174. | அன்னைநீயெவர்க்காயினுமாசையின் இன்னறீர்ப்பதெவர்க்குமியல்பரோ மன்னனாயினும்வான்பிழைசெய்தனன் என்னநாகரவட்கிதங்கூறியே. |
(இ - ள்.)'நீஎவர்க்கு அன்னைஆயின்உம் - நீ யாருக்குத் தாயாயிருந்தாலும், ஆசையின் இன்னல் தீர்ப்பது - (தெய்வமகளாகிய உனது) காமநோயை (க் கலவியால்) தணியச்செய்ய வேண்டுவது, எவர்க்குஉம் இயல்பு - ஆடவர்யாவர்க்கும் இயற்கையாம்;மன்னன் ஆயின்உம் - (அருச்சுனன்) அரசகுலத்தில் தோன்றினவனானாலும்,வான் பிழை செய்தனன் - (இது இயல்பென்று அறியாமல் உன் கருத்தை நிறைவேற்றாமையாகிய)பெரிய தவற்றைச் செய்துவிட்டான்',என்ன - என்று, நாகர் - தேவர்கள், அவட்கு இதம் கூறி - அவ்வூர்வசிக்கு இன்சொற்களைச்சொல்லி,-(எ-று.)-"என்றுவானவர் யாவருமேத்த"என 176-ஆங் கவியோடு தொடரும். முதலடி மூன்றாமடியில்,உம் - உயர்வுசிறப்பு. இரண்டாமடியில் முற்றுப்பொருளது. அரோ -தேற்றமுணர்த்திற்று. (174) 175. | காமமிக்கவுன் கட்டுரைச்சாபநோய் பூமிபொய்ப்பினும்பொய்ப்பதன்றாலரோ வேய்மலர்த்தொடையானெஞ்சில்வேண்டுநாள் ஆமவற்கிவ்வுருவருள்செய்திநீ. |
(இ - ள்.)காமம் மிக்க - புணர்ச்சிவிருப்பம் மிகுந்த, உன் - உனது, கட்டு உரை - உறுதிவார்த்தையாகிய, சாபம் - சாபத்தினாலுண்டாகிய,நோய் - (பேடித்தன்மையாகிய) வியாதி, பூமி பொய்ப்பின்உம் - நிலவுலகத்தார் யாவரும் வார்த்தை தவறினாலும்,பொய்ப்பது அன்று - தவறுவதன்று; (ஆயினும்), வேய் மலர் தொடையான் - சூடின பூமாலையையுடைய அருச்சுனன், நெஞ்சில் வேண்டும் நாள் - மனத்தில் விரும்புங் காலத்தில், அவற்கு இஉரு ஆம்-அவனுக்கு இப்பேடிவடிவம் வரத்தகும்;நீ அருள் செய்தி - நீ (இவ்வாறு) அனுக்கிரகஞ் செய்வாயாக;(எ-று.) முதலிரண்டடிக்கு- சலியாத நிலைமையுடையதாகியபூமி அந்நிலை தவறிச் சலித்தாலும் உன் சாபநோய் நிலைதவறாதுஎன்றும் உரைக்கலாம். காமமாவது - ஒரு காலத்தில் ஒரு பொருளால் ஐம்புலன்களும் அனுபவிக்குஞ்சிறப்புடையதான இன்பம். பொய்ப்பினும் என்ற உம்மை - பொய்யாமை குறித்தலால், எதிர்மறைப் பொருளது. ஆல், அரோ - ஈற்றசைகள். (175) 176.-தேவர்களின்வேண்டுகோளின்படி உருப்பசிஅருள்புரிதல். என்றுவானவர் யாவருமேத்தவே அன்றவற்கவ் வரங்கொடுத்தாளவள் |
|