பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்121

     (இ - ள்.)அவன் - அக்கந்தருவன், திரு தாள் மலர் போற்றி -
(இந்திரனது) திருவடித்தாமரைமலர்களைவணங்கி, (விடைபெற்றுக்கொண்டு),
அ கொற்றவன் திரு முன்னர் குறுகி-வெற்றியையுடைய அவ்வருச்சுனனது
திருமுன்பே வந்து அடைந்து, ஆங்கு உற்ற யாஉம் உணர்ந்தனன் - அங்கே
நடந்த செய்திகள் எல்லாவற்றையும் அறிந்துகொண்டு, மீண்டுபோய் -
திரும்பிப்போய், சுரர் கோ முன் - தேவராஜனானஇந்திரனது எதிரில்,
தொழுது - வணங்கி, சொற்றனன்-(அவற்றைச்) சொன்னான்;

     மற்று - அசை. அவன்என்பதற்கு - இந்திரனுடைய என்று
உரைத்து, கந்தருவன் எனத் தோன்றாவெழுவாய்வருவித்தலுமாம்.
திருத்தாண்மலர் - ஸ்ரீபாதாரவிந்தம்:திருமுன்னர் - சன்னிதானம். (169)

170.-இந்திரன்தேவர்சூழ்ந்துவர அருச்சுனனை
யணுகுதல்.

சொன்னவாசகங் கேட்டசுரபதி
கன்னம்வெந்து கண்ணாயிரமும்புனல்
துன்னவானவர் சூழ்வரத்தானும்போய்
அந்நராதிபன் றன்னையணுகினான்.

     (இ-ள்.)சொன்ன வாசகம் கேட்ட - (கந்தருவன்) சொன்ன
அவ்வார்த்தையைச் செவியுற்ற, சுரபதி - தேவேந்திரன்-கன்னம் வெந்து -
காதுகள் வெதும்பி, கண் ஆயிரம்உம் புனல் துன்ன-ஆயிரங்கண்களிலும்
நீர்நிறையவும், வானவர் சூழ்வர - தேவர்கள் சுற்றிலும் வரவும், தான்உம்
போய் - தானும் சென்று, அ நரஅதிபன்தன்னைஅணுகினான்-
மனிதர்களுக்கு அரசனானஅவ்வருச்சுனனைஅடைந்தான்;(எ - று.)

     கன்னம் -கர்ணம் என்ற வடமொழித் திரிபு.  கண்ணாயிரமும்-
இனைத்தென்றறிபொருளில்வந்த முற்றுமை.  வெந்து=வேவ:எச்சத்திரிபு.  (170)

171.-தேவேந்திரன்சாபம்விரைவில் நீங்குமென்று
சொல்லி, அருச்சுனனைத்தேற்றுதல்.

அணுகிமைந்தனையன்பொடுறத்தழீஇக்
கணிகையிட்ட கடுங்கொடுஞ்சாபநீ
தணிதியஞ்சலென் றானொருதையலால்
பிணியுழந்துமுன் பேர்பெறும்பெற்றியான்.

     (இ - ள்.)அணுகி - (தனது குமாரனுள்ள இடத்தை) அடைந்து,
மைந்தனை- குமாரனானஅவ்வருச்சுனனை,அன்பொடு உற தழீஇ -
அன்புடனே நன்றாகத்தழுவிக்கொண்டு, 'நீ-,கணிகை இட்ட கடு கொடு
சாபம்-தேவவேசியான ஊர்வசிகொடுத்த மிகவும் கொடிய சாபத்தை, தணிதி
- (விரைவில்) நீங்குவாய்;