம்கெடாது - (பெண்களைமணவாமையாகிய) உன்னுடைய நோன்பும் கெட்டிடாது,' என்ன- என்று கூற,- வான் உருமு- மேகத்தினின்று தோன்றும் இடி, மூண்டு-, எறிந்த-எறியப்பட்ட, பேர் அரவுஎன - பெரியசருப்பம்போல, முரிந்து - (மனம்) கெட்டு, இருசெவி பொத்தி - (தனது) இரண்டுகாதுகளையும் (கைகளால்) மூடிக்கொண்டு, மீண்டு மாநதி வயின்மிசை - மறுபடியும் சிறந்தநதியாகிய கங்கையின் வயிற்றிலே, புரியின் -விரும்பிச் சென்று பிறப்பதனால், (அப்போது), என் விரதம்உம் தபும் - இந்தஎன்விரதமும் ஒழியும், என்றான் - என்ற கூறினன், (வீடுமன்); (எ -று.) - ஆல் -அசை. பூமியிற்சென்று பெண்ணின்பமற்றிருக்குமாறு சாபம்பெற்ற நான் பெண்ணின்பமடைந்தால், இந்தப்பிறவியால் சாபத்தின் பயனை நுகராமையால், சாபத்தின்பயனைப்பெறுமாறு மீண்டும் பிறக்கவேண்டுவதே யென்றனன் வீடும னென்க. நெருப்பு தன்வெம்மையை விடுமானால் அப்போது கங்கை மகன் தன்பிரதிஜ்ஞையைவிடுவான்என்று கூறியதாகப் பாலபாரதத்திலுள்ளது. தேவரநீதியென்பது - கணவனையிழந்துமகப்பெறாத கைம்பெண்ணானவள் சந்ததிவிருத்தியின்பொருட்டுத் தேவரனோடு[தேவரன் - கணவனுடன் பிறந்தவன்] சேர்ந்து மகப்பெறலா மென்ற முறைமை. (159) 5.- பரசுராமனால் க்ஷத்திரியகுலம் அற்றுப்போவதாயிருந்த நிலையில் முனிவரால் அரசமாதர் மகவைப்பெற்றாற்போற் செய்விப்பதே முறையென்று வீடுமன் தெரிவித்தல். மழுவெனும்படையிராமனான் மனுகுலமடிந்துழியவர்தத்தம், பழுதின்மங்கையர்முனிவர ரருளினாற்பயந்தனர்மகவென்பர், எழுதுநன்னெறிமுறைமையின் விளைப்பதேயியற் கையென்றிருகையால், தொழுதுசொன்னபின்மனந்தெளிந்தன்னையுந்தோன்றலுக்குரை செய்வாள். |
(இ-ள்.) மழு என்னும் படை இராமனால் - மழுவெனப்படுகின்ற படைக்கலத்தையுடைய பரசுராமனால், மனு குலம் மடிந்தஉழி - மனுவினிடத்துநின்றுதோன்றிய குலம் அழிந்திட்டபோது, அவர் தத்தம் பழுது இல் -மங்கையர் - அந்தமனுக்குலத்தைச்சேர்ந்த மன்னவருடைய குற்றமற்ற மனைவிமார்,முனிவரர் அருளினால் - முனிச் |