பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்113

(தனது) அழகியதேருடனே, அடைந்தான்-சேர்ந்தான் [அஸ்தமித்தான்
என்றபடி];(எ-று.)

     'அதுகண்டு'என்றதனால்,ஏதுத்தற்குறிப்பேற்றவணி தோன்றுகின்றது.
தேர் என்றது - மண்டலத்தை.  குடக்கு+கடல்=குடகடல்: திசைப்பெயரோடு
பிறபெயர் சேர்ந்தபோது நிலைமொழியின்ஈற்றுயிர்மெய்யும் ககரவொற்றும்
நீங்கின.                                                 (155)

156.-சந்திரோதயவருணனை.

மேலைத்திசைகாலைச்சுடர்வீழ்தந்திடுமுன்னம்
மாலைச்சுடர்காலைத்திசைவாழ்வுற்றிடவந்தான்
சோலைத்தருவருள்வாரிதிசூழ்வான்முகடேறிப்
பாலைப்பொழிவதுபோனிலவொளிகொண்டுபரப்பா.

     (இ-ள்.) காலைசுடர்-காலையிலுதிக்கும்ஒளியாகிய சூரியன், மேலை
திசை - மேற்குத்திக்கில், வீழ்தந்திடும் முன்னம் - விழும் முன்னே,
[அஸ்தமித்தவளவில்],மாலைசுடர் - சாயங்காலத்தில் விளங்கும் ஒளியாகிய
சந்திரன்,-சோலைதரு அருள் வாரிதி சூழ் வான் முகடு ஏறி பாலை
பொழிவது போல்-கற்பகச்சோலையைப்பெற்ற பாற்கடலானது (உலகத்தைச்)
சூழ்ந்துள்ள ஆகாயமுகட்டிலே யேறிநின்று பாலைப்பொழிவதுபோல,
நிலவுஒளி கொண்டு பரப்பா - (தனது) நிலாவாகிய ஒளியைக் கொண்டு
பரப்பி, காலைதிசை - உதயகாலத்திற்கு உரிய கிழக்குத்திக்கில், வாழ்வு
உற்றிட - வாழ்ச்சி பொருந்த, வந்தான் - உதித்தான்;(எ-று).

     பாற்கடல்கடைந்தகாலத்தில் கற்பகவிருட்சமும் காமதேனுவும்
சிந்தாமணியும் முதலியன அதனினின்று தோன்றின.  வாரிதி - நீர்
தங்குமிடம்: வாரி - நீர்: வாரிதி - இங்கே, பாற்கடலைக்காட்டிற்று.
ஒளிகொண்டு பரப்பா - ஒளியாற் பரப்பியென்றும், ஒளியைப்
பரவச்செய்துகொண்டு என்றுமாம்.  வாழ்வுற்றிட - யாவரும் மகிழ்ச்சியடைய
எனினுமாம். பின்னிரண்டடி-தன்மைத்தற்குறிப்பேற்றவணி.       (156)

157.-இதுவும்அடுத்த கவியும் - ஒருதொடர்:உருப்பசி
வேட்கை கொண்டுஅருச்சுனனுள்ள இடத்துக்கு
வருதலைக்கூறும்.

அந்தச்சிலைமகவான்மகனம்மாளிகையிடையே
முந்துற்றதொர்தவிசிற்கரு முகில் போலவிருந்தான்
கந்தர்ப்பன்வெகுண்டேவிய கணைபட்டுளமுருகா
நொந்துற்றுமுனடனம்புரி நுண்ணேரிழையங்கண்.

     (இ-ள்.) சிலை- விற்போரிற் சிறந்த, அந்த மகவான் மகன் -
இந்திரகுமாரனானஅந்த அருச்சுனன், அ மாளிகை இடையே-(இந்திரனால்
தனக்குத் தனியே கொடுக்கப்பட்ட) அவ்வீட்டினிடத்திலே, முந்து உற்றது ஒர்
தவிசில் - முன்னே பொருந்தியதொரு ஆசனத்தில், கரு முகில் போல -
கரிய மேகம்போல, இருந்தான் -