பக்கம் எண் :

96பாரதம்ஆதி பருவம்

18.- மீண்டும் காளி வியாசனை நினைத்து, வந்த அவனிடத்துத் தன்
கருத்தைச்சொல்ல, அந்தரிஷியைக் கண்டு அஞ்சிய அம்பிகை தோழியை
அணையிற்செல்ல ஏவுதல்.

காணலும்பெரிதுவகையற் றின்னமுங்கருதுதுமெனவெண்ணச்
சேணடைந்தமாமுனிவரன் வருதலுஞ்சிந்தனையுறச்சொல்ல
நாணலந்திகழம்பிகை யிடத்திவனண்ணலுமவளஞ்சிப்
பூணலம்பெறுதோழிமற் றொருத்தியைப்பூவணையணைவித்தாள்.

     (இ-ள்.) காணலும் - (அக்குழந்தைகளைக்) கண்டபின்பு, பெரிது உவகை
அற்று -மிக்கமகிழ்ச்சியின்றி, 'இன்னமும்-, கருதுதும் - (நம்முதற் புதல்வனாகிய
வியாசனை)நினைப்போம்,' என - என்று (மனத்திற்) கருதி, எண்ண-
(அவ்வாறே)நினைக்க, சேண்அடைந்த மா முனிவரன் - வெகுதூரத்துச்சென்றிருந்த
சிறந்தமுனிச்சிரேஷ்டன்[வியாசன்], வருதலும் - (தன்முன்) வந்தவுடனே,
(அந்தக்காளி),சிந்தனை - (தன்) கருத்தை, உற சொல்ல - நன்குதெரிவிக்க,- (தன்
தாயின்சொற்படியே), இவன் - இந்த வியாசமுனிவன், நாண் நலம் திகழ்
அம்பிகையிடத்து-நாணின் நன்மை விளங்குகின்ற அம்பிகை யென்பாளைச்
சேரவேண்டுமிடத்திலே,நண்ணலும் - கிட்டவும்,- அவள் - அம்பிகை, அஞ்சி -
அச்சங்கொண்டு, பூண் நலம்பெறு தோழி மற்று ஒருத்தியை -
ஆபரணங்களினாலழகு பெற்ற (தன்னினும்) வேறானஒரு தோழியை, பூ அணை
அணைவித்தாள் - பூப்போன்ற மெல்லிய படுக்கையிலேசேருமாறு செய்தாள்; (எ-று.)

     பூணலம்பெறு தோழி என்றதனால், அந்தப்பரிசாரிகைப் பெண் தன்னை
யினிதாகஅலங்கரித்துச் சென்றா ளென்பது பெறப்படும்: பாலபாரதத்தில்
"விதக்தநைபத்யவதீததந்திகம்யயௌ" என்று உள்ளது.                  (173)

19.- அவளோடு இன்பந்துய்த்தபின் வியாசமுனி தாயினிடம் வருதல்.

வந்தகாலையின்மனங்கலந் தநங்கநூன்மரபின்மெய்யுறத்தோய்ந்து
சந்தனுகருப்பரிமளத் தனதடந்தயங்குமார்பினின்மூழ்க
இந்திராதிபர்போகமுற் றிசைதலுமின்பமுற்றியபின்னர்
அந்தணாளனவ்விரவிடை மீளவந்தன்னையோடுரைசெய்வான்.

     (இ-ள்.) வந்த காலையில் - (அம்பிகையின்தோழி) வந்தபோது, மனம் கலந்து -
மனம் (அன்னாளிடம்) பொருந்தப்பெற்று, அநங்க நூல் மரபின் -
காமசாஸ்திரத்திற்கூறிய முறைப்படி, மெய்- (அவளுடைய) உடலை, உற தோய்ந்து -
நன்கு கலந்து,- சந்தன அகரு பரிமளம் தன தடம் - சந்தனக்குழம்பு அகில்தேய்வை
இவற்றின் நறுமணம் பொருந்திய (அவளுடைய) கொங்கைத்தலம், தயங்கு
மார்பினில் -விளங்குகின்ற (தன்) மார்பிலே, மூழ்க - அழுந்த, இந்திராதிபர்
போகம் -தேவேந்திரராகிய தலைவர் நுகரும் காமவின்பத்தை, உற்று - அடைந்து,
அந்தணாளன்- வியாசன், இசைதலும் - மனம் பொருந்தியிருத்தலும், இன்பம்
முற்றியபின்னர் -அவ்வின்பம் பூர்த்தியாயின பின்பு, அஇரவிடை - அந்த இரவில்,
மீள வந்து - மீளவும்வந்து, அன்னையோடு - தாயுடனே, உரை செய்வான்-; (எ-று.)