சங்குகளினின்றுமுத்துப் பிறக்கு மென்பதை, "தந்திவராக மருப்பிப்பிபூகம் தழை கதலி, நந்து சலஞ்சல மீன்றலைகொக்குநளின மின்னார்,கந்தரஞ்சாலி கழை கன்னலாவின்பல் கட்செவிகா, ரிந்து வுடும்பு கராமுத்த மீனுமிருபதுமே"என்னும் கட்டளைக்கலித்துறையினால்அறிக. தமனியம் - தபநீயம் என்ற வடசொல்லின் திரிபு:நெருப்பினாற் காய்ச்சப்பட்டு நன்கு விளங்குவது எனக் காரணப்பொருள்படும். நடித்தலாகிய காரணத்தை 'சிலம்பொலிகூரும்'எனக் காரியத்தாற் கூறினார்: உபசார வழக்கு. மண்டபம் என்றது - சுதர்மையென்னுந் தேவசபையை, ஆஸநம் - வீற்றிருக்குமிடம். (139) 140.-இந்திராணிவருதல். முருகவிழ்பரிமள மொய்த்ததண்டுழாய் மரகதகிரிதிரு மைத்துனன்றனைப் பெருமிதவபிமனைப் பெற்றகாளையை அருள்பெறுமுவகையோ டன்னையெய்தினாள். |
(இ - ள்.) முருகு அவிழ் - தேன் சொரிகின்ற, பரிமளம் மொய்த்த- வாசனை நிரம்பிய, தண் துழாய் - குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய, மரகத கிரி - மரகத ரத்தினமயமான மலைபோற் கருநிறமான கண்ணபிரானது, திரு மைத்துனன் தனை - அழகிய அத்தைபிள்ளையும், பெருமிதம் அபிமனை பெற்ற காளையை-வீரத் தன்மையையுடைய அபிமந்யுவைப் பெற்ற வீரனுமாகிய அருச்சுனனை, அன்னை - தாயாகிய இந்திராணி, அருள் பெறும் உவகையோடு - கருணையைக்கொண்ட களிப்புடனே, எய்தினாள் - வந்து அடைந்தாள்;(எ - று.) தந்தையாகிய வசுதேவருக்கு உடன்பிறந்தமுறை யாதலால், குந்தி கண்ணனுக்கு அத்தையாவள்: அவள் மகனாதலால், அருச்சுனன் கண்ணனுக்கு மைத்துனனாயினான்;அத்தைமைந்தனை'மைத்துனன்' என்பது, முற்காலத்து வழக்கம்போலும். உடன் பிறந்தவளது கணவனை மைத்துனனென்று வழங்கும் வழக்கத்தின் படியும், கிருஷ்ணனது உடன்பிறந்தவளாகிய சுபத்திரையென்பவளை அருச்சுனன் மணஞ்செய்து கொண்டதனால், அவன் கண்ணனுக்கு மைத்துனனாவான் என்று அறிக. எல்லாரோடும் ஒப்பநில்லாமற் பேரெல்லையாக நிற்றல்பற்றி, வீரத்துக்குப் பெருமிதமென்று பெயர். அபிமன் - வடமொழித்திரிபு:இவன் சுபத்திரையினிடம் பிறந்தவன்;தந்தையாகிய இந்திரனது மனைவியாதல்பற்றி, இந்திராணி அருச்சுனனுக்கு அன்னையாயினாள். (140)141.-அருச்சுனன் இந்திராணியை வணங்குதல்.அன்னையைமின்னிடையரியபாவையைக் கன்னலையமுதொடுகலந்தசொல்லியை உன்னருந்தவப்பய னுற்றமைந்தனும் சென்னியையவள்பதஞ் சேர்த்துநின்றனன். |
|