பக்கம் எண் :

106பாரதம்ஆரணிய பருவம்

வாழ்த்தி வாழ்த்தி- பலமுறைவாழ்த்தி,-தூய செம் பரு மணி சுடரும் மாளிகை
ஏயினள் - சுத்தமான [குற்றமில்லாத]சிவந்த பருத்த இரத்தினங்கள்
பதிக்கப்பட்டு விளங்குகிற (தன்) இருப்பிடத்துக்குச்சென்றாள்;(எ-று.)

    ஆயிரம் பதின்மடங்காக - தேவேந்திரனைவிடப்பதினாயிரம்பங்கு
அதிகமாக என்றுமாம்.  வாழ்த்தி வாழ்த்தி - அடுக்கு, பன்மைப்பொருளது.
மாளிகை - அந்தப்புரம்.  இந்திரனி தயம்போன்றுளாள் என்பதற்கு -
கணவனது கருத்துக்குச் சிறிதும் மாறுபடாமலொழுகுபவளென்று கருத்து.
சக்களத்திமக னென்று சிறிதும் வெறுப்புறாமல்அருச்சுனனிடத்து இந்திராணி
மிக அன்பு பாராட்டியதனால்,இங்ஙனங் கூறினார். இதற்கு அருச்சுனனை
மானிடனெனக்கருதாது தேவேந்திரன்போலக் கருதி
உபசரித்தாளென்றலுமுண்டு.                                  (143)

144.-அத்தேவலோகத்தில் பலவகையொலி அப்போது
ஒலித்தல்.

அந்தரதுந்துபி யதிரும்பேரொலி
முந்தியமறையொலி முழங்குஞ்சங்கொலி
சிந்துரமதகிரி சீறுநீடொலி
சுந்தரமுகிலொலி தூங்கத்தூங்குமால்.

     (இ - ள்.)(அத்தேவலோகத்தில்), அந்தர துந்துபி அதிரும் பேர் ஒலி
- மேலுலகத்திற்குஉரிய பேரிகைவாத்தியங்கள் முழங்குகின்ற பேரோசையும்,
முந்திய மறை ஒலி - தலைமைபெற்றவேதங்களின் பாராயண ஓசையும்,
சங்கு முழங்கும் ஒலி - சங்கங்கள் ஒலிக்கின்ற ஒலியும், சிந்துரம் மத கரி
சீறு நீடு ஒலி - சிந்தூரத்திலகமணிந்த மதம்பிடித்த யானைகள்சினந்து
பிளிறுகின்ற மிகுந்த ஓசையும், (என்னுமிவை), சுந்தரம் முகில் ஒலி தூங்க -
அழகான மேகங்களின் ஓசை ஒடுங்கும்படி, தூங்கும் - (அதனினும்) மிக்கு
ஒலிக்கும்;(எ - று.)

     சிந்துரம்மதகரி - சிந்தூரமென்னும் பெயரையுடைய யானையெனினுமாம்.
சீறும் என்றும் பிரிக்கலாம். தூங்கும் - செய்யுயென்முற்றுப் பலவின்பாலுக்கு
வந்தது. துந்துபி முதலியவற்றின் ஒலிக்குள் மேகத்தின் ஒலி அடங்குமென்று
கூறியது - மறை வணியாம்: வடநூலார் மீலி தாலங்காரமென்பர்.        (144)

145.-அருச்சுனன்முடியில் கற்பகம் பூமாலையிடுதல்.

பத்திகொணவமணி பயின்றுசெந்துகிர்க்
கொத்தொளிர்தளிருடன் குலாவுகற்பகம்
சித்திரவிசயவில் விசயன்சென்னிமேல்
வைத்ததுமுருகவிழ் வாசமாலையே.

     (இ - ள்.) பத்தி கொள் - வரிசையாயிருத்தலைக்கொண்ட,நவமணி -
ஒன்பதுவகை யிரத்தினங்களில், பயின்று - நிறைந்து, செம்