தில் வந்தால், நலன்உளோர் நலன்கள் எல்லாம் - நல்ல ஊழ்வினையுள்ளவர்கள் அனுபவிக்கும் நன்மைகளை யெல்லாம், காண்டி - அடைவாய்; (எ-று.) தேவமானத்தாற் பதின்மூன்றுநாள்கள் கழித்தல்வேண்டுமென்பது முன்னையஏற்பாடு ஆதலால், 'நாள்கழித்து' என்றார்;இதனைக் கீழ்ச்சருக்கத்தில் "அரிவையோடகன்றுநீவிரைவிரு மடவியெய்திச், சுரர்தினமீராறங்கட் டுன்னுதிர் மன்னுநாட்டி, லொருவருமறியாவண்ண மொருதினமுறைதி ருங்கள், பெருவிற லரசும் வாழ்வும் பின்னுறப்பெறுதிரென்றான்," "மறைந்துறைநாளினும்மை மற்றுளோ ரீண்டுளாரென், றறிந்திடின் மீண்டு மிவ்வா றரணிய மடைதி ரென்றான்" எனக் கூறியவாற்றாலும் அறிக. நலன் - நல்லூழுக்கு, ஆகுபெயர். 'நலனுளோர்நலன்களெல்லாம் காண்டி'என்பதற்கு-இப்போது நல்ல செல்வத்தையுடைய துரியோதனாதியரது நன்மைகளையெல்லாம் அழியப் பார்ப்பாயென்றும், உன்னிடத்தில் நல்லநண்புடையவர்கள் செய்யும் நல்லுதவிகளையெல்லாம் பெறுவாயென்றும் பொருள் கூறினுமாம். இதுமுதல் இருபத்தொருகவிகள், இச்சருக்கத்தின் முதற்கவிபோன்ற அறுசீராசிரியவிருத்தங்கள். (16) 17. | அன்னையைச்சுபலன்பாவையருகுறவிருத்தியுங்கள் தன்னையர்தம்மையாக சேனனூர்தன்னில்வைத்துப் பின்னையும்வேண்டுவோரைப் பிரிவுறநெறியிற்போக்கி நன்னயத்தொடுநீர்கானம் வைகுதனன்மையென்றான். |
(இ-ள்.)அன்னையை-(உங்கள்)தாயாகிய குந்திதேவியை, சுபலன் பாவை அருகு உற-சுபலனது மகளாகிய காந்தாரியின் பக்கலிலே யிருக்கும்படி, இருத்தி-வைத்து, உங்கள் தன்னையர் தம்மை-உங்கள் புத்திரர்களை, யாகசேனன் ஊர்தன்னில் வைத்து-யாகசேனனென்னும் பெயரையுடைய துருபதமகாராசனது ஊரில் வைத்துவிட்டு, பின்னைஉம் வேண்டுவோரை-மற்றும் அன்புடையவராகிய உறவினர் முதலானவர்களை, பிரிவு உற-(உங்களைவிட்டுப்)பிரியும்படி, நெறியின் போக்கி-(அவரவர்க்கு உரிய)வழியேஅனுப்பிவிட்டு, நீர்-நீங்கள், நல் நயத்தொடு-நல்ல நீதியுடனே, கானம் வைகுதல்- காட்டில் வசித்தலே, நன்மை-நல்லதாம், என்றான்-என்று அருளிச்செய்தான், (கண்ணபிரான்);(எ-று.) கீழ்க்கவியிலே "கிளைஞர்தமிருக்கைதோறும்"என்று பொதுவாய்க் கூறியதனை இச்செய்யுளில் விசேடித்துக் கூறுகின்றான், இன்னாரின்னாரை இன்னின்ன இடத்து அனுப்பலாமென்ற ஓரெண்ணப் பாகுபாடு தோன்றுதற்கு. நகுலசகதேவர்க்குக் குந்தி தாயன்றாதல் தோன்ற, 'உங்கள்'என்பது 'அன்னை'என்பதனோடு சேர்க்காமல் 'தன்னையர்'என்பதனோடு மாத்திரஞ் சேர்க்கப்பட்டது. பாவை-ஆகுபெயர். தன்னையர்-தநயரென்ற வடசொல் |