வீற்றிருந்தான்;(அப்பொழுது), முன் நடனம் புரி - முன்னே நர்த்தனத்தைச்செய்து, நுண் நேர் இழை - சூட்சுமமாகவிளங்குகிற (தன் அழகுக்கு) ஏற்ற ஆபரணங்களையுடையஊர்வசி,-கந்தர்ப்பன் வெகுண்டு ஏவிய கணைபட்டு உளம் உருகா - மன்மதன் (கோபித்துத் தன்மேல் அருச்சுனன் விஷயமாக) எய்த பாணங்கள் பட்டதனால்மனங் கரைந்து, நொந்துற்று - (காம வேதனையால்)வருந்தி, அங்கண் - அவ்விடத்தில்,- (எ - று.)-"விசயன்னுழைவந்தாள்"என மேலிற் கவியில் முடியும். நுண்ணேரிடைஎன்றபாடத்துக்கு, நுண் ஏர் இடை எனப் பிரித்து - சிறுத்த அழகிய இடை என்க. முந்துற்ற தொர்தவிசு - சிறப்புப்பெற்றதும் ஒப்பற்றதுமாகிய ஆசனமெனினுமாம். கந்தர்ப்பன் என்பதற்கு - இன்பமயமாகக் கொழுத்திருப்பவனென்று பொருள். உருகுதல் - மிக அன்பு கொள்ளுதல். பட்டு - எச்சத்திரிபு. நுண்ணேரிழை - அன்மொழித்தொகை. மூன்றாமடியில்,கலகக்கணைபடவேஎன்றும் பாடம். (157) 158. | அக்கங்குலினிடையேமல ரரிசந்தனவாசம் மைக்கங்குனிகர்க்குஞ்செறி மலர்நீலமணிந்தாள் உய்க்கும்பருமணிநீலித வுடையாடையுடுத்தாள் மெய்க்குந்தவவயவாளிகொள் விசயன்னுழைவந்தாள். |
(இ-ள்.) அகங்குலின் இடையே - அந்த இராத்திரியிலே, மலர் அரி சந்தனம் வாசம் - விளங்குகின்ற செஞ்சந்தனத்தின் வாசனையான குழம்பையும், மை கங்குல் நிகர்க்கும் செறி நீலம் மலர் - இருளையுடைய இரவை யொக்கின்ற நெருங்கிய நீலோற்பல மலர்மாலைகளையும், அணிந்தாள் - அணிந்தவளாய்,-உய்க்கும்பரு மணி -(ஒளியை) வீசுகின்ற பருத்த நீலரத்தினத்தையொத்த, நீலிதம் உடை ஆடை - நீலநிறமூட்டப்பட்டுள்ள தானுடுத்தற்குரிய சேலையை,உடுத்தாள் - உடுத்துக்கொண்டவளுமாய், மெய்க்கும் தவம் வயம் வாளி கொள் விசயன் உழை - உண்மையான தவத்தினால்வெற்றியைத்தரவல்ல பாசுபதாஸ்திரத்தைப்பெற்ற அருச்சுனனிடத்து, வந்தாள்-;(எ-று.) வந்தாள்என்பதற்கு, முன்செய்யுளிலுள்ள 'நுண்ணேரிழை'எழுவாய். கங்குலினிடை - இரவின்நடு: பாதிராத்திரி. சந்தனவாசம் மலர்நீலம் அணிந்தாள் - சந்தனம் பூசினாள்,மாலைசூடினாள்என வெவ்வேறுவினைகளுக்குஉரிய இரண்டுபொருள்கள் கலந்து வந்து, அணிந்தாள்என்னும் பொதுவினையைக்கொண்டன: [நன்.பொது.38] முன்னிரண்டடிக்கு - அரிசந்தனமென்னுந் தேவதருவினது வீசுகின்ற வாசனையையுடையஇரவையொத்த நெருங்கின நீலநிறமுள்ள மலர்களைச்சூடினாளென்றுங்கொள்ளலாம். மணியென்பதற்கு - இரத்தினாபரணமென்றுஉரைத்து அணிந்தாளென்னும் வினையோடு இயைத்தலுமாம். பருமணிநீலமணிந்தாள் என்றும், புகைநிகர் நீலிதவுடை, பரிமள நீலிதவுடைஎன்றும் பாடம். (158) |