லின் விகாரம். பண்பியைப் பண்பாகஉபசரித்து, 'வைகுதல்நன்மை' எனப்பட்டது. வைகுதலே நன்மையென்னும் பிரிநிலையேகாரம் விகாரத்தால் தொக்கது. யாகசேனன்-பாஞ்சாலதேசத்தரசன்: திரௌபதியின் தந்தை. (17) 18.- ஸ்ரீக்ருஷ்ணன்மொழிப்படி செய்து கானில்வாழத் தருமன் விரும்பியது. அச்சுதனுரைத்தமாற்ற மறன்சுதன்மகிழ்ந்துகேட்டு மெய்ச்சுதர்முதலாமற்றும் விளம்பியகிளையையெல்லாம் இச்சையின்படியேயாங்காங் கெய்துவித்தீராறாண்டும் அச்சுறுகானில்வைகு மார்வமேயார்வமானான். |
(இ-ள்.)அச்சுதன் - கண்ணபிரான், உரைத்த - சொன்ன, மாற்றம்- வார்த்தையை, அறன் சுதன் - தருமபுத்திரன், கேட்டு-,மகிழ்ந்து-களித்து, சுதர் முதல்ஆ மற்றுஉம் விளம்பிய மெய்கிளையை எல்லாம் - புத்திரர்முதலாக மேலுஞ் சொல்லப்படுகிற தேக பந்துக்களை யெல்லாம், இச்சையின் படி ஏ-(கண்ணபிரானது)விருப்பத்தின்படியே, ஆங்கு ஆங்கு - (அவர்சொன்ன)அவ்வவ்விடங்களில், எய்துவித்து-சேரும்படி யனுப்பிவிட்டு, ஈர் ஆறு ஆண்டுஉம் - பன்னிரண்டு வருஷகாலமும், அச்சுஉறு கானில் வைகும்-பயம்பொருந்திய வனத்தில் வாசஞ்செய்கிற, ஆர்வம்ஏ - விருப்பத்தையே, ஆர்வம் ஆனான்-விருப்பமாக உடையனானான்; இச்சையின்படியே - தன்விருப்பத்தின்படியே யென்றுமாம். அச்சுதன்=அச்யுதன்: (தன்னைச்சரணமடைந்தவர்களை) நழுவவிடாதவனென்றும், அழிவில்லாதவனென்றும் பொருள்படும். மெய்க்கிளை யென இயையும்: உண்மையான அன்பையுடைய பந்துக்களென்றும் பொருள் கொள்ளலாம். மெய்ச்சுதரென இயைத்து- தங்களுடம்பினின்றுந் தோன்றிய புதல்வரென்றலும் ஒன்று. அச்சு=அச்சம்: முதனிலை திரிந்த தொழிற்பெயர். (18) 19.-வந்தவர்யாவரும்தம்தம்நகர்க்குப் போய்விடப் பாண்டவர் தம்வாழிடமாகக் காட்டைக்கொள்ளல். சோனைமாமுகிலின்மேனித் தோன்றலுந்துவரைபுக்கான் ஏனையோர்தாமுந்தத்த மெயிலுடைநகரிபுக்கார் ஞானயோகிகளுமொவ்வா நரேசனுந்தம்பிமாரும் கானமேதாங்களாளுங் காசினியாகக்கொண்டார். |
(இ-ள்.)சோனை - விடாமழைபொழிகின்ற மா-கருமையான, முகிலின் - மேகம்போன்ற, மேனி - திருமேனிநிறத்தையுடைய, தோன்றல்உம் - கண்ணபிரானும், துவரை புக்கான் - (தனது)துவாரகாபுரிக்குச்சென்று சேர்ந்தான்; ஏனையோர் தாம்உம் - மற்ற அரசர் முதலியோரும், தத்தம்- தங்கள் தங்களுடைய, எயில் உடை நகரி-மதில்களையுடைய பட்டணங்களில், புக்கார்-சென்று சேர்ந்தார்கள்; ஞானயோகிகள்உம் ஒவ்வா நரேசன்உம் - தத்துவஞானத் |