பக்கம் எண் :

சம்பவச் சருக்கம்97

     முதன் மூன்றடிகள் - தோழிப்பெண் அந்தமுனிவன் மனத்தைக் கவர, அவன்
பரவசனாகி இன்பமனுபவித்த தன்மையை விவரிக்கும்: "கீதத்தினால் மான்
வசப்படுவதுபோல அந்தப்பரிசாரிகைப் பெண்ணால் ஐம்புலனைவென்ற அந்த
மஹர்ஷி வசீகரிக்கப்பட்டான்" என்று பாலபாரதம் கூறும்.               (174)

20.- நிகழ்ந்தசெய்தியைத்தாய்க்குச்சொல்லி, 'யமனமிசமாகப்பிறக்கும்
இம்மகப்பெயர் விதுரன்' என்றும் 'இனிப் புத்திரர் பொருட்டு என்னை
நினையற்க' என்றும் கூறி வியாசன் செல்லுதல்.

அம்பிகைக்கொடிதோழியைவிடுத்தன ளவள்புரிதவந்தன்னால்
உம்பரிற்பெறுவரத்தினாற்றருமன் வந்துதித்திடும்பதம்பெற்றாள்
வெம்படைத்தொழில்விதுரனென்றவன் பெயர்மேலினிமகவாசை
எம்புணர்ப்பினானொழிகெனவனநெறி யேகினன்விடைகொண்டே.

     (இ-ள்.) 'அம்பிகை கொடி - அம்பிகையென்ற பெண், தோழியை
விடுத்தனள் -(என்னோடு சேரும்படி தன்) தோழியை யனுப்பினாள்: அவள்-,புரி -
(முன்)செய்துள்ள, தவந்தன்னால் - தவத்தினாலும், உம்பரில் பெறு வரத்தினால் -
தேவர்களிடத்துப் பெற்ற வரத்தினாலும், தருமன் வந்து உதித்திடும் பதம் பெற்றாள்-
(தன்வயிற்றிலே) அறக்கடவுளானயமன் வந்துதோன்றும்பதவியைப் பெற்றாள்:
அவன்பெயர்-,-, வெம் படை தொழில் - கொடிய படைக்கலத்தொழிலிலேவல்ல,
விதுரன் என்று - விதுரனென்பது: இனி மேல்-, எம் புணர்ப்பினான் - எம்முடைய
சம்பந்தத்தினால், மகவு ஆசை - குழந்தையைப்பெறுதலில் ஆசையை, ஒழிக-,' என-
என்று சொல்லி, விடைகொண்டு - (தாயிடம்) விடைப்பெற்றுக்கொண்டு,
(அந்தவியாசன்), வனம் நெறி ஏகினன் - காட்டுவழியே சென்றான்;

     ஆணிமாண்டவ்யமுனிவனதுசாபத்திற்கு விஷயமான யமன், விதுரனென்று
இந்தப்பரிசாரிகைப் பெண்ணுக்குப் பிறக்கப்போகிறானென்று வியாசமுனிவன்
கூறியதாகப் பாலபாரதத்துஉள்ளது.                                (175)

21.- மூன்றுபுத்திரரும் பலகலைகளையும் வீடுமனிடம் கற்றல்.

மருவருங்குழற்றாசிபெற்றெடுத்தவிம் மைந்தனுமுதற்பெற்ற
இருவருங்குருகுலப்பெருங்கிரிமிசை யிலங்குமுக்குவடென்னப்
பொருவருந்திறற்படைகளுங்களிறுதேர் புரவியும்புவிவேந்தர்
வெருவரும்படிபலகலைவிதங்களும் வீடுமனிடங்கற்றார்.

     (இ-ள்.) மரு வரும் குழல் - நறுமணம்பொருந்திய கூந்தலையுடைய, தாசி -
பரிசாரிகைப்பெண், பெற்று எடுத்த-, இ மைந்தன் உம் - (விதுரனென்ற)
இந்தப்புதல்வனும், முதல் பெற்ற இருவர்உம் - முன்னமே அம்பிகை
அம்பாலிகைகளாற் (பெறப்பட்ட) திருதராட்டிரன் பாண்டு என்ற இரண்டு புத்திரரும்,
குருகுலம் பெருங்கிரி மிசை - குருகுலமாகிய பெரிய மலைமீது, இலங்கும்
முக்குவடுஎன்ன - விளங்குகின்ற மூன்றுசிகரம்போல (த்தோன்றியவண்ணம்),- பொரு
அரு திறல் படைகள்உம் - ஒப்பற்றவலிமையையுடைய [வலிமை கொண்டு
பயன்படுத்தக்கூடிய] படைக்கலங்களையும், களிறு தேர் புரவிஉம் - யானை இரதம்
குதிரை என்ற இவைகளையும், புவிவேந்தர்